- Advertisement -
- Advertisement -

சாஸ்திர ரீதியாக சில விஷயங்கள் மனிதர்களின் அறிவிற்கு அப்பாற்பட்டு நன்மைகளுக்காகவே சொல்லப்பட்டுள்ளன. ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து பார்த்தால் தான் அதன் உள்ளர்த்தம் புரியும். அது போலவே சாஸ்திர ரீதியாக ஒருவர் ஆடை இல்லாமல் குளிப்பது சரியா? தவறா? ஏன் ஆடை இல்லாமல் குளிக்கக் கூடாது? என்பது போன்ற வினாக்களுக்கு விடைகளை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ள போகிறோம்.

முந்தைய காலங்களில் ஆறு, குளம் போன்ற பறந்து விரிந்த பகுதிகளில் தான் குளிப்பார்கள். அரைகுறை ஆடையோடு சென்று நீராடி விட்டு வருவார்கள். அப்படி நீராடும் பொழுது விஷப்பூச்சிகள் எதுவும் கடிக்காமல் இருக்க, ஆடை இல்லாமல் குளிக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டது. திடீரென ஏதாவது ஒன்று ஆகிவிட்டால் அப்படியே வெளியில் வரவும் முடியாது. அதனால் தான் உள்ளே ஆடைகளை அணிந்து குளிக்க செல்வார்கள். சாஸ்திரம் என்று சொன்னால் தான் நம் மக்கள் ஒவ்வொரு விஷயத்தையும், பக்தியுடன் செய்வது உண்டு. நல்லதுக்கு என்று சொன்னால் யாரும் கேட்பது கிடையாது.

- Advertisement -

ஒரு மனிதன் நிர்வாணமாக குளிப்பது சாஸ்திர ரீதியாக மகா பாவம் ஆகும். நிர்வாணமாக குளித்தால் மகாலட்சுமிக்கும், வர்ண பகவானுக்கும் பிடிப்பதில்லை. கடவுள் எப்போதும் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறார். நிர்வாணமாக குளிப்பவர்களுக்கு தேவையற்ற மன சஞ்சலங்கள் ஏற்படும். இதனால் சிலர் மனரீதியாக பாதிக்கப்படுவார்கள். குடும்பத்திலும் பிரச்சினைகள் வரக்கூடும். இப்பாவம் புரிபவர்களுக்கு தோஷம் உண்டாகும். புண்ணிய நதிகளில் நீராடுபவர்கள், முழு ஆடையுடன் நீராட வேண்டும். அது போல ஆறு, குளம், ஏறி போன்றவற்றில் குளித்தாலும் அரைகுறை ஆடையுடன் ஆவது குளிக்க வேண்டும். வீட்டில் குளிப்பவர்களும் டவல் மட்டுமாவது கட்டிக் கொண்டு குளிக்க வேண்டும்.

எந்த ஆடையும் இன்றி குளிப்பது தோஷத்தை ஏற்படுத்தும் செயலாகும். குளிக்கும் நீர் அதிக குளிராகவும், அதிக சூட்டுடனும் இருக்கக் கூடாது. குளிக்கும் பொழுது நேரடியாக தலைக்கு முதலில் தண்ணீரை ஊற்றக் கூடாது. பாதத்தில் இருந்து ஆரம்பித்து தான் தலையில் தண்ணீரை ஊற்ற வேண்டும். இதனால் உடல் உஷ்ணம் ஆனது வெளியேறும். இல்லாவிட்டால் உடலுக்குள்ளேயே உஷ்ணம் இருந்து கொண்டு பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தும்.

- Advertisement -

குளிக்கும் தண்ணீரில் கொஞ்சம் கல் உப்பு, கொஞ்சம் மஞ்சள், கொஞ்சம் வேப்பிலை கலந்து குளித்தால் சகலவிதமான தோஷங்களும் நீங்கும். சோம்பல் நீங்க சுறுசுறுப்பு உண்டாகும். உடலில் இருக்கும் தீய விஷயங்கள் வெளியேறும். தீய சக்திகள், திருஷ்டி தோஷங்கள் ஒழிந்து போகும். வெளியில் சுற்றி விட்டு வரும் ஆண்கள், வீட்டிற்கு வரும் முன்னர் குளித்துவிட்டு வருவது தான் முறையாகும். வெறுமனே கை, கால் மட்டும் அலம்புவது சரியில்லை.

இதையும் படிக்கலாமே:
ஐப்பசி முதல் நாள் குபேரர் பரிகாரம்

பச்சிளம் குழந்தைகளை வெளியில் வைத்து குளிப்பாட்டினால் ஆடை இல்லாமல் குளிக்க வைக்க கூடாது. இது திருஷ்டியை ஏற்படுத்தும். ஆண்கள் சனிக்கிழமைகளிளும், பெண்கள் வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்து குளிப்பது பல விதமான வியாதிகளை போக்க வல்லது. மனமும், உடலும், குடும்பமும் தூய்மையுடன் பாதுகாப்பாக இருக்க முன்னோர்கள் சொல்படி கேட்டு நடந்தால், எப்பொழுதும் நமது கெட்டது நடக்காது, நன்மைகள் தான் நடக்கும். உங்கள் குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களின் சொல்லுக்கு மரியாதை கொடுத்து செவி சாயுங்கள், வாழ்க்கையில் முன்னேற்றங்களை சந்திக்கலாம்.

- Advertisement -