
முடி உதிர்தல் பிரச்சனைக்கு சிறந்த தீர்வு தருவதில் தேங்காய் பால் முக்கியமான பங்கு வகிக்கிறது. தேங்காய் பால் இயற்கையான நன்மைகளைக் கொண்டுள்ளது. இதில் இருக்கும் நற்குணங்கள் தலைமுடிக்கு பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது. தேங்காய் பாலை வைத்து 3 விதமான வழிகளில் எப்படி தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்தி வேகமாக முடியை காடு போல அடர்த்தியாக வளர செய்வது? என்னும் அழகு குறிப்பு தகவல்களை தான் தொடர்ந்து காண இருக்கிறோம்.
தேங்காய் பாலில் இருக்கும் லாரிக் அமிலம் தலைமுடியை ஆரோக்கியமாக வளர செய்யும். வெளிப்புறத்தில் இருந்து தலைமுடிக்கு உண்டாகும் மாசுகளில் இருந்து பாதுகாக்கும். இயற்கையான கண்டிஷனிங் போல செயல்படும். தலை முடியை மிருதுவாகவும், மென்மையாகவும், ஆழமாக ஈரப்பதத்துடனும் வைத்துக் கொள்ளும். இதனால் தலைமுடி உதிர்வது கட்டுப்படும்.
முதலில் இரண்டு மடங்கு தேங்காய் பாலுடன், ஒரு மடங்கு கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்கு கலக்குங்கள். கற்றாழை மடலை பிரித்து கிடைக்கும் ஜெல்லை பலமுறை அலசிய பின்பு அதனை தேங்காய் பாலுடன் சேர்த்து அரைக்க வேண்டும். இந்த மாஸ்கை குளிக்கப் போவதற்கு அரை மணி நேரம் முன்பு போட்டு ஊற விடுங்கள். அதன் பிறகு நீங்கள் வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்தால் தலைமுடி வேர்க்காலில் இருந்து நல்ல ஊட்டச்சத்து கிடைத்து வலுவாகும்.
இரண்டாவதாக ஒரு கப் தேங்காய் பாலுடன், ஒரு எலுமிச்சை பழத்தை முழுதாக பிழிந்து கலந்து வையுங்கள். இந்த கலவையை ஃப்ரிட்ஜில் நான்கு மணி நேரம் அப்படியே கொண்டு போய் வையுங்கள். அதன் பிறகு நீங்கள் தலைமுடிக்கு மாஸ்க் போல நன்கு எல்லா இடங்களிலும் படும்படி தடவி விடுங்கள். பிறகு அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் குளியுங்கள். வலுவிழந்த கேசத்தையும், சீர் செய்து மீண்டும் வலுவாக்கும் அற்புதமான பேக் இது! வாரம் ஒரு முறை செய்தால் தலைமுடி ஆரோக்கியம் பெறும்.
அடுத்ததாக ஒரு கப் தேங்காய் பாலுடன் மூன்று டேபிள் ஸ்பூன் அளவிற்கு தேன் சேர்த்து கலந்து வையுங்கள். இந்த கலவையை நன்கு கலந்த பின்பு தலைமுடி முழுவதும் மாஸ்க் போல போட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முடியை அலச, பட்டு போல முடி நன்கு மிருதுவாக மின்னும். தேங்காய் பாலில் இருக்கக்கூடிய வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவை முடிக்கு ஊட்டச்சத்து கொடுத்து உதிர்தலில் இருந்து பாதுகாக்கிறது. பின்பு முடியை வேகமாக வளரவும் வைக்கிறது.
இதையும் படிக்கலாமே:
எமகண்ட நேரத்தில் விநாயகர் வழிபாடு
வைட்டமின் ஈ நிறைந்த தேங்காய் பால் முடியை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்வதால் சீக்கிரம் உடைவதில்லை. இதில் இருக்கும் லாரிக் அமிலம் நுண்ணுயிர் சத்துக்களை கொடுப்பதால், தலையில் எளிதாக ஊடுருவி சென்று வேரிலிருந்து வலுப்படுத்த உதவுகிறது. தலைமுடியை தொந்தரவு செய்யும் பொடுகு தொல்லையிலிருந்து நிவாரணம் கொடுக்கிறது. மேலும் பல்வேறு விதமான பூஞ்சைகளுக்கு எதிராக செயல்பட்டு தலை முடியை ரொம்பவும் ஆரோக்கியத்துடன் பாதுகாக்கும், இந்த தேங்காய் பால் மாஸ்க் பல வழிகளில் நீங்களும் பயன்படுத்தி தலை முடியை இழக்காமல் தக்க வைத்துக் கொள்ளுங்கள். தலைமுடி உதிர்தல் பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே சமாளித்து விட்டால் சுலபமாக இருக்கும்.