- Advertisement -

ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி அன்று கூற வேண்டிய மந்திரம்

- Advertisement -

அஷ்டமி என்றதுமே நம் நினைவிற்கு வருபவர் காலபைரவர் தான். காலபைரவர் எந்த அளவிற்கு அஷ்டமிக்கு உகந்தவரோ அதே போல் தான் வாராகி அம்மனும் அஷ்டமி திதி அன்று உகந்த தெய்வமாக கருதப்படுகிறார். ஆவணி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி என்பது மேலும் ஒரு படி உயர்வாக இருக்கும். அதற்கு காரணம் அன்று கிருஷ்ண ஜெயந்தியும் கூட. அதாவது கோகுலாஷ்டமி. இந்த அஷ்டமி திதியில் தான் கிருஷ்ணர் அவதரித்தார் என்பதால் அன்றைய தினம் கிருஷ்ணரையும் வழிபாடு செய்வார்கள் என்பது கூடுதல் சிறப்பு. அப்படிப்பட்ட கிருஷ்ண ஜெயந்தி உடன் சேர்ந்து வரக்கூடிய அஷ்டமி திதி அன்று நாம் கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி

நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் அனைத்தையும் நீக்கி நல்வழிப்படுத்துவதற்கு காலபைரவர் வழிபாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. தீராத துன்பத்தில் கஷ்டப்பட்டு கொண்டு அதிலிருந்து வெளியில் வர முடியாமல் தவிப்பவர்கள் காலபைரவரை முழுமனதோடு வழிபாடு செய்தால் அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் படிப்படியாக குறையும் என்பது அனுபவபூர்வமாக பலரும் கண்ட உண்மை. இதே போல் தான் வாராகி அம்மனுக்கு நாம் வழிபாடு செய்யும்பொழுது பல அற்புதமான நன்மைகள் நமக்கு கிடைக்கும். இவர்கள் இருவரையும் ஒருசேர நாம் வழிபட்டோம் என்றால் நம் வாழ்வில் சொல்ல முடியாத அளவிற்கு நன்மைகள் உண்டாகும். கஷ்டங்கள் அனைத்தும் தேய்பிறை போல தேய்ந்து கொண்டே சென்று விடும்.

- Advertisement -

பொதுவாக அஷ்டமி தினத்தன்று அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று நம்மால் இயன்ற அளவு அபிஷேகப் பொருட்களை வாங்கி காலபைரவருக்கு தரவேண்டும். அன்றைய தினம் அவருக்கு அபிஷேகங்கள் நடைபெறும். அந்த அபிஷேகங்களில் கலந்து கொண்டு அவருக்கு நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்வது என்பது சிறப்பு. ஒரு சிலர் நல்லெண்ணெய் தீபமும் ஏற்றி வைத்து வழிபாடு செய்வார்கள்.

தங்களுடைய பிரச்சினைகளுக்கு ஏற்றவாறு பூசணிக்காயில் தீபம், தேங்காய் தீபம் என்று பல தீபங்களை ஏற்றி கால பைரவரை வழிபாடு செய்வார்கள். நம்மால் எதை செய்ய முடியுமோ அதை முழு மனதோடு செய்தாலே காலபைரவரின் அருள் என்பது நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். பொருட்கள் வாங்கி தர இயலாதவர்கள் ஒரே ஒரு எலுமிச்சம் பழத்தை மட்டும் ஆவது காலபைரவருக்கு வாங்கி கொடுத்து அவரின் பாதங்களில் வைத்து வழிபாடு செய்வது என்பது மிகவும் விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது.

- Advertisement -

இதே போல் தான் வாராகி அம்மனுக்கும் நம் வழிபாடு மேற்கொள்ள வேண்டும். இன்றைய தினத்தில் நாம் இந்த மந்திரத்தை காலபைரவரை நினைத்து மனதார எட்டு முறை கூறினாலே நம்முடைய கடன் பிரச்சினைகள் தீரும், அடமானத்தில் இருக்கக்கூடிய நகைகளை நம்மால் மீட்டெடுக்க முடியும், அந்த அளவிற்கு நமக்கு செல்வ வளம் உயரும். இதே போல் வாராகி அம்மனுக்கும் நம் மந்திரம் கூறி வழிபாடு செய்யலாம்.

காலபைரவர் மற்றும் வாராகி அம்மனின் மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சொர்ண ஆகர்ஷண பைரவாய ஹும்பட் ஸ்வாஹா

- Advertisement -

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வர்ண வாராஹி யே ஹும்பட் ஸ்வாஹா

இதையும் படிக்கலாமே:வேதனைகளை தீர்க்கும் வேப்பிலை தீபம்

இன்று இந்த மந்திரத்தை கூற இயலாதவர்கள் நாளை காலை எட்டு மணிக்குள் இந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்ய அனைத்து பலன்களும் கிடைக்கும் காலபைரவரை வழிபாடு செய்பவர்களாக இருந்தாலும் வாராகி அம்மனை வழிபாடு செய்பவர்களாக இருந்தாலும் மேற்சொன்ன இந்த மந்திரத்தை முழுமனதோடு அவர்களை நினைத்து இன்றைய தினம் கூறும் பொழுது நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் தேய்ந்து நல்ல நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -