- Advertisement -

தீய சக்தியை கிரகித்து தன்னை தானே தற்கொலை செய்து கொள்ளும் அதிசய சாகா மூலிகை. ஏன்? எதற்காக?

ஆகாய கருடன் கிழங்கு:
இவை காடுகளில் காணப்படும் ஒரு வகை கிழங்கு இனத்தைச் சார்ந்த தாவர வகையாகும். இவற்றிலிருந்து கொடிகள் படர்ந்து பற்றி வளரக்கூடியாது. அதீத கசப்பை கொண்ட இந்த கிழங்கு சித்தர்களால் போற்றி பாராட்டப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த வகையான கொடிய நோயையும் கொல்லக்கூடிய திறன் தன்னகத்தே கொண்டுள்ளதால் இதற்கு கொல்லன் கோவை என்ற சிறப்பு பெயரும் உண்டு. முந்தைய காலத்தில் வாழ்ந்தோரிடம் பேய் சீந்தில் என்ற பெயரில் புகழ் பெற்றிருந்தது. தற்காலத்தில் பொதுப் பெயரான ஆகாச கருடன் கிழங்கு என்று வழங்கப்பட்டு வருகிறது. இவை மண்ணுக்கடியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டும் எவ்வளவு நாட்கள் ஆனாலும் அப்படியே சாகாமல் இருக்கும். இதனால் சாகாமூலி என்றும் அழைக்கபடுகிறது. எந்த வகையான கொடிய விஷமுள்ள பாம்புக்கடிக்கும் உடனடி நிவாரணியாக செயல்படுவதால் மகாமூலி என்றும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

- Advertisement -

பெரும்பாலான வீடுகளில் இந்த கிழங்கை திருஷ்டிக்காக வீடுகளில் கட்டி தொங்க விடுகின்றனர். வராந்தாவின் மேல் தளத்திலோ அல்லது நிலவரையின் நடுப்பகுதியிலோ இதனை கட்டி வைப்பதால் வீட்டிற்குள் எந்தவித விஷமுள்ள ஜந்துக்களும், சிறிய பூச்சிகளும் கூட வருவதில்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில் இதன் வாசம் அவைகளுக்கு பிடிப்பதில்லையாம். உங்கள் வீட்டில் எந்த வகையான விஷ பூச்சிகளும் வராமல் இருப்பதற்கு இந்த முறையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

முக்கியமாக பில்லி, சூனியம், ஏவல் போன்ற எத்தகைய தீய சக்திகளும் உங்கள் வீட்டில் இருக்கும் பட்சத்தில் இந்த கிழங்கு அதனை உட்கிரகித்து தன்னை தானே தற்கொலை செய்து கொண்டு அழிந்து விடும். அதாவது கொடிகள் வளராமல் காய்ந்துவிடும். இதனால் அந்த வீட்டில் இருப்போர் பல பிரச்சனைகளில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளலாம். பின்னர் அதற்குரிய பரிகாரங்கள் மேற்கொண்டு அல்லது பூஜைகள் செய்து விட்டு புதியதாக ஒரு கிழங்கை வாங்கி இதே போல் கட்டி வைத்து விடலாம்.

- Advertisement -

மாறாக உங்கள் வீட்டில் தீய சக்திகளன்றி நல்ல சக்திகள் இருக்குமேயானால் இந்த கிழங்கு முளைவிட்டு பசுமையான கொடிகளாக வளரக்கூடியது. மிகவும் அழகாக காட்சியளிக்கும். பசுமை தன்மை இருக்கும் வரை உங்கள் இல்லம் மகிழ்ச்சிகரமான இல்லமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

சித்த மருத்துவத்தில் இந்த கிழங்கை பாம்புக்கடி, பூச்சிக்கடி, தோல் நோய்களுக்கு அருமருந்தாக பயன்படுத்துகின்றனர். ஒருவருக்கு பாம்பு கடித்து விட்டால் சிறிய அளவு இதனை உட்கொள்வதால் உடனடியாக வாந்தி, பேதி உண்டாகி விஷம் முறிந்து வெளியேறிவிடும். பூரான், பூச்சி போன்றவற்றின் கடியிலிருந்தும் மனிதனை உடனடியாக மீட்கிறது. நவீன காலத்தில் நிலவும் மிகக்கொடிய நோய்கள் பலவற்றிற்கும் அற்புத மருந்தாக செயல்படுகிறது என்று கூறப்படுகிறது. மிகச்சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. இதன் தன்மை அறிந்து தான் சித்தர்கள் மகா மூலி என்று குறிப்பிட்டுள்ளனர் என்பது தெரிய வருகிறது.

- Advertisement -

இதன் விசித்திரமான தோற்றம், வித விதமான தோற்றம் காரணமாக இதனை கட்டி தொங்க விட்டால் அதன் நிழல் கருடன் பறப்பது போன்ற பிம்பத்தை உருவாக்கும். இதனால் பாம்புகள் பயந்து ஓடி ஒளிந்து கொள்ளும். ஆகாயத்தில் கருடன் பறப்பது போன்ற தோற்றமுடையதால் இந்த பெயர் பெற்றது என்று கருதப்படுகிறது.

நம் இல்லத்திற்காக, நமக்காக தன்னை தானே அழித்து கொள்ளும் இந்த அற்புத கிழங்கை அழிய விடாமல் பாதுகாத்து பயன்பெறுவோம்.

இதையும் படிக்கலாமே
கொளஞ்சியப்பர் திருக்கோயில் வரலாறு

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Akasa garudan kizhangu uses in Tamil. Agaya garuda kilangu benefits. Akasa garudan kilangu maruthuvam. Akasa garudan kilangu plant.

- Advertisement -