- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஅதிர்ஷ்டம் ஏற்பட பரிகாரம்

அதிர்ஷ்டம் ஏற்பட பரிகாரம்

- Advertisement -

ஒருவர் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அவருக்கு நல்ல நேரம் என்ற ஒன்று இருந்தால்தான் அந்த முயற்சியில் அவரால் வெற்றி பெற முடியும். இன்னும் சிலர் இருக்கிறார்கள் ஏனோ தானோ என்று செய்வார்கள். ஆனால் அவர்கள் செய்யும் செயல் வெற்றிகரமாக நடந்திடும். அதன் மூலம் பல வகைகளில் பண வரவும் ஏற்படும். கஷ்டப்பட்டு ஒருமுறைக்கு பலமுறை முயற்சி செய்து அந்த காரியத்தில் வெற்றி பெற்றாலும் ஒரு சிலரால் அந்த வெற்றிக்குரிய முழு பலனையும் பெற முடியாத சூழ்நிலை உண்டாகும். இவை அனைத்தும் நமக்கு இருக்கக்கூடிய அதிர்ஷ்டத்தை பொருத்தே நடைபெறுகிறது. அப்படிப்பட்ட அதிர்ஷ்டத்தை பெறுவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

அதிஷ்டம் என்பது மகாலட்சுமியால் ஏற்படக்கூடிய ஒன்றாகவே கருதப்படுகிறது. மகாலட்சுமி மட்டும் இதற்கு காரணமாக திகழமாட்டார். குபேர பகவானும் சுக்கிர பகவானும் உறுதுணையாகவே இருப்பார்கள். ஆக மொத்தம் ஒருவருக்கு அதிர்ஷ்டம் ஏற்பட வேண்டும் என்றால் மகாலட்சுமி, குபேரர், சுக்கிரர் போன்றோரின் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என்று தெரிய வருகிறது. சரி இவர்களின் அருணை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்.

- Advertisement -

இவர்கள் மூவருக்கும் உகந்த கிழமையாக கருதப்படுவது வெள்ளிக்கிழமை. அதிலும் குறிப்பாக பிரம்ம முகூர்த்த நேரம் என்பது மிகவும் சிறப்புக்குரியது. அதற்கு அடுத்தார் போல் சுக்கிர ஹோரை என்பது சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. வியாழக்கிழமை குபேர பகவானுக்குரிய கிழமையாக கருதப்படுகிறது. அந்த கிழமையில் அருகில் இருக்கக்கூடிய நகைக்கடைக்கு சென்று சிறிய அளவிலாவது ஒரு வெள்ளி நாணயத்தை வாங்கி வர வேண்டும்.

வாங்கி வந்த வெள்ளி நாணயத்தை அப்படியே உப்பு கலந்த தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும். அடுத்ததாக மஞ்சள் கலந்த தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும். அடுத்ததாக பசும்பாலில் சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் துடித்து விட்டு அதை அப்படியே எடுத்து மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள்.

- Advertisement -

மறுநாள் வெள்ளிக்கிழமை காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் எப்போதும் பூஜை செய்வது போல் செய்து முடித்து விட்டு கடைசியாக இந்த வெள்ளி நாணயத்தை எடுத்து நாம் பணம் வைக்கும் பர்ஸில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த வெள்ளி நாணயம் ஆனது சுக்கிர பகவான், மகாலட்சுமி, குபேரர் போன்றோரின் அருளை பரிபூரணமாக பெற்றதாகும்.

அதுமட்டுமல்லாமல் இதை மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு கீழ் வைக்கிறோம் என்பதால் மகாலட்சுமி தாயாரின் அருளும் பரிபூரணமாக கிடைத்திருக்கும். இந்த வெள்ளி நாணயத்தோடு ஒரே ஒரு துளசி இலையையும் சேர்த்து வைப்பதன் மூலம் பல மடங்கு பலனை நம்மால் பெற முடியும். துளசி இலை கிடைக்கவில்லை என்று நினைப்பவர்கள் சிறிதளவு மட்டும் பச்சை கற்பூரத்தை சேர்த்து வைத்துக் கொண்டால் கண்டிப்பான முறையில் அதிர்ஷ்டம் அவர்களை தேடி வரும். முயற்சிகள் வெற்றி அடையும். அதன் மூலம் பணவரவும் அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: நினைத்தது நடக்க முருகப்பெருமான் வழிபாடு

மிகவும் எளிமையான இந்த தாந்திரீக பரிகாரத்தை முழு மனதுடன் மகாலட்சுமி தாயாரை நினைத்து செய்பவர்களுக்கு பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்குவதோடு அதிர்ஷ்டம் அவர்களை தேடி வரும். அவர்களுடைய வாழ்க்கை சீரும் சிறப்புடன் அமையும்.

சற்று முன்