உங்கள் வீட்டில் விடாப்பிடியான அழுக்கு துணிகளையும், பழுப்பு நிறத்தில் மாறிப்போன வெள்ளை துணிகளையும் மீண்டும் பளிச்சென்று மாற்ற இந்த 1 பொருளை துவைக்கும் பொழுது பயன்படுத்தி பாருங்கள்!

dirty-clothes
- Advertisement -

வீட்டில் நாம் பயன்படுத்தும் துணிமணிகளை பத்திரமாக நீண்ட நாட்களுக்கு அதே போல வைத்து பாதுகாப்பது என்பது சற்று சிரமமான காரியம் தான். அதுவும் இப்பொழுது கையில் துவைக்காமல், மெஷின் வாஷ் செய்வதால் துணிகள் சீக்கிரமே வீணாகி விடுகிறது. விடாப்பிடியான அழுக்கு துணிகளை மற்றும் பழுப்பு நிறமாக மாறிய வெள்ளை துணிகளை கூட புதுசு போல பளிச்சுன்னு மாற்ற நீங்கள் துவைக்கும் பொழுது இந்த ஒரு பொருளை பயன்படுத்தி பாருங்கள். அது என்ன பொருள்? அதை எப்படி பயன்படுத்துவது? என்பதை தான் இந்த வீட்டுக்குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

வாங்கிய புதிதில் வெள்ளை துணிமணிகள் பார்ப்பதற்கு ஜொலிப்பாக நன்றாகத் தான் இருக்கும். பயன்படுத்த பயன்படுத்த அது வெள்ளை நிறத்தில் இருந்து பழுப்பு நிறமாகவே மாறிப் போய்விடும். வாஷிங்மெஷினில் துவைத்தால் கண்டிப்பாக வெள்ளைத்துணிகள் நீண்ட நாட்களுக்கு அதே நிறத்தில் வைத்துக் கொள்ள முடியாது. மற்ற துணிமணிகளுடன் சேர்த்து வெள்ளை துணிகளை போடுவதால் இந்த நிலைமை சீக்கிரமே வந்து விடுகிறது.

- Advertisement -

இப்படி பழுப்பு நிறத்தில் மாறிய வெள்ளைத் துணிகளை மீண்டும் பளிச்சென மாற்றுவதற்கு பாதி பாக்கெட் அளவிற்கு நன்கு வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு டிடர்ஜென்ட் லிக்விட் அல்லது டிடர்ஜென்ட் பவுடர் ஏதாவது ஒன்றை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் அரை மூடி எலுமிச்சை பழத்தை பிழிந்து கொள்ளுங்கள். எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் வினைபுரிந்து அழுக்குகளை விரைவாக அகற்றும்.

பின்னர் இதனுடன் ஒரு ஸ்பூன் வாஷிங் சோடா அல்லது பேக்கிங் சோடா எது இருந்தாலும் அதை சேர்த்துக் கொள்ளுங்கள். வாஷிங் சோடா துணி துவைக்க பயன்படுத்தும் சோடா ஆகும். பேக்கிங் சோடா எனப்படுவது நாம் வீட்டில் இட்லி மாவு அரைக்கும் போது பயன்படுத்தும் ஆப்ப சோடா ஆகும். நன்கு கலந்து விட்டு வெள்ளை துணிகளை இதில் மூழ்கும்படி செய்து ஒரு மணி நேரம் ஊற வையுங்கள்.

- Advertisement -

நன்கு ஊறிய பிறகு துணிகளை எப்பொழுதும் போல கையில் துவைப்பவர்கள் சோப்பு போட்டு துவைக்கலாம். மெஷினில் போடுபவர்கள் மெஷினில் போட்டு வழக்கம் போல் துவைத்துக் கொள்ளுங்கள். இப்படி செய்தால் வெள்ளைத்துணிகளில் இருக்கும் பழுப்பு நிறம் முற்றிலும் நீங்கி நன்கு பளிச்சென்று புதிது போல இருக்கும். எப்பொழுதும் வெள்ளை துணிமணிகளை தனியாக துவைப்பது தான் நல்லது.

இதையும் படிக்கலாமே:
இந்த ஸ்ப்ரேவை ஒரு முறை அடித்தால் போதும். உங்க வீட்டு சமையலறையில், பல்லி இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஓடி ஓடி தொல்லை கொடுக்கவே கொடுக்காது. இனிமேல் பயம் இல்லாமல் சமைக்கலாம்.

துணிமணிகள் சீக்கிரம் கிழிந்து போகாமல் இருக்கவும், துணிமணிகளில் இருக்கக்கூடிய விடாப்பிடியான கறைகள் நீங்கவும் நீங்கள் வாஷிங் மெஷினில் துணி துவைக்கும் பொழுதே ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை சாறும், ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு வினிகரும் சேர்த்து துவைத்து பாருங்கள். வினிகர் தண்ணீரை மென்மையாகுகிறது. இதனால் துணிமணிகள் சீக்கிரம் வீணாவது தடுக்கப்படும். மெஷினில் துணி துவைப்பவர்கள் மென்மையான துணிமணிகளை போடும் பொழுது டெலிகேட் பட்டனை பயன்படுத்தி துணி துவைக்கலாம். மேலும் அதிக நேரம் ட்ரையரை பயன்படுத்தாமல் இருந்தாலும் துணிமணிகளை நீண்ட நாட்களுக்கு நைந்து போகாமல் பாதுகாக்கலாம்.

- Advertisement -