
வீட்டில் இருக்கும் வேலைகளிலே கொஞ்சம் அதிகமான நேரத்தை செலவழிக்க கூடிய வேலை என்றால் அது துணி துவைக்கும் வேலை தான். இதில் குழந்தைகளின் துணிகளை துவைப்பது தான் பெரிய வேலை. அதிலும் இந்த யூனிபார்ம் துவைப்பது எல்லாம் சொல்லவே தேவையில்லை. ஏதாவது விடாப்பிடியான கறையை தேய்த்துக் கொண்டு வந்து விடுவார்கள். அதை சுத்தம் செய்வதற்குள் நமக்கு போதும் போதும் என்று ஆகி விடும். இனி எவ்வளவு நாள்பட்ட கறையாக இருந்தாலும் சரி எப்பேர்பட்ட விடாப்பிடியான கறையாக இருந்தாலும் சரி சட்டுனு போக்கக் கூடிய ஒரு சூப்பர் டிப்ஸை இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் தெரிஞ்சுக்கலாம் வாங்க.
துணிகளில் உள்ள விடாப்பிடியான கறைகளை எளிதில் போக்க
துணிகளை துவைக்கும் போது எப்போதுமே நாம் சாயம் போகும் துணி, அழுக்கு அதிகமான துணி என தனித்தனியாக பிரித்து தான் துவைப்போம். எப்படியானாலும் சில துணிகளை நாம் கையில் தேய்த்தால் தான் அந்த கறைகள் போகும். இந்த ஒரு ட்ரிக்ஸ் மட்டும் உங்களுக்கு தெரிஞ்சிருச்சுன்னா துணி துவைக்கிற வேலை உங்களுக்கு ரொம்ப சுலபமா போயிரும்.
பொதுவாக துணிகளில் அதிக கறை படிந்து விட்டால் அந்த துணியை தனியாக எடுத்து விடுங்கள். இதை மற்ற துணிகளோடு போடாமல் இருப்பது நல்லது. அது மட்டும் இன்றி கறைப்படிந்த இடத்தை மட்டும் முதலில் சுத்தம் செய்த பிறகு அந்தத் துணியை துவைப்பது நல்லது. இல்லையெனில் ஓரிடத்தில் இருக்கும் கறை துணி முழுவதும் பரவுவதற்கான வாய்ப்பு அதிகம் இதனால் துணி வீணாகி விடும்.
இப்போது துணியை சுத்தப்படுத்த பயன்படுத்தும் அந்த பொருளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். இதற்கு நாம் பயன்படுத்தும் பொருள் முட்டை ஓடு தான். என்ன முட்டை ஓடா என்று நீங்கள் ஆச்சரியப்படுவது புரிகிறது. ஆம் முட்டையோடை வைத்து தான் இப்போது சுத்தம் செய்ய போகிறோம். வீட்டில் முட்டை சமைத்த பிறகு ஓட்டை கீழே தான் போட்டு விடுவோம். இது பச்சை முட்டையின் ஓடாக இருந்தாலும் சரி, வேக வைத்ததாக இருந்தாலும் சரி அந்த முட்டை ஓட்டை ஒரு முறை தண்ணீரில் நன்றாக அலசிய பிறகு வெயிலில் காய வைக்க வேண்டும்.
இப்படி காய வைத்த முட்டை ஓடுகளை கொஞ்சமாக சேர்ந்த பின்பு அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து பல்ஸ் மோடில் விட்டு எடுத்தால் நல்ல பவுடர் பதத்திற்கு கிடைத்து விடும். இதை ஒரு பாக்ஸில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். இப்போது கறை படிந்த துணியை எடுத்து அதில் கறை உள்ள இடத்தில் மட்டும் இந்த முட்டை ஓட்டின் தோலை தூவி விடுங்கள். அதன் பிறகு அதன் மேல் கொஞ்சம் எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு டூத் பிரஷ் வைத்து லேசாக தேய்த்துக் கொடுங்கள்.
கறை கொஞ்சமாக இருந்தால் பிரஷ் வைத்து கூட தேய்க்க வேண்டாம். எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு கைகளால் லேசாக கசக்கினாலே கறை முழுவதும் போய் விடும். ஒரு வேளை நாள்பட்ட கறை விடாப்படியாக பிடித்துக் கொண்டிருக்கிறது என்றால் அந்த இடத்தில் டூத்பிரஷ் வைத்து லேசாக தேய்த்துக் கொள்ளுங்கள். கறை இருந்த இடமே தெரியாத அளவிற்கு மறைந்து விடும். சிலருக்கு துணி துவைக்கும் போது அதில் நுரை வந்தால் தான் பிடிக்கும் அப்படியானவர்கள் கொஞ்சமாக சோப்புத் தூள் அல்லது லிக்விட் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் இது அவசியம் கிடையாது என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே: இனி பூரி சுடும் போது இதில் போட்டு எடுத்த பிறகு சுட்டு பாருங்கள் கொஞ்சம் கூட எண்ணெய் நிறம் மாறாமல் அடியில் கசடு தங்கி வீணாக்காமல் எண்ணெய் அப்படியே இருக்கும்.
இது மிக மிக எளிமையான ஒரு வழி தான். வீணாக தூக்கி போடும் பொருளை எடுத்து பவுடர் செய்து வைத்துக் கொண்டால் போதும். நமக்கு இது போல தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். துணிகளின் கறைகளை போக்க பயன்படுத்தும் இந்த ட்ரிக்ஸ் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.