கலைமகள் துதி

kalaimagal-compressed

மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் கல்வி அறிவு பெற வேண்டும். அத்துடன் மனதிற்கு இதமளிக்கும் நமது சிந்தனைகளையும், உணர்வுகளையும் மேம்படுத்தும் ஏதேனும் ஒரு கலையை நிச்சயம் கற்க வேண்டும். என்ன தான் கல்வி, கலைகளை கற்றாலும் அதில் தனித்தன்மை பெறவும், புதுமைகளை படைக்கவும் கல்விக்கடவுள் கலைமகளான “சரஸ்வதி” தேவியின் அருள் வேண்டும். அதை பெறுவதற்கான கலைமகள் துதி இதோ

saraswathi 1

கலைமகள் துதி

சரஸ்வதி என் தலையைக் காக்க! வாக்கின்
தலைவியாம் வாக்தேவி நுதலைக் காக்க!
விரசு பகவதி கண்ணைக் காக்க!
நாசி விமலை வாக்வாதினியாள் காக்க!
வித்தைக்கு உரிய தனித் தேவதை என் உதடு காக்க!
உயர் புகழ்ப் பிராம்மி பல் வரிசை காக்க!
மருவும், ஐம், என்றிடுமனு கண்டம் காக்க!
வாழ் ஹ்ரீமாம் எழுத்து என்றன் பிடரியைக் காக்க!

எழுத்தான ஸ்ரீம் எந்தோள் காக்க! வித்யா திருஷ்டாத்மா
என் மார்பில் இருந்து காக்க! எழுத்து வித்யா ரூபிணி
என் நாபி காக்க! வாணி கரம் காக்க! எல்லா எழுத்தின்
தேவி விழுத்தக என் அடி காக்க!
வாக்கிற் சென்று மேய அதிட்டான தேவதைதான்
என்றான் மழுத்த உறுப்பு எவற்றினையும் காக்க! காக்க!
முன் கிழக்கில் சர்வகண்ட நாசி காக்க!
அங்கியெனும் திசைக்கண்ணே நின்று பீஜாட்சரி காக்க!

saraswathi 2

மந்திரராஜத்தின் தேவி பொங்கு தெற்கிலேயிருந்து காக்க!
காக்க! புகல்மூன் அக்கரவிருவாள் நிருதி திக்கில்
தங்கியெனைப் புரந்து அருள்க! மேற்குத் திக்கில்
சாற்று நாநுனியுறையும் அன்னை காக்க!
துங்கமிகு சர்வாம்பிகைதான் வாயு துன்னு திசையில்
என்னைக் காக்க! சத்யவாகினி வடக்கில் காக்க! எல்லா
கலையினிலும் உறைவாள் ஈசானம் காக்க! நத்து சர்வ
பூசிதையாள் ஊர்த்துவத்தில் நயந்திருந்து காத்தருள்க!

- Advertisement -

அதோமுகத்தில் புத்தகவாசினியாகும் தேவி காக்க!
புகழ் கிரந்த பீஜத்தின் உருவாய் நின்றாள்
எத் திசைகளிலும் இருந்து காக்க! காக்க!
எளியேனைக் கலைமகள் தான் என்றும் காக்க! காக்க!

Goddess Saraswathi

சரஸ்வதி தேவியாகிய கலைமகளை போற்றி இயற்றப்பட்ட துதி இது. இத்துதியை தினமும் காலையிலும், உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் துதித்து வருவது சிறந்தது. புதன் கிழமைகளில் காலையில் வீட்டில் சரஸ்வதி படத்திற்கு முன்பு விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி, மல்லிகை பூக்களை சமர்ப்பித்து இந்த கலைமகளை மனதில் தியானித்து இத்துதியை படிவந்தால் கல்வியில் சிறக்க முடியும். ஞாபக சக்தி அதிகரிக்கும். ஓவியம், நடனம், இசை, சிற்பம் இன்ன பிற கலைகளை பயிற்சி செய்பவர்கள் அதில் தனித்துவம் பெற்று புகழ் பெறுவார்கள்.

Goddess Saraswathi

மிக்க பல கல்வி கற்று பண்டிதர்களாக இருப்பவர்களை இறைவனுக்கு நிகராக பாவித்தனர் நமது முன்னோர்கள். கல்வி அறிவு ஒரு மனிதனின் பரிமாணத்தை மேம்படுத்துகிறது. அத்தகைய கல்வி மற்றும் கலைகளுக்கு அதிபதியாக இருப்பவள் சரஸ்வதி ஆன கலைமகள். செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமி அனைவரின் மீதும் சுலபத்தில் தனது கடாட்சத்தை அருள்வாள். ஆனால் கலைமகள் இறக்கின்ற வரையில் புதியனவற்றை கற்பதில் தணியாத தாகம் கொண்டவர்களின் மீது மட்டுமே தனது கருணையை பொழிவாள். அந்த கலைமகளின் முழுமையான அருளை நமக்கு கொடுக்கும் துதி இது.

இதையும் படிக்கலாமே:
பெருமாள் 108 போற்றி

இது போன்று மேலும் பல மந்திரங்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Kalaimagal thuthi in Tamil. It is also called as Saraswathi mantra in Tamil or Saraswathi manthiram in Tamil or Saraswathi thuthi in Tamil