- Advertisement -

தோஷங்களில் மிக கொடுமையான தோஷம் பித்ரு தோஷம் என்று கூறினால் அது மிகையாகாது. கடவுள் நமக்கு கொடுக்க நினைக்கும் வரங்களையே தடுக்கும் சக்தி இந்த பித்ரு தோஷத்திற்கு உண்டு. இப்படி பட்டி கொடிய தோஷம் எதனால் வருகிறது? பித்ரு தோஷம் இருந்தால் என்ன துன்பங்கள் ஏற்படும்? அதற்கான பரிகாரங்கள் என்ன? இப்படி பல தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம்.

நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆன்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் தான் பித்ரு தோஷம்.

- Advertisement -

பித்ரு தோஷத்தினால் ஏற்படும் தீய விளைவுகள் :

இந்த தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்காது அல்லது மிகவும் தாமதமாக நடக்கும். விவாகரத்து ஏற்படலாம். அல்லது தம்பதியினரிடையே அன்னியோன்னியம் இருக்காது. அல்லது குழந்தைப் பாக்கியம் இருக்காது. ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதைகள் ஏற்படும். மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும். ஒரு சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு.

கலப்புத் திரும ணம் நடக்கவும், பெற்றோருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. இந்த தோஷம் உள்ள சில தம்பதிகள் ஒருவருக்கொருவர் உண்மையானவர்களாக நடந்து கொள்வதில்லை. இந்த தோஷம் கடுமையாக உள்ள சில குடும்பங்களில் மூளை வளர்ச்சி இல்லாத மாற்று திறனாளி குழந்தை பிறக்கலாம்.

- Advertisement -

பித்ரு தோஷம் வருவதற்கான கரணங்கள்

கருச் சிதைவு செய்து கொண்டால், இந்த தோஷம் வரும். பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மனவேதனை அடைந்தால், பித்ரு தோஷம் வரும். ஒருவரின் இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல், திவசம் செய்ய வேண்டும்.

ஆண் வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை, சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்கா விட்டால் வரும். துர்மாணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப் பதோடு மட்டுமின்றி கயா சென்று கூப சிரார்த்தம் செய்யா விடில் பித்ருதோஷம் வரும்.

- Advertisement -

பித்ரு தோஷம் நீங்க பரிகாரம்

ராமேசுவரம் சென்று சில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரி நாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம். குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்து கொண்டிருந்தாலோ மட்டுமே திலஹோமம் செய்ய வேண்டும். அனைவரும் இயற்கைமரணம் அடைந் திருந்தால், தில ஹோமம் செய்ய வேண்டிய தில்லை.

தாய் தந்தையருக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமைகளை சரியாக செய்வதோடு. நமது முன்னோர்களை முறையாக வழிபட்டால் இதுபோன்ற தோஷங்களில் இருந்து தப்பிக்கலாம்.

இதையும் படிக்கலாமே:
திருவண்ணாமலை கோவிலுக்கு வந்த பேராபத்தை அண்ணாமலையாரே எதிர்கொண்ட உண்மை சம்பவம்

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள், மந்திரங்கள், ஜோதிட குறிப்புகள் பலவற்றை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

English overview:
Here we discussed Pithru dosham pariharam in Tamil. Pithru dosham is a very powerful dosham which can stop anything.

- Advertisement -
Published by