- Advertisement -
சமையல் குறிப்புகள்

வாழை பூ வைத்து இப்படி ஒரு சுவையான டிஷ் செய்து கொடுத்தால், வீட்டில் உள்ள அனைவரும் வேண்டும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்

- Advertisement -

வாழைப்பூ என்றாலே அதனை கடைக்குச் சென்று வாங்குவது என்பதே பலரும் செய்வதில்லை. ஏனென்றால் இதில் எந்த ஒரு உணவு வகை செய்தாலும் சற்று துவர்ப்பு சுவையுடன் இருக்கும். எனவே பலரும் இதனை விருப்பமாக சாப்பிடுவதில்லை. ஆனால் இந்த வாழைப்பூவில் மருத்துவ குணங்கள் பல இருக்கின்றது. எனவே வாழைப்பூ கிடைக்கின்ற பொழுதெல்லாம் அதனை சமைத்து சாப்பிடுவது உடல்நலத்திற்கு மிகவும் நன்மை கொடுக்கிறது. வாழைப்பூவில் பொதுவாக கூட்டு, பொரியல் இவை இரண்டு மட்டும் தான் பலரும் செய்கின்றனர். இப்படி செய்யும் பொழுது அதில் நிச்சயம் துவர்ப்பு சுவை தெரியத்தான் செய்யும். எனவே இந்த வாழைப்பூவை இப்படி ஒரு முறை செய்தால் போதும். அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். அப்படி சுவையான ஒரு டிஷ்ஷை வாழைப்பூ வைத்து எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:
வாழைப்பூ – 1, சின்ன வெங்காயம் – 10, பூண்டு – 7 பல், பச்சை மிளகாய் – 4, மோர் – ஒரு டம்ளர், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், இஞ்சி சிறிய துண்டு – 1, முந்திரி – 5, சோம்பு – ஒரு ஸ்பூன், மிளகு – அரை ஸ்பூன், பட்டை சிறிய துண்டு – 1, கிராம்பு – 2, மிளகாய்த் தூள் – அரை ஸ்பூன், தேங்காய் – 4 சில்லு, பொட்டுக்கடலை – 3 ஸ்பூன், உப்பு கால் – ஸ்பூன், எண்ணெய் – கால் லிட்டர், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் வாழைப்பூவை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி, ஒரு கிண்ணத்தில் மோர் சேர்த்து, அதனுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, அதில் நறுக்கிய வாழைப்பூவை போட்டு வைக்க வேண்டும். அப்பொழுதுதான் வாழைப்பூ கருத்துப் போகாமல் இருக்கும். பின்னர் அடுப்பின் மீது கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும்.

பின்னர் வாழைப்பூவை வடிகட்டி எண்ணையில் சேர்க்க வேண்டும். பின்னர் இதில் மூன்று பல் பூண்டை நறுக்கி சேர்க்கவேண்டும். பிறகு மஞ்சள்தூள் மற்றும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து வாழைப்பூ முக்கால் பங்கு வேகும் வரை எண்ணெயிலேயே வதர்க்க வேண்டும். பின்னர் இதனை ஆற வைத்து, ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும். அதனுடன் நான்கு சில்லு தேங்காயை துருவி சேர்க்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் இவற்றுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு இவை அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைக்க வேண்டும். பின்னர் இதனுடன் கிராம்பு, ஏலக்காய், சோம்பு, மிளகு சேர்த்து அவற்றையும் கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் மற்றொரு மிக்ஸி ஜாரில் 3 ஸ்பூன் பொட்டுக்கடலை சேர்த்து அதனையும் சற்று கொரகொரப்பாக அரைத்து வைக்க வேண்டும்.

பிறகு பொட்டுகடலை மற்றும் அரைத்த விழுதையும் ஒரு கிண்ணத்தில் மாற்றி கொண்டு, அதனுடன் அரை ஸ்பூன் மிளகாய்த் தூள் மற்றும் கால் ஸ்பூன் உப்பு சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்துவிட வேண்டும். இதனை சப்பாத்தி மாவு போன்று நன்றாக பிசைந்து கொண்டு, சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்க வேண்டும். பின்னர் அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் உருண்டைகளை எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுத்தால், சுவையான வாழைப்பூ கோலா உருண்டை தயாராகிவிடும். இதனை தக்காளி சாஸூடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அவ்வளவு அருமையாக இருக்கும்.

- Advertisement -