இந்த வீட்டு வேலைகளை தினம் தினம் நாம் செய்து கொண்டே தான் இருக்கிறோம். அப்படி செய்யும் இந்த வேலைகளில் ஒரு சில சின்ன குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொண்டால் கஷ்டப்பட்டு செய்யும் வேலைகளை சுலபமாக செய்து விட முடியும். இதனால் நமக்கு நிறைய பணம் மிச்சமாவதுடன் நேரமும் மிச்சமாகும். அப்படி ஒரு சில பயனுள்ள டிப்ஸை பற்றி தான் இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
நாம் எப்போதும் பூரி சுடும் போது அதற்கு மேல் மாவாக கோதுமை மாவை தான் தூவி திரட்டுவோம். அப்படி செய்து சுடும் பூரியில் இருந்து மாவு உதிர்ந்து அடியில் கசடு போல தங்கி எண்ணெய் முழுவதும் நிறம் மாறி விடும். அதன் பிறகு அந்த எண்ணெயை பயன்படுத்த கஷ்டமாகத் தான் இருக்கும். இனி நீங்கள் பூரி திரட்டும் போது மேல் மாவாக மைதா மாவு அல்லது மைதா மாவுடன் கொஞ்சமாக கான்பிளவர் மாவு கலந்து தேய்த்த பின் பூரி சுட்டுப் பாருங்கள். அடியில் கசடும் தாங்காது எண்ணெய்யும் நிறம் மாறாது. இதே எண்ணெயை மறுபடியும் பயன்படுத்தலாம்.
அடுத்து சப்பாத்தி பூரி மாவு திரட்டிய பிறகு அதிகமாகி விட்டால், நாம் அதை பிரிட்ஜில் தான் ஸ்டோர் செய்து வைப்போம். மறுபடியும் நாம் சப்பாத்தி செய்யும் போது அந்த மாவை வெளியில் எடுத்து வைத்து சிறிது நேரம் கழித்து தான் செய்ய முடியும். சில நேரங்களில் வெளியில் எடுத்து வைக்க மறந்தும் விடுவோம். இப்படியான சமயத்தில் ஹாட் பாக்ஸில் நல்ல சூடான தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் எடுத்து வைத்திருக்கும் மாவை ஒரு கிண்ணத்தில் போட்டு வைத்து மூடி விட்டு ஐந்து நிமிடம் கழித்து எடுத்துப் பாருங்கள் அப்போது திரட்டிய மாவு போல சாப்டாக இருக்கும்.
வீடு நறுமணமாக இருக்க நம் என்னென்னவோ வழிமுறைகளை எல்லாம் கடைப்பிடித்துக் கொண்டிருப்போம். இந்த சிம்பிள் டெக்னிக்கை ஃபாலோ பண்ணி பாருங்க உங்கள் வீட்டில் அனைத்து இடங்களும் எப்போதும் நறுமணத்துடனே இருக்கும். இதற்கு நாப்கின் அல்லது டைப்பர் இரண்டில் எது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சமாக கம்போர்ட் ஊற்றி அது ஊறும் வரை விட வேண்டும். அதன் பிறகு இதை வீட்டு நிழலில் ஒரு நாள் வரை ஆற வைத்து விடுங்கள். ஆற வைத்த டைப்பரை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி உங்கள் வீட்டில் துணிகள் அடுக்கி வைக்கும் செல்ப், ஹால், பாத்ரூம் கிச்சன் போன்ற இடங்களில் எல்லாம் ஒரு துண்டு வைத்து விட்டால் போதும். வீடு எப்போதும் நறுமணத்துடன் இருக்கும்.
நம் எல்லோர் வீட்டிலும் இட்லி வேக வைக்கும் பாத்திரம் நிச்சயமாக இருக்கும். அதில் நாம் தண்ணீர் ஊற்றும் இடம் மட்டும் உப்பு கறை படிந்து நிறம் மாறி இருக்கும். இதை எப்படி தேய்த்தாலும் பழைய நிறத்திற்கு வராது. இந்த பாத்திரத்தை கூட நாம் பழையபடி மாற்ற அதிகமாக புளித்த மாவுடன் கொஞ்சமாக சோடா மாவு சேர்த்து பாத்திரத்தில் உள்ளே உப்பு கறை படிந்து இடத்தில் எல்லாம் தேய்த்து விடுங்கள். ஐந்து நிமிடம் கழித்து பாத்திரம் தேய்க்கும் நார் வைத்து தேய்த்தால் பாத்திரம் முழுவதும் ஒரே நேரத்திற்கு மாறி விடும்.
கொண்டைக்கடலை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது ஆனால் அதை சாப்பிட்டால் நிறைய பேருக்கு வாய்வு தொல்லை செரிமான தொல்லை வரும். இனி கொண்டைக்கடலையை வேக வைத்து தண்ணீர் வடித்து விட்ட பிறகு, அரை எலுமிச்சை பழத்தை அதன் மேல் பிழிந்து சிறிது நேரம் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு நீங்கள் சமைத்தால் கொண்டைக்கடலையினால் ஏற்படும் வாய்வு பிரச்சனை நெஞ்செரிச்சல் எதுவும் இருக்காது.
இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் உள்ள தகவல்கள் உங்களின் அன்றாட வாழ்வைக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என நினைத்த நீங்கள் பயன்படுத்தி பலன் அடையுங்கள்.