- Advertisement -

11 வாரத்தில் நல்ல வேலை கிடைக்க லட்சுமி நரசிம்மர் வழிபாடு

- Advertisement -

வேலைக்காக முயற்சி செய்து கொண்டே இருக்கின்றேன். ஆனால், எனக்குப் பிடித்த வேலை கைநழுவிக்கொண்டே செல்கிறது. எத்தனை முறை முயற்சி செய்தாலும் அந்த வேலையை பிடிக்க முடியவில்லை என்று சொல்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். அரசாங்க வேலைக்காக முயற்சி செய்து தேர்வு எழுதி எழுதி காத்துக் கொண்டிருக்கிறேன்.

நல்ல ரிசல்ட் வரவில்லை என்று காத்துக் கொண்டிருப்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். எந்த வேலைக்கும் போகாம வீட்ல சும்மாதான் இருக்கேன். ஏதாவது ஒரு வேலை கிடைச்சாலும் பரவால்ல அப்படின்னு நினைக்கிறவங்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். ஆக மொத்தத்தில் பணம் சம்பாதிக்க, நல்ல வேலை, நல்ல சம்பளம் அதற்கான ஒரு வழியை காட்டிக் கொடுக்கும் ஆன்மீகம் சார்ந்த வழிகாட்டி இதோ உங்களுக்காக.

- Advertisement -

நல்ல வேலை கிடைக்க ஏற்ற வேண்டிய விளக்கு

11 சனிக்கிழமை இந்த விளக்கு ஏற்ற வேண்டும். காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் சனிக்கிழமை சனி ஹோரை வரும். கட்டாயமாக அந்த நேரத்தில் தான் இந்த விளக்கை ஏற்ற வேண்டும். லட்சுமி நரசிம்மர் கோவிலில் இந்த விளக்கை ஏற்ற வேண்டும். சில பெருமாள் கோவில்களில் லட்சுமி நரசிம்மருக்கு என்று தனி சன்னிதானம் இருக்கும்.

அப்படி ஒரு தனி சன்னிதானம் இருந்தாலும் அங்கு சென்று இந்த விளக்கை நீங்கள் ஏற்றலாம். ஒரு வேலை உங்களுடைய வீட்டுக்கு பக்கத்தில் லட்சுமி நரசிம்மர் கோவிலில் இல்லை, சன்னிதானமும் இல்லை என்ன செய்வது. வீட்டு பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று இந்த விளக்கை போடலாம்.

- Advertisement -

தொடர்ந்து 11 வாரம் சனிக்கிழமை லட்சுமி நரசிம்மர் சன்னிதானத்திற்கு முன்பாக 16 அகல் விளக்குகளின் நெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்து மனதார பிரார்த்தனை செய்து கொண்டு அந்த சன்னிதானத்திலேயே அமர்ந்து மகாலட்சுமி அஷ்டோத்திரம் படிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் உங்களுக்கு தெரிந்த மகாலட்சுமியின் போற்றிகள் மந்திரங்கள் ஏதாவது சொல்லுங்கள்.

விளக்கு ஏற்றி வைத்துவிட்டு அந்த சன்னிதானத்தில் அமர்ந்து கொண்டு இந்த மந்திரத்தை சொல்லும் போதும். உங்களுடைய உள்ளங்கைகளில் கொஞ்சம் கல்கண்டு வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சின்ன பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு கல்கண்டை வைத்துக் கொண்டாலும் சரிதான். ஏனென்றால் உள்ளங்கைகளில் வைத்தால் பிசுபிசுவென தண்ணீர் விட்டு ஓட்ட தொடங்கிவிடும்.

- Advertisement -

மந்திரத்தை சொல்லி முடிப்பதற்குள் உங்களுக்கு கொஞ்சம் சிரமம் இருக்கும் என்பதால் டப்பாவில் கல்கண்டை போட்டு வைத்துக் கொள்ளுங்கள். மந்திரத்தை சொல்லி முடித்துவிட்டு வீடு திரும்பும் போது அந்த கல்கண்டை எறும்புகளுக்கு இறையாக போட்டு விட வேண்டும். கோவிலுக்கு வெளியில் மரம் இருந்தால் அந்த மரத்தடியில் இந்த கல்கண்டை போடலாம். இவ்வளவுதான் பரிகாரம்.

11 வாரம் நம்பிக்கையோடு இந்த விளக்கை ஏற்றினால் அந்த 11 வாரம் சனிக்கிழமை முடிவதற்குள் நீங்கள் நினைத்த வேலையை கையில் வாங்கிவிடலாம். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும், சம்பள உயர்வு கிடைக்கும், பதவி உயர்வு கிடைக்கும். நீங்கள் வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு போகக்கூடிய வழியை காட்டிக் கொடுக்க இந்த பரிகாரமே போதுமானது. நம்பிக்கையோடு செய்யணும். 11 வாரத்தில் இடையில் ஒரு வாரம் கூட தவறவிடக்கூடாது.

இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சனையிலிருந்து வெளிவர துர்க்கை அம்மன் மந்திரம்

பெண்களுக்கு மட்டும் அந்த மாதவிடாய் நாட்கள் வரும் சனிக்கிழமை ஒரு இடைவெளி வரும். அந்த நாட்களை தவிர்த்து விட்டு அடுத்த வாரத்தில் நீங்கள் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். மற்றபடி வேறு ஏதாவது காரணத்திற்காக விளக்கு போடுவதை தடை செய்யக்கூடாது. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் வெளியில் ஏதாவது ஒரு வெளியிடங்களுக்கு சென்றாலும் அங்கு இருக்கும் பெருமாள் கோவிலில் இந்த விளக்கை ஏற்றலாம் தவறு கிடையாது. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த வழிபாட்டை செய்து பலன் பெறவும்.

- Advertisement -