நாளைய தினம் ஆவணி மாதம் வரவிருக்கும் பௌர்ணமி திதி. இந்த நாளில் ஆவணி அவிட்டமும் சேர்ந்து வருகிறது. பௌர்ணமி திதியும் அவிட்ட நட்சத்திரமும், ஆவணி மாதத்தில் சேர்ந்து வரக்கூடிய நாளை தான் ஆவணி அவிட்டம் என்று சொல்லுவார்கள். இந்த நாளில்தான் வேதங்கள் பிறந்ததாக நம்பப்படுகிறது. இதனால் நாளைய தினம் பிராமணர்கள் பூணூல் மாற்றிக் கொண்டு இந்த நாளை சிறப்பிப்பார்கள்.
ஆக மொத்தம் நாளைய தினம் சிறப்பு வாய்ந்த நாள். நாளைய தினம் அம்பாள் வழிபாடு செய்ய யாரும் தவற விடாதீங்க. நாளைய தினம் குலதெய்வ வழிபாட்டிற்கும் சிறந்தது. மகாலட்சுமி வழிபாட்டிற்கும் சிறந்தது. இந்த வழிபாட்டுடன் சேர்த்து, இந்த சக்தி வாய்ந்த நாளில் நம் கடன் பிரச்சனையை கரைக்க என்ன பரிகாரம் செய்யலாம் என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
கடன் அடைய பௌர்ணமி பரிகாரம்
பௌர்ணமி தினம் என்றாலே மாலை நேரம் சிறப்பு. ஆகவே நீங்கள் இந்த பரிகாரத்தை நாளை (19-08-2024) மாலை 6:30 மணிக்கு செய்தால் போதும். வழக்கம் போல பௌர்ணமிக்கு பூஜை அறையை சுத்தம் செய்துவிட்டு, சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்துவிட்டு, விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். அம்பாளுக்கு உங்களால் முடிந்த நெய் வைத்தியம் வைக்கலாம்.
இல்லையென்றால் ஏதாவது பழ வகைகளை நெய்வேத்தியமாக வைத்து விடுங்கள். யாருக்கு கடன் பிரச்சனை இருக்கிறதோ, அவர்கள் கையால் இந்த பரிகாரத்தை செய்வது சிறப்பு. இந்த பரிகாரத்திற்கு ஒரே 1 பச்சை கற்பூரமும், 5 கிராம்பும் தேவை. இரண்டையும் உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு உங்களுடைய தலையை 5 முறை சுற்ற வேண்டும்.
இப்படி இந்த பொருளை வைத்து உங்கள் தலையை சுற்றும் போது கடன் கஷ்டம் எல்லாம் என்னை விட்டு காணாமல் போக வேண்டும் என்று சந்திர பகவானையும் குலதெய்வத்தையும் மகாலட்சுமியையும் மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்கள் முன்னே ஒரு சின்ன மண் அகல் விளக்கை வைத்து இந்த 2 பொருளையும் வைத்து நெருப்பு மூட்டி, விட வேண்டும்.
பச்சைக் கற்பூரத்தில் கிராம்பு எரிந்து சாம்பல் ஆகிவிடும். பிறகு இந்த சாம்பலை தண்ணீரின் கரைத்துக் கீழே கொட்டி விடலாம். இந்த பரிகாரத்தை வீட்டுக்குள்ளேயே பூஜை அறையில் அமர்ந்து செய்யலாம். தவறு கிடையாது. வரவேற்ப்பறையில் அமர்ந்து செய்யலாம். தவறு கிடையாது.
உங்களுக்கு வெட்ட வெளியான இடம் இருக்கிறது, மொட்டை மாடி, பால்கனி நிலவு ஒளியில் இந்த பரிகாரத்தை செய்ய முடியும் என்பவர்கள் சந்திர பகவானுக்கு முன்பாக, சந்திர உதயத்தின் போது இந்த பரிகாரத்தை செய்தால் அது அற்புதமான பலனை பெற முடியும். உங்களுடைய கடன் அத்தனையும் தீர்க்கக்கூடிய மிக மிக எளிமையான தாந்திரீக பரிகாரங்களில் இதுவும் ஒன்று.
பௌர்ணமி தினம் என்றால், கெட்ட சக்திகளின் தாக்கம் குறைவாக இருக்கும். உங்களுக்கு எதிர்மறை ஆற்றல்கள் வேலை செய்யாது. ஆகவே நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும் இந்த பிரபஞ்சத்தில் சக்தி வாய்ந்த இந்த இரண்டு பொருட்களை வைத்து, கடன் சுமை குறைய வேண்டும் என்று பிரார்த்தனை வைத்து இந்த இரண்டு பொருளையும் நெருப்பில் போட்டுத்தான் பாருங்களேன்.
இதையும் படிக்கலாமே: அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் பூஜை
என்ன அதிசயம் நடக்கிறது என்று. உங்கள் கடன் எல்லாம் அந்த நெருப்போடு நெருப்பாக பொசுங்கி போகும். கடனை திருப்பி அடைக்கக் கூடிய முயற்சிகளில் சீக்கிரம் வெற்றி காண்பீர்கள். நல்லது மட்டுமே நடக்கும் நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறவும்.