- Advertisement -
வீட்டு குறிப்புகள்

உங்க வீடு, தோட்டம் என ஒரு இடத்தையும் மிச்சம் வைக்காம நாசப்படுத்துற இந்த எளிய சுலபமா ஒழிக்க இதில் ஒரு உருண்டையை மட்டும் போடுங்க போதும்.

- Advertisement -

இந்த எலி தொல்லை என்பது பெரும்பாலும் அனைவருமே சமாளிக்க கூடிய பெரிய பிரச்சனை என்று தான் சொல்ல வேண்டும். அது வீடா இருக்கட்டும் தோட்டமாக இருக்கட்டும் எங்கு பார்த்தாலும் இந்த எலிகளின் அட்டகாசம் நம்மால் சகித்துக் கொள்ளவே முடியாது. இந்த எலிகள் ஒரு முறை வீட்டிற்குள் வந்து எதையாவது கடிக்க பழகி விட்டால் அதன் பிறகு அதன் தடுக்கவே முடியாது இது எலிகளின் குணாதிசயம். இதில் மற்றொரு முக்கிய காரணம் எலிகளின் பற்கள் தினமுமே வளரும் தன்மையுடையத. இதனால அது எதையாவது கடித்தால் தான் அதன் வளர்ச்சி தடைப்படும்.

இந்த எலி தொல்லையால் தோட்டத்திலும் கூட நாம் ஆசையாக எந்த செடியோ நடவே முடியாது. நாம் ஒவ்வொரு செடியையும் ஆசையாக பார்த்து பார்த்து நட்டு வளர்ப்போம். இது திடீரென வந்து அனைத்தையும் கடித்து குதறி நாசப்படுத்தி விடும். இப்படி அனைத்தையும் நாசப்படுத்தக் கூடிய எலிகளை சாகடிக்காமல் எளிமையாக எப்படி விரட்டுவது என்பதை பற்றி தான் இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

பொதுவாக எலிகளுக்கு புதினா இலைகளை வாசம் சுத்தமாக பிடிக்கவே பிடிக்காது. ஆகையால் தோட்டத்தில் இந்த எலிகள் வராமல் இருக்க ஆங்காங்கே புதினா செடிகளை நட்டு விட்டால் இந்த வாசம் வீசும் திசை பக்கமே இந்த எலிகள் வராது. சரி வீட்டிற்குள் இருக்கும் எலிகளை எப்படி விரட்டுவது என்று பார்க்கலாம்.

இதற்கு சிறிதளவு வேர்கடலையை வறுத்து அதை பொடி செய்து எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் இத்துடன் கொஞ்சமாக அரிசி மாவு அல்லது கோதுமை மாவு கலந்து கொள்ளுங்கள். இவை இரண்டையும் நன்றாக கலந்த பிறகு இரண்டு பாரசிட்டமில் மாத்திரை எடுத்து தூள் செய்து பவுடராக்கி அதையும் இதில் சேர்த்து லேசாக தண்ணீர் ஊற்றி சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த உருண்டைகளை உங்கள் வீட்டில் எலி வரும் திசை எதுவோ அங்கெல்லாம் வைத்து விடுங்கள். இந்த உருண்டைகளை சாப்பிட்ட பிறகு எலி நாம் இருக்கும் திசை பக்கமே வராது. ஏனென்றால் எலிகளை பொறுத்த வரையில் ஒரு முறை அதற்கு பிடிக்காத பொருளையோ பிடிக்காத வாசனையும் ஒரு இடத்தில் உணர்ந்து விட்டால் மறுபடியும் அந்தப் பக்கமே வராது.

இதையும் படிக்கலாமே: உங்கள் வீட்டில் விடாப்பிடியான அழுக்கு துணிகளையும், பழுப்பு நிறத்தில் மாறிப்போன வெள்ளை துணிகளையும் மீண்டும் பளிச்சென்று மாற்ற இந்த 1 பொருளை துவைக்கும் பொழுது பயன்படுத்தி பாருங்கள்!

எலிகளை விரட்ட இந்த எளிய வழியை நீங்களும் பின்பற்றி பாருங்கள். இதைத் தோட்டம் வீடு என அனைத்து இடத்திலும் பயன்படுத்தலாம். குழந்தைகள் இருக்கும் வீட்டில் மிகவும் கவனமாக இந்த உருண்டைகளை வைத்து விடுங்கள். குழந்தைகள் தெரியாமல் எடுத்து சாப்பிடக் கூடிய வாய்ப்புகள் அதிகம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

- Advertisement -