- Advertisement -
மந்திரம்

அபிராமி துதி

ஆசைகள் இல்லாத மனிதர்களே இந்த உலகில் நிச்சயம் இருக்க முடியாது. ஒரு வகையில் பார்க்கும் போது பலருக்கும் இந்த ஆசை அவர்களின் வாழ்க்கைக்கு உந்து சக்தியாக இருக்கிறது. ஆசைகள் தீவிரமாகும் போது அவை விருப்பங்களாக மாறுகின்றன. நமது நியாமான விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் தெய்வம் அன்னை அபிராமி ஆவாள். அந்த அன்னையின் புகழை கூறும் அபிராமி அந்தாதி மந்திர பாடல் வரிகள் இதோ

அபிராமி துதி

பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்
தவளத் திரு நகையும் துணையா, எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது, துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணிமின் கண்டீர், அமராவதி ஆளுகைக்கே

- Advertisement -

திருக்கடையூர் கோவிலில் வீற்றிருக்கும் அன்னை அபிராமி மீது அவரின் தீவிர பக்தரான அபிராம பட்டர் அவர்களால் அபிராமி அன்னை மீது இயற்றப்பட்ட துதி இது. இந்த அபிராமி துதியை தினந்தோறும் காலையிலோ அல்லது நேரம் கிடைக்கும் போதெல்லாம் துதித்து வருவது சிறப்பு. “நவராத்திரி” விழாவின் இறுதியில் வரும் “விஜயதசமி” அன்று அபிராமி தேவியை வணங்கி இத்துதியை 108 அல்லது 1008 முறை ஜெபித்து வணங்கினால் உங்களின் எத்தகைய நியாயமான விருப்பங்களும் நிறைவேறும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் பொருளாதார நிறைவும், மன நிறைவும் ஏற்படும்.

உலகிற்கே சக்தி அளிக்க கூடியவளும், நம்மிடமிருக்கும் தீமைகளை அழிப்பவளுமாகிய பார்வதி தேவி கருணை நிறைந்தவளாக அபிராமி அன்னையாக திருக்கடையூரில் வீற்றிருக்கிறாள். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு திருக்கடையூரில் வாழ்ந்து வந்த அபிராமி அன்னையின் தீவிர பக்தராக வாழ்ந்த அபிராம பட்டர் அந்த அபிராமி அன்னையின் மீது இயற்றிய பாடல் தொகுப்பு தான் “அபிராமி அந்தாதி”. இறைசக்தி மிகுந்திருக்கும் அபிராமி சந்ததியின் இப்பாடல் வரிகளை துதித்து வருவதால் நமது விருப்பங்கள் அனைத்தும் அபிராமி அருளால் நிச்சயம் நிறைவேறும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
கலைமகள் துதி

இது போன்று மேலும் பல மந்திரங்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Abirami thuthi in Tamil. It is also called as Abirami pattar song in Tamil or Abirami mantra in Tamil or Abirami manthiram in Tamil.

- Advertisement -