
மனிதர்களுடைய வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சனைகள், கோடான கோடி பிரச்சனைகளை கொடுத்த கடவுள், அந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு உண்டான ஒரு வழியை நமக்கு காண்பிக்க மாட்டானா. அதிலும் முருகனுக்கு உகந்த வளர்பிறை சஷ்டி திதி இன்று. ஜூன் மாதம் முதல் தேதியில் வந்துவிட்டது. இன்று முருகா முருகா என்ற நாமத்தை உச்சரிக்காதவர்கள், துரதிர்ஷ்டசாலிகள்.
முருகா முருகா என்று முருகனை கூப்பிட்டாலே போதும். முருகன் உங்கள் மனதில் வந்து குடியேறி விடுவான். உங்கள் வாழ்வில் இருக்கும் துன்பங்கள் விலக, சந்தோஷம் செல்வ வளம் தனம் தானியம் எல்லாம் வளர்பிறை நிலவு போல வளர்ந்து கொண்டே செல்லும்.
இன்று இரவு தூங்க செல்வதற்கு முன்பு செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த வழிபாட்டை செய்துவிட்டு இந்த மந்திரத்தை உச்சரித்துவிட்டு, தூங்க செல்லுங்கள். முருகப்பெருமான் உங்களுக்கு ஒரு கையால் ஆசீர்வாதத்தை வழங்க மாட்டார். அவருடைய 12 கரங்களில் உங்களுக்கான ஆசீர்வாதம் கிடைக்கும். 12 கரங்களால் உங்களுக்கான செல்வத்தை வாரி வாரி கொடுக்க போகின்றான் முருகன். இத்தனை சிறப்பு வாய்ந்த வழிபாட்டையும் மந்திரத்தையும் தெரிந்து கொள்ள யாருக்குத்தான் இஷ்டம் இருக்காது. சரி பதிவிற்குள் பயணம் செய்வோமா.
கஷ்டமான வேலை எதுவுமே இல்லைங்க. இரவு தூங்க செல்வதற்கு முன்பு, முகம் கை கால்களை கழுவிக்கொண்டு, பூஜையறையை திறந்து அந்த அழகான முருகன் முகத்தை பார்த்து வணங்கிக் கொள்ளுங்கள். முருகன் உங்கள் இதய கோவிலில் எப்போதும் குடி இருக்க வேண்டும். பிறகு பின் சொல்லக்கூடிய இந்த மந்திரத்தை 27 முறை சொல்லுங்கள்.
திரு சுழி குகன் பவனே !
மந்திரம் இவ்வளவுதான். உங்கள் வாழ்நாளில் எவ்வளவு பெரிய பண பிரச்சனை இருந்தாலும் சரி, அது சரியாக வேண்டும் என்றும் பிரார்த்தனை வைக்கலாம். உங்களுக்கு தேவையான பணம் அடுத்த ஒரு சில நாட்களில் உங்கள் கையை வந்து சேரும். அதற்கான முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ளுங்கள். முயற்சிகளில் வரும் தடைகளை தகப்பதற்கான வேலையை நம் அப்பன் முருகப்பெருமான் பார்த்துக் கொள்வான்.
இதையும் படிக்கலாமே: சகல செல்வமும் பெற்று சிறப்பாக வாழ முருகன் மந்திரம்
அழகான மந்திரம், அழகான முருகன் வழிபாடு. மாத துவக்கத்திலேயே நாம் துவங்கி விடப் போகின்றோம். தினமும் தூங்க செல்லும் போது இந்த மந்திரத்தை சொல்லலாம். செவ்வாய்க்கிழமை விளக்கு போடும்போது இந்த மந்திரத்தை சொல்லலாம். மயில் மீது வேகமாக முருகன் பறந்து வந்து, உங்களுடைய பிரச்சனையை தீர்த்து வைத்து விடுவான். அருமையான இந்த நாளில் ஆன்மீகம் சார்ந்த இந்த தகவலை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மனமகிழ்ச்சியுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.