
ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் இருக்கக் கூடிய மிகப்பெரிய கஷ்டம் எது தெரியுமா? அடுத்தவர்கள் முன்பு அவமானப்பட்டு, தலை குனிந்து நிற்பது. அதுவும் செய்யாத தவறுக்கு கெட்ட பெயர் வாங்குவது, அனாவசியமாக நம் மீது யாராவது பழி போட்டு, நம்மை அவமானப்படுத்தி விட்டால், அதை நம்மால் தாங்கிக் கொள்ளவே முடியாது. உங்களுக்கும் இதுபோல பிரச்சனைகள் இருக்கிறதா.
எதிரிகளால் நீங்கள் ரொம்பவும் அவமானப்படுத்தப்பட்டு தலைகுனிந்து நிற்கிறீர்களா. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு இந்த நிலைமை நேர்ந்தால், உங்கள் பக்கம் நியாயம் இருந்தால் வாராகியின் பாதங்களை இப்படி பற்றிக்கொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்பட்ட அவமானத்திலிருந்து நிச்சயம் நீங்கள் வெளி வருவீர்கள்.
காலமும் நேரமும் சூழ்நிலையும் நமக்கு எப்போது அவப்பெயரை கொண்டு வந்து சேர்க்கும் என்று தெரியாது. எப்போது அவமானத்தை கொண்டு வந்து சேர்க்கும் என்பது தெரியாது. சந்தர்ப்பமும் சூழ்நிலையும் நமக்கு எதிராக அமையும் பட்சத்தில் நமக்கு கெட்ட பெயர் வந்துவிடும். ஆனால், உண்மையிலேயே நம் பக்கம் நியாயம் இருக்கிறது என்றால், அந்த நியாயத்தை வெளி கொண்டு வர வேண்டும் என்றால் நீங்கள் வாராஹியை 21 நாள் இப்படி வழிபாடு செய்யுங்கள்.
இந்த வழிபாட்டை, வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்கலாம். தொடர்ந்து 21 முறை வாராகி வழிபாடு செய்ய வேண்டும். தொடர்ந்து 21 நாள் வழிபாடு செய்தாலும் பரவாயில்லை. வாரம் தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை, 21 வெள்ளிக்கிழமை வழிபாடு செய்யலாம். 21 செவ்வாய்க்கிழமை, 21 ஞாயிற்றுக்கிழமை இப்படி கூட கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த வழிபாட்டை மாலை 6:30 மணிக்கு மேல் தொடங்க வேண்டும். பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். வாராஹி திருவுருவப் படம் சிலை எது இருந்தாலும் அந்த படத்திற்கு பூக்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். இந்த வழிபாட்டிற்கு நித்திய கல்யாணி பூ மிக மிக சிறப்பு. நித்திய கல்யாணி பூக்களை வாங்கி அதை அம்பாளுக்கு சூட்டிவிடுங்கள்.
உங்களுடைய வீட்டில் வாராஹியின் திரு உருவப்படம் இல்லை என்றாலும் பரவாயில்லை. நீங்கள் ஏற்றி வைத்திருக்கும் விளக்கை வாராஹி ஆக நினைத்து, நித்திய கல்யாணி செடி இலைக்கு மேலே ஒரு மண் அகல் விளக்கை வைத்து, நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள்.
வாராஹிக்கு ஒரு நெய்வேதியம் வைக்க வேண்டும். கிழங்கு வகைகள் வைக்கலாம். அல்லது மாதுளம் வைக்கலாம், அல்லது ஒரு டம்ளர் பானகம் வைத்தாலும் சரிதான். உங்களுக்கு எது சௌகரியமாக இருக்கிறதோ, அந்த நெய்வேத்தியத்தை வைத்துவிட்டு வாராஹியை மனதார நினைத்து, உங்கள் பிரச்சினையை வாராகித் தாயிடம் சொல்லுங்கள். ‘என்மேல் தவறு கிடையாது. ஆனால் இப்படிப்பட்ட பழி என் மேல் விழுந்து விட்டது. எனக்கு அவமானம் நேர்ந்து விட்டது.
இதிலிருந்து நான் வெளிவர வேண்டும் என்று’ பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்களுடைய பிரச்சனை என்னவோ அதை வாராகி தாயிடம் சொல்லுங்கள். உங்களுடைய அம்மாவிடம் பிரச்சனையை சொன்னால் எது போல சொல்வீர்களோ, அதேபோல வாராஹி அம்மாவிடம் பிரச்சனைகளை சொல்லி, அந்த பிரச்சினையிலிருந்து என்னை எப்படியாவது காப்பாற்றுத் தாயே என்று மனம் உருகி வேண்டி வாராஹி 108 போற்றிகள் படிக்கலாம், அல்லது ‘ஓம் வாராஹித்தாயே போற்றி’, ஓம் வாராகித் தாயின் பாதங்களைச் சரணடைந்தேன். இப்படி ஏதாவது ஒரு மந்திரத்தை சொல்லி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே: வீண் வம்பு வழக்கு பிரச்சனைகள் தீர வழிபாடு
21 முறை இந்த முறைப்படி உங்களுடைய வழிபாட்டை நீங்கள் நிறைவு செய்து விட்டால், நிச்சயமாக உங்கள் மீது விழுந்த அவதூறு, பழி விலகும். உங்கள் மேல் பழி போட்டவர்களுக்கு தண்டனையை அம்பாள் கொடுக்க மாட்டார். அவர்களுக்கு எது சரி, தவறு என்பதை புரிய வைப்பாள். அதுதான் அம்பாளின் வேலை. ஆனால் உங்கள் பக்கம் நிஜமாக நியாயம் இருக்க வேண்டும். உங்கள் மனசாட்சிக்கு எதிராக நீங்கள் எதையும் செய்திருக்கக் கூடாது. அப்படி இருந்தால் மட்டும் நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை செய்யுங்கள். நிச்சயமாக வாராகி உங்கள் வழிபாட்டிற்கு நல்ல பலனை கொடுப்பாள் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.