- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஐப்பசி முதல் நாள் குபேரர் பரிகாரம்

ஐப்பசி முதல் நாள் குபேரர் பரிகாரம்

- Advertisement -

நாளை ஐப்பசி மாதம் முதல் தேதி பிறக்கவிருக்கிறது. ஐப்பசி மாதம் என்றாலே நாம் நினைவுக்கு வருவது தீபாவளி தான். தீபாவளி என்றால் அடுத்து நம் நினைவுக்கு வருவது குபேர பூஜை. இந்த ஐப்பசி மாதம் முழுவதும் குபேரரை நினைத்து வழிபாடு செய்தால், நம் குடும்பத்தில் இருக்கும் பணக்கஷ்டம் நீங்கும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.

பணக்கஷ்டம் நீங்க இந்த ஐப்பசி மாதத்தில் நாம் குபேரரை வசியம் செய்ய ஒரு மூட்டையை தயார் செய்ய போகின்றோம். அந்த மூட்டைக்குள் எந்தெந்த பொருட்களை வைப்பது குபேரரை எப்படி வசியம் செய்வது ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா. குபேரரது திசை என்றால் அது வடக்கு திசை. நாளைய தினம் வடக்கு திசையில், உங்களுடைய வீட்டில் இந்த மூட்டையை வைத்தால், அந்த குபேரர் சுலபமாக உங்கள் வசமாகிவிடுவார்.

- Advertisement -

நாளைய தினம் ஒரு பச்சை நிற சதுர வடிவில் இருக்கும் புது துணியை எடுத்துக் கொள்ளுங்கள். காட்டன் ஜாக்கெட் பிட் இருந்தால் கூட பரவாயில்லை. அதை வெட்டி பரிகாரத்திற்கு பயன்படுத்தலாம். ஆனால் அந்த துணி புதுசாக இருக்க வேண்டும். அதில் ஒரு கைப்பிடி அளவு அவல், 2 ஏலக்காய், 2 கிராம்பு, ஒரே ஒரு 5 ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும். குபேரருக்கு நாணயங்கள் என்றால் ரொம்ப பிடிக்கும்.

பண வசியத்தை கொடுக்கக் கூடியது ஏலக்காயும், கிராம்பும். அவல் குபேரர் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பொருள். அதிலும் சம்பா அரிசியில் செய்யப்பட்ட அவல் குபேரருக்கு ரொம்ப ரொம்ப விருப்பமான நெய்வேதியமாக சொல்லப்பட்டுள்ளது. அந்த அவல் கிடைத்தால் ஒரு கைப்பிடி கொண்டு வந்து இந்த பச்சை துணியில் வையுங்கள்.

- Advertisement -

இப்போது அந்த பச்சை துணியை அப்படியே மூட்டையாக கட்டி விடுங்கள்.(ஐப்பசி மாதம் முழுவதும் வரக்கூடிய வியாழக்கிழமையில் குபேரருக்கு இந்த சிவப்பரிசி அவல் நெய்வேதியமாக வைத்து வீட்டில் வழிபாடு செய்தால் உங்கள் வீட்டில் செல்வ செழிப்பு பல மடங்கு உயரும் இதையும் தெரிஞ்சு வச்சுக்கோங்க).

குபேரரை மனதார நினைத்து எங்கள் வீட்டில் இருக்கக்கூடிய செல்வ வளம் பல மடங்கு உயர வேண்டும், மேலும் மேலும் வருமானம் உயர வேண்டும், குபேரர் எங்கள் வீட்டில் நிலையாக தங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து, இதை முடிச்சாக கட்டி உங்கள் வீட்டு வடக்கு சிசையில் வைக்க வேண்டும். நாளைய தினம் வடக்கு திசையில் வைத்த இந்த முடிச்சிக்கு தினம்தோறும் ஊதுவத்தி காண்பிக்க வேண்டும்.

- Advertisement -

பூஜையறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, குபேரை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். குபேரனின் அருள் வருடம் முழுவதும் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று இந்த ஐப்பசி மாதம் வேண்டுதல் வைத்தால், அது அப்படியே பலிக்கும். ஐப்பசி மாதம் முழுவதும் இந்த பச்சை கலர் மூட்டையானது உங்கள் வீட்டு வடக்கு திசையிலேயே, குபேரர் மூலையிலேயே இருக்கட்டும். அதை அப்படியே விட்டு விடுங்கள். அந்த குபேரரே வந்து உங்கள் வீட்டு வடக்கு திசையில் அமர்ந்து கொண்டதாக அர்த்தம்.

ஐப்பசி மாதம் முடிந்ததும், அந்த முடிச்சை எடுத்து அவிழ்த்து, அந்த அவலை எடுத்து காக்கை குருவிகளுக்கு இரையாக போட்டு விடுங்கள். உள்ளே இருக்கும் ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து பீரோவில் வையுங்கள். இந்த ஐந்து ரூபாய் நாணயத்தின் மூலம் உங்கள் வீட்டு பீரோவில் குபேரரே வந்து அமர்ந்து கொண்டதாக அர்த்தம். மீதம் இருக்கும் ஏலக்காய் கிராம்பு எல்லாவற்றையும் காக்கை குருவிகளுக்கு நீங்கள் இரையாக போட்டுவிடலாம். இவ்வளவுதான் பரிகாரம்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் மருதாணி பூ தீபம்

நாளைய தினம் எந்த வீட்டில் குபேரரது மூலையில், குபேரருக்கு விருப்பமான இந்த பொருட்கள் எல்லாம் இருக்கிறதோ, அந்த வீட்டுக்கு குபேரரின் அருள் கிடைக்கும். இதுதான் இந்த பரிகாரத்தில் மறைந்திருக்கும் சூட்சமம். நம்பிக்கை இருந்தால் நீங்களும் இதை பின்பற்றலாம். நல்லதே நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்