- Advertisement -
சமையல் குறிப்புகள்

ஆந்திரா ஸ்டைலில் இப்படி ஒரு கத்திரிக்காய் பொரியலை யாரும் டேஸ்ட் பண்ணி இருக்க மாட்டீங்க. இந்த ஸ்பெஷல் மசாலா அரவை அரச்சு போட்டு, இந்த ரெசிபி ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -

ஆந்திரா என்று சொன்னாலே காரசாரமான சமையல் தான் நம் நினைவுக்கு வரும். கத்திரிக்காயை வைத்து சூப்பரான ஒரு பொரியல் ரெசிபியை தான் இன்று நாம் பார்க்க போகின்றோம். மிக மிக எளிமையாக இந்த பொரியலை செய்யலாம். இதனுடைய சுவை சூப்பராக இருக்கும். கத்திரிக்காயை பிடிக்காது என்பவர்கள் கூட இந்த ரெசிபியை விருப்பமாக சாப்பிடுவார்கள். இதற்கு ஒரு ஸ்பெஷல் அரவை எப்படி அரைப்பது? இந்த பொரியலை எப்படி செய்வது. ரெசிபிக்குள் சென்று தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

செய்முறை

இதற்கு முதலில் ஒரு ஸ்பெஷல் அரவை அரைக்கலாம். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் தேங்காய் துருவல் – 1 ஸ்பூன், மிளகாய் தூள் – 1 ஸ்பூன், இந்த மசாலாவுக்கு மட்டும் தேவையான அளவு – உப்பு, சீரகம் – 1 ஸ்பூன், மல்லித்தூள் – 1 ஸ்பூன், தோல் உரித்த பூண்டு பல் – 6, கருவேப்பிலை – 1 கொத்து, போட்டு தண்ணீர் எதுவும் ஊற்றாமல் இதை அரைத்து எடுத்துக் கொள்ளவும். இது ஒரு பொடியாக நமக்கு கிடைத்திருக்கும். அது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

1/2 கிலோ கத்தரிக்காயை நீலவாக்கில் நறுக்கி தண்ணீரில் போட்டு கழுவி தண்ணீரை வடித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கடலை பருப்பு, தாளித்து பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1 கைப்பிடி, கருவேப்பிலை – 1 கொத்து, போட்டு வெங்காயத்தை கண்ணாடி பதம் வரும் வரை வதக்கி விடவும்.

அடுத்து வெட்டி வைத்திருக்கும் கத்தரிக்காய்களை இதில் போட்டு, கத்திரிக்காய்க்கு தேவையான அளவு உப்பு தூள் தூவி, 2 நிமிடம் எண்ணெயிலேயே வதக்கி மூடி போட்டு ஐந்திலிருந்து ஆறு நிமிடங்கள் வேக வைக்கவும். கத்தரிக்காய் முக்கால் பாகம் வெந்து வந்தவுடன் மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் பொடியை இதன் மேல் தூவி, நன்றாக பிரட்டி விடவும். மீதமுள்ள கத்தரிக்காய் வெந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, மேலே கொத்தமல்லி தலையை தூவினால் மணக்க மணக்க காரசாரமான கத்திரிக்காய் பொரியல் தயார்.

- Advertisement -

இந்த பொரியல் செய்யும்போது நீங்கள் கவனிக்க வேண்டியது என்ன தெரியுமா. கத்திரிக்காய் வெந்து குழைந்து போகக்கூடாது. தண்ணீர் ஊற்றி கத்தரிக்காயை வேக வைக்கக் கூடாது. கத்தரிக்காய் கடித்து சாப்பிடுவதற்கு வெடுக்கு வெடுக்கு என இருந்தால் தான் இதன் சுவை சூப்பராக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: ஹோட்டல் வெஜிடபிள் குருமா ருசிக்க இந்த காய் தான் காரணமா? இப்படி கூடவா வெஜிடபிள் குருமா வைப்பாங்க? ரொம்ப ஆச்சரியமா இருக்கே!

சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதத்திற்கு தொட்டுக் கொள்ளலாம். சுட சுட சாதத்தில் இதை போட்டு பிசைந்து சாப்பிட்டாலும் அட்டகாசமான ருசி தெரியும். கத்தரிக்காயை கொஞ்சம் வித்தியாசமாக இப்படியும் தான் செய்து பார்ப்போமே. ரெசிபி பிடித்தவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -