- Advertisement -
மந்திரம்

அடகு நகை மீட்க மந்திரம்

- Advertisement -

பணம் எப்படி கடனாக மாறி நமக்கு பெரும் சுமையாக மாறுகிறதோ, அதே போல் இந்த நகையும் நம்முடைய தேவைக்கு அடகு வைத்து அதுவும் நகைக் கடனாக மாறி நம்மை நெருக்கி விடும். பணத்தை கடனாக வாங்குவதை விட கொடுமை கையில் இருக்கும் நகை அடமானம் வைப்பது. ஏனெனில் ஒவ்வொருவரும் நகையை வாங்கும் போது அத்தனை ஆசையாக தான் வாங்கியிருப்பார்கள்.

அதை ஒவ்வொரு நாளும் அணியும் போதும் அத்தனை பெருமிதமாக அணிந்து கொள்வார்கள் அதை எந்த காரணத்திற்காக அடகு வைத்தாலும் கட்டாயம் மனம் வலிக்கத்தான் செய்யும். இந்த அடகு நகைகளை எளிதில் வீட்டிற்கு கொண்டு வர செய்யக்கூடிய ஒரு பரிகார முறை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

அடகு நகையை மீட்க மந்திரம்

இந்த பரிகாரத்திற்கு நாம் அடகு வைத்த நகையின் ரசீது கட்டாயமாக தேவை. அதை நீங்கள் பேங்கில் வைத்திருந்தாலும் சரி, அடகு கடையில் வைத்திருந்தாலும் ரசீது வேண்டும். ரசீதின் ஓரத்தில் ஒரே ஒரு புள்ளி மஞ்சளும் குங்குமம் வையுங்கள் அதிக அளவு வைத்து விடாதீர்கள்.

அடுத்து உங்கள் பூஜை அறையில் ஒரு இடத்தை சுத்தம் செய்து கொள்ளுங்கள். அங்கு இந்த அடகு வைத்த ரசீதை வைத்து விடுங்கள். அதன் மேல் ஒரு காகிதமோ அல்லது மஞ்சள் சிகப்பு நிறத்திலான துணியை போடுங்கள் ஏனெனில் ரசீது மீது எந்த வித அழுக்கோ எண்ணையோ படக்கூடாது அதற்காகத் தான்.

- Advertisement -

இப்பொழுது ரசீதின் மீது வைத்திருந்த பேப்பர் அல்லது துணியின் மீது ஒரு சிறிய தாம்பாள தட்டை வையுங்கள். அதன் மேல் பச்சைக் கற்பூரத்தை தூள் செய்து பரப்பி விடுங்கள் இப்போது ஒரு அகல் விளக்கில் நெய் ஊற்றி திரி போட்டு கிழக்கு நோக்கி தீபம் ஏற்றுங்கள். இந்த தீபத்தின் பக்கத்தில் ஒரு டம்ளர் சுத்தமான தண்ணீர் வைத்து விடுங்கள்.

இந்த தீபத்தின் முன்பாக நீங்கள் வடக்கு நோக்கி அமர்ந்து அடகில் இருக்கும் என்னுடைய நகையை விரைவில் மீட்க வேண்டும் என்று மூன்று முறை வாய் விட்டு சொல்லுங்கள். அதன் பிறகு ஓம் என்ற மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை சொல்லி முடித்த பிறகு விளக்கிற்கு கற்பூர தீபாராதனை காட்டி பூஜையை முடித்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: பண வரவை அதிகரிக்க லட்சுமி நாராயணர் வழிபாடு

அதன் பிறகு இந்த தட்டையும் அகலையும் தனியாக எடுத்து வைத்து விடுங்கள். ரசீதை எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். இது போல மாதம் ஒரு முறை செய்து வந்தால் அடகில் இருக்கும் உங்கள் நகை விரைவில் வீடு வந்து சேர்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை இருப்பவர்கள் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -