காரிய தடை விலக வேண்டும் என்றால் விநாயகர் வழிபாடு செய்வது சிறப்பு என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் விநாயகரை பின் சொல்லக்கூடிய முறைப்படி, எமகண்ட நேரத்தில் வழிபாடு செய்து பாருங்கள். உங்களுக்கான வெற்றி பல மடங்கு கிடைக்கும். காரிய தலைகள் உடனடியாக விலகும். பல முறை முயற்சி செய்து தோற்றுப் போன ஒரு விஷயத்தில், ஜெயிக்க வேண்டும் என்றால், விநாயகரை எப்படி வழிபாடு செய்வது. ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
எமகண்ட நேரம் விநாயகர் வழிபாடு
தினம்தோறும் வரக்கூடிய எமகண்ட நேரத்தில், விநாயகர் வழிபாடு செய்தால், உங்களுடைய வாழ்க்கையில் காரிய தடை இருக்காது. உங்கள் வீட்டு பக்கத்தில் எந்த விநாயகர் கோவில் இருந்தாலும் அதை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். தினம் தோறும் வரக்கூடிய எமகண்ட நேரத்தில், விநாயகர் கோவிலுக்கு சென்று 2 அருகம்புல் போட்டு, ஒரு கட்டி கற்பூரம் ஏற்றி, விநாயகரை 8 முறை வலம் வர வேண்டும். இவ்வளவுதான் பரிகாரம். தினமும் உங்களால் எமகண்ட நேரத்தில் விநாயகரை வழிபாடு செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை.
வாரந்தோறும் வெள்ளிக்கிழமை 3:00-4:30 மணி வரை எமகண்ட நேரம் வரும். அந்த நேரத்தில் விநாயகர் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த நேரத்தில் விநாயகரை எட்டு முறை வலம் வரும்போது, நிச்சயமாக உங்களுடைய வாழ்வில் வெற்றி கிடைக்கும். சில இடங்களில் விநாயகர் கோவில் இந்த குறிப்பிட்ட எமகண்ட நேரத்தில் திறந்து இருக்காது. அப்போது என்ன செய்வது. நம்முடைய ஊர்களில் விநாயகர் கோவிலுக்கு பஞ்சமே இல்லை.
தெரு முனையில் கூட ஒரு பிள்ளையார் இருப்பார். அந்தப் பிள்ளையாரை கூட நீங்கள் தாராளமாக வழிபாடு செய்யலாம் தவறே கிடையாது. அரச மரத்தடியில் ஒரு பிள்ளையார் இருக்காரா, அவரை போய் வழிபாடு செய்யுங்கள். தவறே கிடையாது. சரி இந்த எமகண்ட நேரத்தில் நாங்கள் வீட்டில் இருக்க மாட்டோம். அலுவலகத்தில் இருப்போம் என்ன செய்வது.
எமகண்ட நேரம் வந்துவிட்டது என்றால், இருந்த இடத்திலிருந்து “ஓம் விக்ன விநாயகா போற்றி போற்றி” என்ற மந்திரத்தை சொல்லி ஒரு நிமிடம் விநாயகரை நினைத்து வழிபாடு செய்யுங்கள். உங்களுக்கான நல்லது நிச்சயம் உங்களை தேடி வரும். தொடர்ந்து 11 நாட்கள் எமகண்ட நேரத்தில் மனம் உருகி விநாயகரை வழிபாடு செய்து முடித்துவிட்டு, முடியவே முடியாது என்ற காரியத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டு பாருங்கள்.
இதையும் படிக்கலாமே: நல்லது நடக்க பரிகாரம்
நிச்சயமாக உங்களுடைய முயற்சிகள் வெற்றி அடையும். எமகண்ட நேரம் என்பது தவறான நேரம் கிடையாது. அந்த நேரத்தைக் கண்டு யாரும் பயப்பட வேண்டாம். எமகண்ட நேரத்திற்கும் நல்லது செய்யக்கூடிய தன்மை உண்டு என்பதற்காக தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் உங்களுடைய காரிய தடைகள் விலக வேண்டும், நீங்கள் எல்லா விஷயத்திலும் சீக்கிரம் ஜெயிக்க வேண்டும் என்றால் எமகண்ட நேரத்தில் விநாயகர் பாதங்களை பற்றி கொள்வது தான் ஒரே வழி என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.