- Advertisement -
- Advertisement -

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்று கூறுவார்கள். நம்முடைய உடல் எந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு தான் நம்மால் உழைக்க முடியும். அப்படி உழைத்தால் தான் நம்மால் முன்னேற முடியும். நாம் விரும்பிய வாழ்க்கையை நம்மால் அமைத்துக் கொள்ள முடியும். அதனால் எந்த அளவிற்கு உடல் ஆரோக்கியத்தோடு திகழ வேண்டுமோ அந்த அளவிற்கு ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும். அதற்குரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

அப்படி பின்பற்றியும் ஒரு சிலருக்கு உடல் உபாதைகள் என்பது ஏற்பட்டு கொண்டே இருக்கும். அதற்குரிய காரணமும் தெரியாமல் பல பேர் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு அவர்களுடைய ஜாதகத்தை பொறுத்து எதனால் நோய்கள் ஏற்பட்டிருக்கிறது என்பதை கண்டறிந்து அதற்குரிய பரிகாரங்களை செய்யும்பொழுது அந்த நோயின் தாக்கம் என்பது குறைய ஆரம்பிக்கும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நோய்கள் நீங்குவதற்கு சூரிய பகவானை எந்த முறையில் வழிபட வேண்டும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

நோய்கள் நீங்க சூரிய வழிபாடு

நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான காரணமாக திகழக்கூடியவர் சூரிய பகவான். ஒருவருடைய ஜாதகத்தில் சூரிய பகவான் சிறப்பாக இருக்கிறார் என்றால் அவர்களுக்கு உடல் ஆரோக்கியம் என்பது சிறப்பாக இருக்கும். அவர்களுடைய தலைமை பண்பு சிறந்து விளங்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சூரிய பகவானை அனுதினமும் வழிபடுபவர்களுக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும், பல நன்மைகள் கிடைக்கிறது என்று கூறப்படுகிறது. அதனால் நம்முடைய உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சூரிய பகவானை வழிபட வேண்டும்.

பொதுவாக சூரிய உதயம் ஆவதற்கு முன்பாகவே படுக்கையை விட்டு எழுந்து கொள்பவர்கள் தான் சிறந்த மனிதனாக திகழ்வார் என்று கூறப்படுகிறது. சூரிய உதயம் ஆன பிறகு எழுந்து கொள்வதால் உடல் உபாதைகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஆன்மீக ரீதியாக கூறப்படும் பொழுது யார் ஒருவர் சூரிய உதயமான பிறகும் தூங்கி கொண்டு இருக்கிறார்களோ அவர்களுக்கு அந்த இடத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்கள் வந்து சேரும் என்று கூறப்படுகிறது. அதனால் அனுதினமும் சூரிய உதயம் ஆவதற்கு முன்பாகவே எழுந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது நோய்கள் நீங்குவதற்கு சூரிய பகவானை நாம் எப்படி வழிபடுவது என்பதை பார்ப்போம். இந்த வழிபாட்டை ஞாயிற்றுக்கிழமை தோறும் தொடர்ந்து 11 ஞாயிற்றுக்கிழமை செய்ய வேண்டும். இயன்றவர்கள் தினமும் செய்யலாம். உடலும் மனமும் ஆரோக்கியமாக திகழும். இதற்கு ஒரு பித்தளை செம்பை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தண்ணீரை பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த தண்ணீரில் சிறிதளவு குங்குமம், சிவப்பு நிற மலர்கள், வெள்ளம் இவற்றை போட்டுக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது சூரிய உதயம் ஆகும் பொழுது சூரியனை பார்த்தவாறு நின்று கொள்ள வேண்டும். உங்கள் வீட்டில் செடிகள் இருக்கும் பட்சத்தில் செடிகளுக்கு முன்பாக கிழக்கு பார்த்தவாறு நின்று கொள்ளுங்கள். இப்பொழுது உங்களுடைய இரண்டு கைகளிலும் அந்த செம்பை வைத்துக்கொண்டு அப்படியே உங்களுடைய கண்களுக்கு நேராக உங்கள் கைகளை தூக்கி சூரிய பகவானை பார்த்தவாறு “ஓம் சூரியநாராயணரே போற்றி” என்னும் மந்திரத்தை மனதார கூறிக்கொண்டு செடியின் சிறிது சிறிதாக தண்ணீரை ஊற்ற வேண்டும்.

- Advertisement -

செடிகள் இல்லாதவர்கள் ஒரு சிறிய பாத்திரத்தை எடுத்து அந்த பாத்திரத்தில் ஊற்றி சூரிய பகவானை வழிபட வேண்டும். இவ்வாறு சூரிய பகவானுடைய மந்திரத்தை 108 முறை சொல்லி முடித்த பிறகு அந்த தண்ணீரை எடுத்துக் கொண்டு போய் கால் படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும். சூரிய பகவானை பார்த்தவாறு தான் மந்திரத்தை சொல்ல வேண்டும். தண்ணீரை ஊற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் சீராகும். நோய் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் நீங்கும். மன ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே:அதிர்ஷ்டம் ஏற்பட பரிகாரம்

எளிமையான இந்த சூரிய வழிபாட்டை செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் இருக்கக் கூடிய நோய்களிலிருந்து படிப்படியாக விலகுவதை உணர முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -