
நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. கிரகங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை தங்களுடைய இடத்தை மாற்றிக் கொண்டே இருக்கும். இந்த கிரக பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசிக்கும் மாறுதல்கள் ஏற்பட்ட வண்ணம் இருக்கும். அந்த மாற்றமானது சிலருக்கு நற்பலனாகவும் சிலருக்கு அவ்வளவு பலன் அளிப்பதாகவும் இல்லாமல் போகலாம். ஆனால் இவற்றின் பெயர்ச்சியால் நம்முடைய வாழ்வில் ஏதேனும் ஒரு மாற்றம் நிகழும். அப்படி ஒரு கிரக பெயர்ச்சியை பற்றிய தகவலை தான் ஜோதிடம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித்துவம் இருந்தாலும் குருபகவானிற்கென தனிப்பட்ட சிறந்த அம்சங்கள் உண்டு.”குரு பார்க்கின் கோடி நன்மை உண்டு” என்ற பழமொழியின் வாயிலாகவே இவருடைய சிறப்பம்சங்கள் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். இவர் பார்வை பட்டால் போதும் நம்முடைய வாழ்வில் ஞானம், பணம், சிறந்த வாழ்க்கை, பெயர், புகழ் என அனைத்தையும் பெற்று விடலாம். அத்தகைய குரு பகவான் அக்டோபர் 18 மற்றும் 19ஆம் தேதி அதிகாலை 3.09 மணிக்கு கடக ராசியில் அதிசார நிலையில் பெயற்சி அடைவார். இந்த பெயற்சியால் சில ராசிகள் நற்பலனை அடைய போகிறார்கள். அதைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு குருவின் இந்த பெயர்ச்சியானது மிகவும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் நிச்சயம் வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை நல்ல நிலையில் இருக்கும். இதுவரையில் முடியாமல் இருந்த பணிகள் அனைத்தும் முடியும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகளை பெறுவதற்கான நேரம் இது. மேலும் பொருளாதார நிலையிலும் இவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள்.
கடகம்
புதிய வேலை அல்லது புதிதாக ஒரு தொழிலை துவங்க வேண்டும் என நினைக்கும் கடக ராசிக்காரர்களுக்கு இது ஒரு அற்புதமான காலம் என்றே சொல்லலாம். இந்த நேரத்தில் இவர்கள் தொடங்கும் எந்த தொழிலும் நிச்சயம் நல்ல முன்னேற்றத்தை தரும். வருமானம் உயர்வதற்கான வாய்ப்புகளை பெருக்கும். உற்சாகமான சூழ்நிலையில் இருப்பீர்கள். குடும்பத்தில் உள்ள அனைவரின் ஆரோக்கியமும் நல்ல நிலையில் இருக்கும். நல்ல செய்திகள் அதிகமாக வரக்கூடிய காலமாக இந்த பெயர்ச்சி அமையும்.
சிம்மம்
குருவின் இந்த பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களும் பல நற்பலன்களை அடைய உள்ளார்கள். கல்வி பயணம் போன்றவற்றில் நல்ல முன்னேற்றமும் அதிர்ஷ்டகரமான சூழ்நிலையும் அதிகரிக்கும். ஆன்மீகத்தில் உள்ளவர்கள் நல்ல நிலைக்கு உயர்வார்கள். மேலும் சிம்ம ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும்.
துலாம்
குருவின் இந்த பெயர்ச்சியானது துலாம் ராசிக்காரர்களுக்கு நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும். குறிப்பாக திருமண வாழ்க்கையில் இதுவரை இருந்த சஞ்சலங்கள் நீங்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு இப்போது நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சி துவங்குபவர்களுக்கு இது ஒரு நல்லதொரு காலமாக அமையும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் குருவின் இந்த பெயர்ச்சியால்
பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றத்தை பெறுவார்கள். தொழில் செய்பவர்களுக்கும் அதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு அதிக லாபத்தை பெறக்கூடிய வாய்ப்பு உருவாகும். இவர்கள் வீடு, நிலம், கார் போன்ற சொத்துக்களை வாங்கி குவிக்க கூடிய காலமாக அமையும். உறவுகளிலும் பெற்றோர்களிடத்தில் நல்ல ஒரு சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளக்கூடிய காலம் இது.
மகரம்
குருவின் இந்த பெயர்ச்சி வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் நம்பிக்கையும் அதிகரிக்க கூடிய வாய்ப்பு இந்த ராசிக்காரர்களுக்கு உண்டாகும். அது மட்டும் இன்றி பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என நினைப்பவர்களின் கனவுகள் நினைவாக கூடிய காலம் இது. இதுவரை நிலுவையில் இருந்த தொழில் வேலை அனைத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு நினைத்தது நிறைவேற கூடிய காலம் இது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு குருவின் இந்த பெயர்ச்சியால் லட்சுமி தேவியின் ஆசியும் சேர்த்து பெறக்கூடிய நல்வாய்ப்பை பெறுகிறார்கள். இதனால் இவர்கள் எதிர்பாராத வகையில் நிதி ஆதாயங்களையும் பொருளாதார மேம்பாட்டையும் பெருக்கிக் கொள்வார்கள். செலவுகள் குறையும் வங்கி இருப்புகள் அதிகரிக்கும். இதுவரை இருந்து வந்த பதட்டமான சூழ்நிலைகள் குழப்பங்கள் நீங்கி நிம்மதியான மனநிலை ஏற்படும்.
இதையும் படிக்கலாமே: தங்க நகைகள் சேர தீபாவளி ஒரு ரூபாய் பரிகாரம்
மேற்கூறிய ராசிக்காரர்கள் குருவின் இந்த பெயர்ச்சியால் பலவிதமான நன்மைகள் பெறுவார்கள். இது அவரவரின் கிரக நிலைக்கு ஏற்றபடி மாறுதல்கள் ஏற்படும். எந்த ஒரு முயற்சிக்கும் அதற்கு ஏற்ற பலன் நிச்சயம் உண்டு. அந்த வகையில் மற்ற ராசிக்காரர்கள் சோர்ந்து விடாமல் அவர்களுடைய முயற்சியை தொடர்ந்து செய்யும் பொழுது நிச்சயம் அதற்கான நற்பலனை அடைவார்கள் என்ற தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.