- Advertisement -
சமையல் குறிப்புகள்

செட்டி நாட்டு சுவையில் சூப்பரான மட்டன் கோலா உருண்டையை இந்த சின்ன சின்ன ட்ரிக்ஸ் பயன்படுத்தி செஞ்சு பாருங்க. அப்புறம் கோலா உருண்டை செய்வதில் உங்களை அடிச்சுக்க ஆளே இல்லை.

- Advertisement -

செட்டிநாட்டு உணவு வகைகள் அனைத்துமே கொஞ்சம் வித்தியாசமாகவும் அதே சமயம் மிகவும் ருசியாகவும் இருக்கும். அப்படி ஒரு சுவையான ரெசிபி தான் இந்த மட்டன் கோலா உருண்டை. இந்த கோலா உருண்டையை சுவையாகவும், சுலபமாகவும் எப்படி செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவு தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

மட்டன் -1/2, தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன், பொட்டு கடலை – 1 டேபிள் ஸ்பூன், கசகசா – 1ஸ்பூன், சோம்பு -1 ஸ்பூன், ஏலக்காய் – 2 , பட்டை -2, லவங்கம் – 2, பிரியாணி இலை – 2, வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 4, கொத்தமல்லி – 1 கை பிடி (பொடியாக நறுக்கியது), இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், உப்பு -1/2 ஸ்பூன்,மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன், சீரகத்தூள் – 1 ஸ்பூன், எண்ணெய் பொரிக்க – 250 கிராம்.

- Advertisement -

செய்முறை

இதற்கு அரை கிலோ எலும்பில்லாத கறியாக வாங்கிக் கொள்ளுங்கள். கடையில் கொத்துக்கறி என்று கேட்டால் கொடுப்பார்கள் அப்படி கூட வாங்கிக் கொள்ளலாம். இதை வாங்கி வந்து நன்றாக அலசி தண்ணீர் இல்லாமல் சுத்தமாக வடித்து மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் ஒரு பௌலில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து அதே ஜாரில் பொட்டுக்கடலை, சோம்பு, கசகசா, தேங்காய், பட்டை, லவங்கம், கிராம்பு, பிரியாணி இலை, அனைத்தையும் சேர்த்து இதையும் நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்து அதையும் மட்டனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அது கடைசியாக வெங்காயம், பச்சை மிளகாய், இரண்டையும் சேர்த்து ஒரு சுற்று மட்டும் விட்டு எடுத்தால் போதும் தண்ணீர் சேர்க்க வேண்டாம். அதே நேரம் அதிக மைய அறைக்கக் கூடாது. இதையும் ஏற்கனவே அரைத்து வைத்த மட்டனுடன் சேர்த்த பிறகு உப்பு, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து, சின்ன சின்ன உருண்டையாக பிடித்து ஒரு தட்டில் வைத்து பிரிசரில் வைத்துக் எடுத்து விடுங்கள். இப்படி செய்யும் போது உருண்டை உதிராமல் வரும்.

இப்போது கோல உருண்டை பொரித்து எடுக்க, அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் மிதமாக தீயில் வைத்து உருண்டைகளை எடுத்து ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு விடுங்கள். இதை போட்ட உடனே திருப்பி விடக் கூடாது. ஒரு புறம் நன்றாக வெந்த பிறகு மறுப்புறம் திருப்பி போட்டு எடுத்து வைத்து விடுங்கள்.

- Advertisement -

செட்டி நாட்டு சுவையில் மட்டன் கோலா உருண்டை தயாராகி விட்டது. இந்தக் கோலா உருண்டை செய்யும் போது தண்ணீர் அதிகமாகி விட்டால் உருண்டை பிடிக்க முடியாது. அது போன்ற சமயங்களில் கொஞ்சம் பொட்டுக்கடலை மாவை கலந்து உருண்டை பிடித்தால் உதிராமல் வரும். உருண்டை நல்ல சாப்டாக வர ஒரு முட்டையை உடைத்து ஊற்றி பிசைந்தாலும் உருண்டை நல்லா சாப்டா வரும்.

இதையும் படிக்கலாமே: பொடி தோசை, பொடி இட்லி, சூடான சாதத்துடன் சாப்பிட ஆந்திரா ஸ்டைல் நல்ல காரம் பொடி சுலபமாக வீட்டிலேயே செய்வது எப்படி?

இனி நீங்கள் கோலா உருண்டை செய்யும் போது இந்த சின்ன சின்ன குறிப்புகளை பயன்படுத்தி செய்து பாருங்கள் மிகவும் அருமையான கோலா உருண்டையை செய்து விடலாம்.

- Advertisement -