- Advertisement -

மனக்குழப்பம் நீங்க பௌர்ணமி பரிகாரம்.

- Advertisement -

பொதுவாகவே பௌர்ணமி நாளில் இந்த பிரபஞ்சத்தில் நேர்மறை ஆற்றல் அதிகமாக இருக்கும். பூமியில் இறையாற்றல் நிறைவாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இதில் சில ஆன்மீக நம்பிக்கையும் இருக்கிறது. சில அறிவியல் ரீதியான நம்பிக்கைகளும் இருக்கிறது. எதுவாக இருந்தாலும் சரி நமக்கு நல்லது நடக்கும் என்று சொன்னால் அதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

அந்த வகையில் நாளைய தினம் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே வரக்கூடிய ப்ளூ மூன் பௌர்ணமி நாளானது வரவிருக்கிறது. இது சாதாரண பௌர்ணமி நாளை(19-08-2024) காட்டிலும் அதிசக்தி வாய்ந்த பௌர்ணமியாக சொல்லப்படுகிறது. வழக்கத்தை விட நிலவானது பூமிக்கு அருகில் இந்த நாளில் வருவதாகவும், அந்த நிலா நீல நீளத்தில், வழக்கத்தை விட பல மடங்கு பிரகாசத்தோடு ஜொலிக்கும் என்பதும் அறிவியல் சார்ந்த உண்மைகள்.

- Advertisement -

அதுவே ஆன்மீக ரீதியாக பார்த்தால், நிலவு வெளிச்சம் பூமியில் பிரகாசமாக விழும் போது சந்திர பகவானின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், அந்த நாளில் நாம் சந்திர பகவானை நினைத்து வழிபாடு செய்யும்போது மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை. காரணம் ஜோதிடத்தின் அடிப்படையில் சந்திரன் மனோ காரகனாக சொல்லப்பட்டுள்ளார்.

மனக்குழப்பம் நீங்க சந்திரன் வழிபாடு

நாளைய தினம் நம்முடைய வீட்டில் செய்ய வேண்டிய ஒரு எளிமையான சந்திர வழிபாட்டை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த வழிபாட்டை மேற்கொண்டால் ஏற்கனவே நீங்கள் குழப்பத்தில் இருந்தால் அந்த குழப்பத்திற்கு தெளிவு பிறக்கும். நீங்கள் பிறந்ததிலிருந்து குழப்பவாதி என்றால் அந்த குழப்பமான சூழ்நிலையில் இருந்து வெளிவருவீர்கள். எந்த ஒரு சிக்கல் வாழ்க்கையில் வந்தாலும் அதில் குழம்பி போகாமல் தெளிவான முடிவை எடுக்கும் சக்தியை அந்த சந்திர பகவான் உங்களுக்கு கொடுப்பான்.

- Advertisement -

நாளை மாலை 6:30 மணிக்கு மேல் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இந்த வழிபாட்டிற்கு நமக்கு தேவையான பொருள் ஒரு கைப்பிடி அளவு நெல்மணிகள். இது உங்களுடைய வீட்டிலேயே இருந்தால் அதை எடுத்து பரிகாரத்திற்கு பயன்படுத்தலாம். இல்லையென்றால் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் 50 கிராமம், 100 கிராமோ வாங்கிக் கொள்ளுங்கள். அது உங்களுடைய விருப்பம். மாலை பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடவும்.

பூஜை அறையில் இந்த நெல்மணிகளை இரண்டு கைகளிலும் ஏந்தி கொண்டு, சந்திர பகவானை மனதார நினைத்துக் கொண்டு, என்னுடைய மனக்குழப்பம் தீர வேண்டும், பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவை கொடு சந்திர பகவானே என்று பிரார்த்தனை செய்து குலதெய்வத்தை வேண்டி இந்த நெல்மணிகளை அப்படியே ஒரு கிண்ணத்தில் போட்டு பூஜை அறையில் வைத்து, கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபாடு செய்தால், உங்களுக்கு மனமானது தெளிவு பெறும்.

- Advertisement -

உங்களுக்கு வெட்ட வெளியில் இந்த பூஜையை செய்வதற்கு இடம் இருக்கிறது, மொட்டை மாடி பால்கனியில் நிலா வெளிச்சம் வரும் என்றால் அந்த இடத்தில் 2 கைகளில் நெல்மணிகளை ஏந்தி கொண்டு சந்திர பகவானை பிரார்த்தனை செய்யலாம்.

இப்படி வழிபாடு செய்து முடித்துவிட்டு அந்த நெல்மணிகளை கிண்ணத்தில் போட்டு வைத்திருக்கிறீர்கள் அல்லவா, அதை என்ன செய்வது. மூன்று நாட்கள் கழித்து எடுத்து காக்கா குருவிகளுக்கு சாப்பிட இரையாக போட்டு விடலாம். இந்த எளிமையான வழிபாடு உங்கள் மனக்குழப்பத்தை நீக்கும். இந்த நாளை தவிர விடாதீங்க.

இதையும் படிக்கலாமே: கடன் அடைய ஆவணி பௌர்ணமி பரிகாரம்

சந்திர பகவானுக்கு உரிய தானியமான நெல்மணிகளை வைத்து வழிபாடு செய்யும்போது, சந்திர பகவானின் பரிபூரண அருள் கிடைத்து, உங்கள் மனம் தெளிவாவதோடு, சேர்த்து முகமும் எப்போதும் பிரகாசமாக இருக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -
Published by