- Advertisement -

பௌர்ணமி லட்சுமி பூஜை

- Advertisement -

பெருமாளுக்கு உகந்த மாதமாக திகழக்கூடிய புரட்டாசி மாதம் நிறைவடையும் சூழ்நிலையில் இருக்கிறது. புரட்டாசி மாதத்தின் கடைசி நாளன்று பௌர்ணமி சேர்ந்து வருகிறது. பொதுவாக பௌர்ணமி தினத்தில் லட்சுமி பூஜை செய்வது என்பது எந்த அளவிற்கு பலனை தருமோ அதை விட புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி நாளன்று லட்சுமி பூஜை செய்வது, பல மடங்கு பலனைத் தரும். இந்த ஆன்மீகம் குறித்த பகுதியில் எளிமையான முறையில் லட்சுமி பூஜை செய்யும் முறையை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

பௌர்ணமி லட்சுமி பூஜை

புரட்டாசி மாதத்தின் கடைசி நாளான வியாழக்கிழமை அன்று பௌர்ணமி வருகிறது. பௌர்ணமி என்பது மகாலட்சுமிக்குரிய வழிபாட்டு நாளாக கருதப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் பௌர்ணமி அன்று சுக்கிர வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரியதாகவும் திகழ்கிறது. அன்றைய தினம் வியாழக்கிழமை என்பதால் குருபகவானுக்குரிய கிழமையாக கருதப்படுகிறது. இதோடு சேர்த்து ரேவதி நட்சத்திரமும் வருகிறது. ரேவதி நட்சத்திர நாளன்று நாம் வாங்கும் தங்கம் அதிகளவில் சேர்வதற்குரிய யோகம் உண்டாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ரேவதி நட்சத்திர நாளில் சுக்கிரனின் அருட்பார்வை நேரடியாக பூமியில் விழுகிறது என்ற ஒரு கூற்றும் நிலவி வருகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த நாளில் மகாலட்சுமியை நாம் வழிபாடு செய்யும்பொழுது பல நன்மைகள் உண்டாகும்.

- Advertisement -

அன்றைய தினத்தில் சுக்கிர ஹோரையில் அருகில் இருக்கக்கூடிய நகை கடைக்கு சென்று தங்களால் இயன்ற அளவு தங்கத்தை வாங்க வேண்டும். தங்கம் வாங்க வசதி இல்லாதவர்கள் வெள்ளியை வாங்கலாம். இந்த தங்கத்தையோ வெள்ளையோ உடனே நாம் அணிந்து கொள்ளாமல் அடுத்த நாள் அதாவது வெள்ளிக்கிழமை பிரதமை நாளன்று அருகில் இருக்கக்கூடிய சுயம்பு லிங்க ஆலயத்திற்கு சென்று அங்கு அவருக்கு அபிஷேகம் நடக்கும் பொழுது புதிதாக வாங்கிய தங்கத்தை வைத்து வழிபாடு செய்து திரும்பவும் வாங்கி வந்தோம் என்றால் நமக்கு செல்வ செழிப்பு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

தங்கம் வெள்ளி வாங்கும் அளவிற்கு வசதி இல்லை என்பவர்கள் தங்களுடைய இல்லத்தில் பௌர்ணமி தினத்தன்று ஒரு எளிமையான பூஜையை செய்யலாம். இந்த பூஜையை செய்வதன் மூலம் பணவரவு என்பது அதிகரிக்கு.ம் எவ்வளவு முயற்சிகள் செய்தும் பணத்தை சம்பாதிக்க முடியவில்லை என்பவர்களும், பணத்தை சம்பாதித்தாலும் வீண்விரயம் ஏற்பட்டு சேமிப்பாக உயரவில்லை என்பவர்களும் இந்த பூஜையை செய்யலாம்.

- Advertisement -

இதற்கு நமக்கு நின்ற கோலத்தில் இருக்கக்கூடிய மகாலட்சுமியின் படம் வேண்டும். அப்படி இல்லை என்றால் ஒரு தாமரை பூவை வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு வாழை இலையையோ அல்லது பித்தளை தட்டையோ வைத்து அதற்கு மேல் பச்சரிசியை பரப்பிக் கொள்ள வேண்டும். பச்சரிசி என்பது சந்திரனுக்குரியது. அதில் நீர் தத்துவம் அதிகமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. அந்த பச்சரிசிக்கு மேல் தாமரைப் பூவை நன்றாக விரித்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த தாமரைப் பூவின் நடுவில் நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட ஏதாவது ஒரு பொருளை வைக்க வேண்டும்.

எங்கள் வீட்டில் தங்கமும் இல்லை வெள்ளியும் இல்லை என்பவர்கள் ஐந்து ரூபாய் நாணயத்தை வைக்கலாம். இந்த தங்கம், வெள்ளி, ஐந்து ரூபாய் நாணயம் தான் மகாலட்சுமி ஆக கருதப்படுகிறது. இப்பொழுது மகாலட்சுமிக்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு குங்குமத்தால் 108 போற்றிகளை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். குங்குமத்திற்கு பதிலாக மல்லிகை பூவையும் நாம் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். பால் பாயாசத்தை நெய்வேத்தியமாக வைத்து கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும்.

மறுநாள் இதில் இருக்கக்கூடிய குங்குமத்தை எடுத்து தனியாக சேகரித்து வைத்து தினமும் நெற்றியில் திலகமாக வைத்துக் கொள்ளலாம். தங்கம், வெள்ளி, ஐந்து ரூபாய் நாணயங்களை இவற்றில் எதை வைத்திருந்தாலும் அவற்றை தங்கம் வெள்ளி வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். தாமரைப் பூவை கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே:புரட்டாசி பௌர்ணமி வழிபாட்டு முறை
இந்த முறையில் நாம் வழிபாடு செய்வதன் மூலம் மகாலட்சுமியின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கப்பெற்று பணவரவு அதிகரிக்கும், செல்வ செழிப்புடன் வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்