- Advertisement -
வீட்டு குறிப்புகள்

பூஜை பாத்திரங்கள் சுத்தம் செய்ய

- Advertisement -

பண்டிகை காலங்கள் வர துவங்கி விட்டது. பண்டிகைகளும் வீட்டில் நல்ல நாட்களும் மனதிற்கு மகிழ்ச்சியை தருவதாக அமைந்தாலும், அந்த நாட்களில் நமக்கு சிறிது அளவேனும் எரிச்சலை ஏற்படுத்தக் கூடியது சுத்தம் செய்யக் கூடிய வேலைதான். அதிலும் பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வது சற்று கூடுதலான சிரமத்தையே தரும். ஏனெனில் அதில் உள்ள எண்ணெய் பிசுக்கு நீங்கி பளிச்சென்று மாற்ற கொஞ்சம் மெனக்கெட தான் வேண்டும். அதற்காக அதை செய்யாமலும் விட முடியாது.

பூஜை என்றாலே அதில் முதலிடம் பிடிப்பது தீபம் ஏற்றக் கூடிய விளக்கு தான். அந்த விளக்கு பளிச்சென்று பார்க்க பிரகாசமாக இருந்தால் தான் பூஜையே முழுமை அடைந்தது போன்ற ஒரு மனநிலை தோன்றும். அப்படியான இந்த பூஜை பாத்திரத்தை தேய்க்க சிரமப்படும் இல்லத்தரசிகளுக்கு வீட்டு குறிப்பு குறித்த இந்த பதிவில் ஒரு அருமையான ஐடியா காத்திருக்கிறது. வாருங்கள் அது என்னவென்று தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

பூஜை பாத்திரங்களை எளிமையாக சுத்தம் செய்ய

இதுவரையில் பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்ய நாம் பல வகையான ஐடியாக்களை பார்த்திருப்போம். பின்பற்றியும் இருப்போம் சிலது நமக்கு மனதிருப்தியை தரும். சில குறிப்புகள் அந்த அளவிற்கு நம்முடைய மனதிற்கு திருப்தி அளிக்காது. பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வது மட்டுமல்லாமல் சுத்தம் செய்த பிறகு அந்த பூஜை பாத்திரங்கள் குறைந்தது ஒரு வாரத்திற்காவது பளிச்சென்று இருக்க வேண்டும். இதுவும் மிகவும் முக்கியம் இந்த முறையில் சுத்தம் செய்தால் பூஜை பாத்திரங்கள் எளிதாக சுத்தம் ஆவதுடன் பளிச்சென்று இருக்கும்.

இந்த முறையில் சுத்தம் செய்ய முதலில் பூஜை பாத்திரத்தில் உள்ள எண்ணெய் பிசுக்குகள் நீங்கும்படி ஒரு டிஷ்யூ பேப்பரோ அல்லது காட்டன் துணியை வைத்து துடைத்து விடுங்கள். அதன் பிறகு உங்களுடைய பூஜை பாத்திரங்கள் எந்த அளவிற்கு உள்ளது அதற்கு ஏற்றார் போல் புளியை எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து இந்த புலி ஊறும் அளவிற்கு வினிகரை ஊற்றுங்கள். இப்போது இரண்டையும் சேர்த்து நல்ல பேஸ்ட் போல கலந்து விடுங்கள். இது தான் பூஜை பாத்திரங்கள் சுத்தம் செய்ய நாம் தயாரிக்க கூடிய பேஸ்ட்.

- Advertisement -

இந்த பேஸ்டை உங்கள் பூஜை பாத்திரங்களின் மீது முதலில் தேய்த்து விடுங்கள். அதன் பிறகு இன்னொரு சிறிய கிண்ணத்தில் நீங்கள் துணி துவைக்க பயன்படுத்தும் லிக்விட் ஒரு டீஸ்பூன் தூள் உப்பு கொஞ்சம் வினிகர் இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்போது ஏற்கனவே நீங்கள் புளி பேஸ்ட் வைத்து பூஜை பொருட்களின் மீது இப்போது கலந்த கலவை வைத்து தேங்காய் நார் கொண்டு லேசாக தேய்த்து விட்டாலே போதும். எண்ணெய் பிசுக்கு முதல் மூளை முடுக்கில் உள்ள கரைகள் வரை அனைத்தும் நீங்கி பளிச்சென்று மாறி விடும்.

வினிகர் இல்லாதவர்கள் அதற்கு பதிலாக எலுமிச்சை சாறு பயன்படுத்தலாம். அதன் பிறகு கடைசியாக நல்ல தண்ணீரில் ஒரு முறை பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்து விடுங்கள் போதும். இதை சுத்தம் செய்த பின்பு அப்படியே வைத்து விடக் கூடாது. காட்டன் துணி அல்லது டிஷ்யூ பேப்பர் வைத்து பூஜை பாத்திரங்கள் மேலுள்ள தண்ணீரை எல்லாம் நன்றாக துடைத்து விட வேண்டும். அதன் பிறகு நிழலில் பூஜை பாத்திரங்களை ஆற வைத்த பிறகு தான் மஞ்சள் குங்குமம் பொட்டு வைக்க வேண்டும். இந்த முறையில் சுத்தம் செய்யும் போது பூஜை பாத்திரங்கள் நீண்ட நாட்கள் வரை நிறம் மாறாமல் பளிச்சென்று இருக்கும்.

இதையும் படிக்கலாமே: டாய்லெட் சுத்தம் செய்ய இதோ ஒரு எளிய வீட்டு குறிப்பு

இதை பயன்படுத்தும் முறையும் எளிது. அதே போல் இது வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து தான் செய்கிறோம். இதனால் செலவும் குறைவு. இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் பொழுது கடுமையான வேலைகளை இது போல எளிமையாக செய்து பாருங்கள் நேரமும் மிச்சம் மனதிற்கும் நிறைவாக இருக்கும் இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -