- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

உங்களின் கடன் தொல்லைகள், குடும்ப கஷ்டங்கள் தீர இவற்றை கட்டாயம் செய்யுங்கள்

இந்து மதப் புராணங்களில் காக பறவை நவகிரகங்களில் ஆயுள் காரகனாக சனீஸ்வர பகவானின் வாகனம் என கருதப்படுகிறது. மேலும் மறைந்த நமது முன்னோர்கள் காகத்தின் வடிவத்தில் தோன்றி நம்மை காப்பதாக ஒரு ஐதீகம். தினந்தோறும் அந்த காகங்களுக்கு உணவு வைப்பதால் காகத்தின் வடிவில் இருக்கும் முன்னோர்கள் அவற்றை சாப்பிட்டு, நம்மை ஆசிர்வதிப்பதாக ஒரு ஆன்மீக ரீதியான நம்பிக்கை நெடுங்காலமாகவே இருந்து வருகிறது. பல நாட்டு கலாச்சாரங்களிலும் காக பறவைக்கு துஷ்ட சக்திகளை விரட்டும் தன்மை அதிகம் உள்ளது என நம்பப்படுகிறது. அந்த காக பறவையை மையமாக கொண்டு செய்யப்படும் ஒரு பரிகாரத்தை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நமது கலாச்சாரத்தில் தெய்வீக இடம் தரப்பட்ட காகங்களுக்கு தினந்தோறும் காலையில் உணவு வைப்பது நம்மில் பலர் பின்பற்றக்கூடிய ஒரு சிறந்த பண்பாடாகும். தினந்தோறும் காகங்களுக்கு சாதம் வைப்பவர்களுக்கு சனி பகவானின் அருள்கடாட்சம் கிடைத்து, அவர்களின் சனி கிரக தோஷங்கள் நீங்கும். எனினும் காகங்களுக்கு உணவு வைப்பதற்கு சில விதிமுறைகளை நமது சாஸ்திரங்கள் கூறியுள்ளன. அவற்றைப் பின்பற்றி செய்வதால் அனைவருமே நற்பலன்களை பெற முடியும்.

- Advertisement -

தினமும் காலையில் காகங்களுக்கு உணவு வைப்பவர்கள் தாங்கள் உண்ணுகின்ற உணவில் இருந்து ஒரு பகுதி உணவை மட்டுமே காகங்களுக்கு உணவாக வைக்கவேண்டும். இப்படி செய்வதால் நமது முன்னோர்கள் மற்றும் சனிபகவானின் அருள் கிடைக்க வழிவகை செய்கிறது. காகங்களுக்கு முன் தினம் மீதமான பழைய உணவுகள், நாம் சாப்பிட்ட பிறகு மீதமிருக்கும் எச்சில் உணவுகளை வைக்கக்கூடாது. இப்படி செய்வதால் நமக்கு தோஷங்கள் மட்டுமே ஏற்படும். அதே போன்று காகத்திற்கு உணவு வைத்து பிறகு அதன் அருகிலேயே ஒரு கிண்ணத்தில் காகங்கள் அருந்த நீர் வைப்பதே சரியான முறையாகும்.

அமாவாசை, பௌர்ணமி போன்ற தினங்களில் காய்கறிகள் சேர்த்து சமைக்கப்பட்ட புதிதாக செய்த உணவை காகங்களுக்கு வைத்த பிறகு குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் சாப்பிடுவதால் அவர்களின் குடும்பத்தில் ஏற்பட்டிருக்கின்ற கஷ்டங்கள் கூடிய விரைவில் முடிவுக்கு வரும். சிலர் அமாவாசை, பௌர்ணமி திதிகளில் காகங்களுக்கு எள் கலந்த சாதத்தை வைக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் அந்த எள் கலந்த சாதத்தில் சுத்தமான பசுந்தயிரையும் சேர்த்து கலக்கி, காகங்களுக்கு உணவாக வைப்பது அவர்களின் பித்ரு தோஷங்கள், குழப்பங்கள் போன்ற அனைத்தையும் நீக்கவல்லதாக இருக்கிறது.

- Advertisement -

மேலும் ஒரு நபர் வைக்கின்ற உணவினை பல காகங்கள் சூழ்ந்து உண்பதால் வெகு விரைவில் அவரின் கிரக தோஷங்கள், கஷ்டங்கள் அனைத்தும் தீர போகிறது என்பதைக் காட்டும் ஒரு அறிகுறி என முன்னோர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் ஒரு நபர் வைக்கின்ற உணவை எந்த ஒரு காகமும் சாப்பிடாத பட்சத்தில் அவரின் தோஷங்கள் மற்றும் பாவக் கணக்குகள் இன்னும் தீரவில்லை என்பதை குறிக்கிறது எனவும் கூறுகிறார்கள். மேற்கண்ட விதிகளை பின்பற்றி காகங்களுக்கு உணவு வைப்பதால் நம்முடைய தோஷங்கள், கஷ்டங்கள், கடன் தொல்லைகள் போன்றவை அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பான வாழ்க்கை ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
உங்கள் கடன் பிரச்சனை தீர இந்த தாந்திரீக பரிகார முறையை பின்பற்றுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Crow feeding rules in Tamil. It is also called as Sani dosham in Tamil or Selvam peruga in Tamil or Kastangal neenga in Tamil or Kakkaiku unavu in Tamil.

- Advertisement -