- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

சித்திரை நட்சத்திரக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டங்கள் பெருக இவற்றை செய்ய வேண்டும்

தமிழ் வருடங்களில் முதன்மையானதாக வருவது சித்திரை மாதம். சித்திரை மாதம் பிறக்கின்ற சித்திரை நட்சத்திரம் மேஷ ராசிக்குரிய நட்சத்திரமாக இருக்கிறது. இந்த மேஷ ராசி என்பது சூரிய பகவான் உச்சம் அடையும் ராசியாகும். உஷ்ண கிரகங்களான சூரியனும், செவ்வாயும் ஒரே ராசியில் இருப்பதன் காரணமாகத்தான் சித்திரை மாதத்தில் தாங்கமுடியாத வெப்பம் ஏற்படுகிறது. மனிதர்களிலும் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செவ்வாய் பகவானின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்களாக இருக்கின்றனர். சித்திரை நட்சத்திரக்காரர்கள் வாழ்வில் மிகுதியான அதிர்ஷ்டங்களையும், யோகங்களையும் பெறுவதற்கு செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

27 நட்சத்திரங்களின் வரிசையில் பதினான்காவதாக வரும் நட்சத்திரம் சித்திரை நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரத்தின் அதிபதியாக நவகிரகங்களில் பூமிகாரகனாகிய செவ்வாய் பகவான் இருக்கிறார். சக்கரத்தாழ்வார் இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை ஆவார். சித்திரை நட்சத்திரக்காரர்கள் பலம் வாய்ந்த மனம் மற்றும் உடலையும், அதி வீர குணமும் பெற்றிருப்பர். எந்த ஒன்றையையும் பிறருக்கு கொடுத்து மகிழும் கொடை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். சித்திரை நட்சத்திரக்காரர்கள் வாழ்வில் பொருளாதார ரீதியில் மேன்மை பெறவும், நன்மைகளை பெறவும் கீழ்கண்டவற்றை செய்ய வேண்டும்.

- Advertisement -

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வருடத்திற்கொருமுறை வைத்தீஸ்வரன் கோவில் ஊரில் இருக்கும் அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோயிலுக்கு சென்று சிவபெருமான் மற்றும் பார்வதி தேவிக்கு அர்ச்சனை செய்து மற்றும் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். பிறகு அக்கோயிலில் செவ்வாய் பகவான் சந்நிதியில் செவ்வாய் பகவானுக்கு அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்து, சிவப்பு நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று செந்திநாதன் என்கிற பெயரில் இருக்கும் முருகப்பெருமானுக்கு இது சிவப்பு நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

சித்திரை நட்சத்திரத்திற்குரிய தல விருட்சம் வில்வ மரமாகும். வில்வ மரம் தல விருட்சமாக இருக்கும் கோயில்களுக்கு சென்று வில்வ மரத்தையும், அங்கிருக்கும் இறைவனையும் வழிபாடு செய்வதாலும் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை அல்லது வருடத்திற்கு ஒருமுறை சித்திரை நட்சத்திர தினத்தில் ஏழை மக்களுக்கு சிவப்பு நிற உடையை தானம் தருவது நல்லது.

- Advertisement -

கோயில் வளாகங்களில் இருக்கும் முருகப் பெருமானின் வாகனமான மயில்களுக்கு உணவளித்தால் உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் முருகப் பெருமானின் அருளால் நீங்கும். செவ்வாய் பகவானின் முழுமையான அருளைப் பெற உங்கள் வலது கை மோதிர விரலில் வெள்ளியில் செய்யப்பட்டன மோதிரத்தில் தரமான சிவப்பு பவளம் பதித்து ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமையன்று அணிந்து கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
உங்கள் கடன் தொல்லைகள், குடும்ப கஷ்டங்கள் தீர இவற்றை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Chithirai nakshatra dosha pariharam in Tamil. It is also called or Chithirai natchathiram in Tamil or Chithirai natchathiram devathai in Tamil or Chithirai natchathiram rasi in Tamil or Chithirai natchathiram adhipathi in Tamil.

- Advertisement -