
ஐப்பசி மாதம் துவங்குவதற்கு முன்பே மழை நம்மை மிரள வைக்கிறது. இன்னும் இந்த ஐப்பசி மாதம் முடிவதற்குள் நமக்கு பெருசாக எந்த ஆபத்தும் வந்து விடக்கூடாது என்றால், நாம் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன. இறைவனின் பாதத்தை விடாமல் பற்றிக்கொள்ள வேண்டும். எவ்வளவு பெரிய இயற்கை சீற்றத்தின் ஆட்டமாக இருந்தாலும், சரி அதை கட்டுக்குள் கொண்டு வரக்கூடிய ஒரே சக்தி இறைசக்தி மட்டும்தான். இறைவனை மட்டும் நம்புவோம்.
ஆழ்ந்த பிரார்த்தனை வைப்போம். நிச்சயம் நமக்கு எந்த ஆபத்து வராது. அந்த வகையில் இந்த ஐப்பசி மாதம் என்ற உடனேயே நம் நினைவுக்கு வருவது தீபாவளி சமயத்தில் செய்யக்கூடிய குபேர பூஜை, தீபாவளி முடிந்து வரக்கூடிய சஷ்டி முருகர் வழிபாடு, இந்த இரண்டும் ஐப்பசி மாதத்தின் முக்கியமான பண்டிகைகள்.
தீபாவளி அன்று தான் குபேர பூஜை செய்ய வேண்டும், சஷ்டியின் போது தான் முருகர் வழிபாடு செய்ய வேண்டும் என்பது அவசியம் கிடையாது. இந்த ஐப்பசி மாதம் முழுவதுமே இறைவழிபாட்டை நாம் மேற்கொள்ளலாம். அந்த வகையில் மகாலட்சுமி கோவில், அம்பாள் கோவில் பெருமாள் கோவிலுக்கு, உங்கள் கையால் தாமரை பூவை வாங்கி கொடுக்க வேண்டும். இந்த மாதம் கோவில்களுக்கு தாமரைப் பூ வாங்கி கொடுத்தால் வரக்கூடிய துன்பங்கள் விலகும் என்பது சூட்சமமான நம்பிக்கை. (வெண்தாமரை செந்தாமரை எந்த பூவை வேண்டும் என்றாலும் வாங்கிக் கொடுக்கலாம்).
முருகர் கோவிலுக்கு வாசம் நிறைந்த சந்தனம் ஜவ்வாது போன்ற பொருட்களை வாங்கி தானமாக கொடுக்க வேண்டும். இந்த ஐப்பசி மாதம் முழுவதும் தினமும் இதை செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உங்களால் எப்போது முடிகிறதோ அப்போது ஒரு நாளோ, இரண்டு நாளோ இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.
ஐப்பசி மாதம் என்றாலே சூரிய பகவான் நீச்சம் அடையக்கூடிய மாதமாக சொல்லப்பட்டுள்ளது. இதனால் வரக்கூடிய பிரச்சனைகளிலிருந்து நம்மையும் நம் நாட்டையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால், பசு மாட்டிற்கு கோதுமை மாவால் செய்யப்பட்ட உணவு பண்டங்களை தானமாக கொடுக்கலாம். கோதுமை தவிடு ஒரு கிலோ வாங்கி தானமாக கொடுக்கலாம்.
தினமும் உங்களுடைய வீட்டில் ஆதித்ய ஹிருதயம், ஹனுமன் சாலிசாவை ஒலிக்க விடுங்கள். இந்த இரண்டு பாடல்களும் நமக்கு வரும் பேராபத்துகளை தடுத்து நிறுத்தும். இதை நீங்கள் காதால் கேட்க வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாதாம். இந்த மந்திர வார்த்தைகள் இந்த பூமியில் ஒலித்தாலே வரக்கூடிய கஷ்டங்கள் எல்லாம் தூர ஒதுங்கிவிடும்.
மேலே சொன்ன எளிமையான சின்ன சின்ன விஷயங்களை பின்பற்றும்போது நமக்கு குடும்பத்திற்கு வரும் பிரச்சினைகளில் இருந்தும் தப்பித்துக் கொள்ளலாம். நம்மைச் சுற்றி இருக்கக்கூடிய இடங்களில் வரும் பிரச்சனைகள், இயற்கை பேரழிவுகளில் இருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறது ஜோதிடம்.
இந்த பரிகாரங்கள் எல்லாம் பிரபல ஜோதிடர்களால் சொல்லப்பட்ட பரிகாரங்கள். நம்பிக்கை இருந்தால் நீங்களும் இதை இந்த மாதம் பின்பற்றுங்கள். உங்களால் இயன்ற உதவிகளை அடுத்தவர்களுக்கு செய்து வாருங்கள். கடன் வாங்கி உதவி செய்ய வேண்டும், கடன் வாங்கி பரிகாரம் செய்ய வேண்டும், தானம் என்பது அர்த்தம் கிடையாது.
இதையும் படிக்கலாமே: பௌர்ணமி லட்சுமி பூஜை
நமக்கு வரக்கூடிய வருமானத்திலிருந்து ஒரு சின்ன தொகையை உதவியாக செய்யலாம் தவறு கிடையாது. ஐப்பசி மாதம் ஆபத்திலிருந்து விடுபட்டு, அற்புதமாக இந்த மாதத்தை கடந்து செல்ல இந்த பரிகாரங்கள் உங்களுக்கு நிச்சயம் உதவும் என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.