இன்று செவ்வாய்க்கிழமை. அதிலும் ஆடி மாத செவ்வாய் கிழமை. இன்னொரு வகையில் பார்த்தால் முருகருக்கு உகந்த நாள், செவ்வாய்க்கிழமை, செவ்வாய் பகவான்தான் நம்முடைய கடன் பிரச்சனைகளுக்கு எல்லாம் காரணமாக இருக்கின்றார். அம்பாள், முருகர், செவ்வாய் பகவான், இன்று கிருத்திகையும் இருக்கிறது இப்படி ஒட்டுமொத்தமாக நேர்மறை ஆற்றல் நிறைந்த இந்த நாளில் நம் கடன் பிரச்சனையில் இருந்து வெளிவர செய்ய வேண்டிய ஒரு ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை பார்த்து விடுவோமா.
கடன் தீர்க்கும் மந்திரம்
நம் கடன் பிரச்சனையிலிருந்து வெளிவர வேண்டும் என்றால் அந்த அம்பாளின் அனுக்கிரகமும், செவ்வாய் பகவானின் அனுகிரகமும், முருகனின் அருள் ஆசியும் கட்டாயமாக தேவை. இந்த நாளை யாரும் தவற விடாதிங்க. இன்று வரக்கூடிய ராகு கால நேரத்தில் தான் கட்டாயம் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.
வேலைக்கு செல்பவர்கள் வெளியில் இருப்பவர்கள் எல்லாம் இதற்கு மாறாக வேறு ஒரு நேரம் கொடுங்கள் என்று சொன்னால் அது நிச்சயம் முடியாது. செவ்வாய்க்கிழமை ராகு கால நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்யும் போது மட்டுமே 100% பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. செவ்வாய்க்கிழமை மதியம் 3:00 மணியிலிருந்து 4:30 மணி வரை ராகு கால நேரம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு தாம்பூல தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு எத்தனை நபரிடம் கடன் இருக்கிறதோ, அத்தனை பிரியாணி இலை தேவை. 5 பேரிடம் கடன் இருக்கிறது என்றால், 5 பிரியாணி இலை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பிரியாணி இலையில் யாரிடம் கடன் வாங்கி இருக்கிறீர்களோ அவர்களுடைய பெயர், எவ்வளவு கடன் தொகை இருக்கிறதோ, அந்த தொகை, வங்கியில் கடன் வாங்கி இருந்தால் அந்த வங்கியின் பெயர், தொகை, நகையை அடமானம் வைத்திருந்தால் நகை அடமானம் வைத்த கடையின் பெயர், அடமானத்தில் இருக்கும் தொகை இப்படி விவரங்களை எழுதி, அந்த தாம்பூல தட்டில் வைத்து விடுங்கள். அதன் மேலே ஒரு கட்டி கற்பூரத்தையும் வைத்து விடுங்கள்.
உங்கள் வீட்டு வரவேற்பறையில் இந்த பரிகாரத்தை செய்யலாம். இந்த தாம்பூல தட்டிற்கு முன்பாக நீங்கள் அமர்ந்து கொண்டு துர்க்கை அம்மனை குலதெய்வத்தை முருகப்பெருமானை மனமுருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். முதலில் ‘ஓம் தும் துர்காயை நமஹ’ என்ற மந்திரத்தை 11 முறை சொல்லுங்கள்.
பிறகு அந்த தாம்பூல தட்டில் இருக்கும் சூடத்தை பொருத்தி விடுங்கள். கற்பூரம் எரிந்து கொண்டிருக்கும். கடன் விவரம் எழுதியிருக்கும் ஒவ்வொரு பிரியாணி இலைகளாக எடுத்து அந்த நெருப்பில் பொசிக்கி விட வேண்டும் பிரியாணி இலைகளை நெருப்பில் போட்டு பொசுக்கும்போது ‘ஓம் ருண நாசினி நமோ நமஹ!’ என்ற மந்திரத்தை மனமுருக, நம்பிக்கையோடு சொல்லுங்கள்.
மந்திரத்தை இத்தனை முறை தான் சொல்ல வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆழ்மனதில் மந்திரத்தை சொல்லிக்கொண்டே பிரியாணி இலை எல்லாம் நெருப்பில் போட்டு பொசுக்கிவிட்டால் உங்கள் அத்தனை கடனும் சீக்கிரம் அடைய தொடங்கிவிடும். எப்படி? வானத்திலிருந்து பணம் கொட்டுமா. அப்படி எல்லாம் கிடைக்காது அந்த மாயவித்தை எல்லாம் நடக்காது.
பிரச்சனைக்கு எந்த ரூபத்தில் இருந்து தீர்வு வரும் என்று தெரியாமல், திக்கு தெரியாமல் தவித்து வந்தவர்களுக்கு ஒரு வழியை துர்கை அம்மன் காட்டிக் கொடுப்பாள். நல்ல வேலை கிடைக்காதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நஷ்டமாக ஓடிக்கொண்டிருக்கும் தொழில் லாபம் பெருகும். வருமானத்திற்கு தடையாக இருக்கக்கூடிய அத்தனை பிரச்சனைகளும் விலகும். வருமானம் செல்வ வளம் பெருக தொடங்கும். கஷ்ட காலத்திற்கு எல்லாம் ஒரு முடிவு கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே: திருமண தடை விலக ஆடி செவ்வாய் துர்க்கை அம்மன் வழிபாடு
பிறகு தானாக உங்களுடைய கடன் பிரச்சனைகள் சரியாகிவிடும். வீட்டு லோன் வைத்திருப்பவர்கள், வாகனம் லோன் வைத்திருப்பவர்கள், கிரெடிட் கார்டில் கடன் இருப்பவர்களும் கூட இந்த பரிகாரத்தை செய்யலாம். சீக்கிரம் கடனை அடைப்பதற்கு உண்டான வழிகளை இந்த பிரபஞ்சம் உங்களுக்கு காட்டிக் கொடுக்கும். ஆடி மாதம் இந்த செவ்வாயில் இந்த பரிகாரத்தை செய்ய முடியவில்லை என்றாலும், வரக்கூடிய ஆடி மாத செவ்வாய் கிழமைகளில் இந்த பரிகாரத்தை பயன்படுத்திக்கொண்டு பலன் பெறவும்.