- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதங்க நகைகள் சேர தீபாவளி ஒரு ரூபாய் பரிகாரம்

தங்க நகைகள் சேர தீபாவளி ஒரு ரூபாய் பரிகாரம்

- Advertisement -

இன்றைய காலத்தில் தங்கம் விற்கும் விலைக்கு புதிதாக தங்கம் வாங்க முடியும் என்பது நடுத்தர மக்களுக்கும் ஏழை மக்களுக்கும் மிகப்பெரிய கனவாகவே மாறிவிடும் போல் இருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் தாங்கள் அடமானத்தில் வைத்த நகையையாவது திருப்பி விட வேண்டும் என்று போராடுவார்கள். தீபாவளி அன்று இந்த ஒரு ரூபாய் பரிகாரத்தை யார் ஒருவர் முழு நம்பிக்கையோடு செய்கிறார்களோ அவர்களுக்கு அடமானத்தில் இருக்கக்கூடிய நகைகளை திருப்புவதற்குரிய யோகம் உண்டாவதோடு புது நகைகள் வாங்குவதற்குரிய வருமானமும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அந்த ஒரு ரூபாய் பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தங்க நகைகள் சேர பரிகாரம்

தீபாவளி அன்று மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வது, லஷ்மி பூஜை செய்வது போன்றவற்றை செய்வதன் மூலம் நமக்கு பணவரவு என்பது அதிகரிக்கும். பண வரவு அதிகரித்தாலும் பலருக்கும் அந்த பணவரவு வீண் விரயமாகுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது, அப்படி வீண் விரயம் ஆகாமல் அந்த பணவரவை தங்கமாக மாற்றுவதற்கும் தங்க நகைகளை சேர்ப்பதற்குரிய யோகத்தை பெறுவதற்கும் செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஒரு ரூபாய் நாணயமும் ஒரு விளக்கும் வேண்டும். இந்த பரிகாரத்தை தொடர்ச்சியாக 9, 16, 21 வாரங்கள் செய்ய வேண்டும். முதல் நாள் தீபாவளி அன்று காலையிலோ அல்லது மாலையிலோ இந்த பரிகாரத்தை செய்யலாம். இந்த பரிகாரத்தை செய்பவர்கள் அசைவத்தை தவிர்த்திருக்க வேண்டும். ஒருவேளை அசைவம் சாப்பிட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் காலையிலேயே இந்த பரிகாரத்தை செய்து முடித்து விடலாம். ஒரு விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த விளக்கு பித்தளை விளக்காகவோ அல்லது மண் விளக்காகவோ அல்லது வெள்ளி விளக்காகவோ இருக்கலாம்.

அந்த விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக கிழக்கு திசை பார்த்த வாரோ அல்லது வடக்கு திசை பார்த்தவாரோ தீபத்தை ஏற்ற வேண்டும். தீபத்தை ஏற்றிய பிறகு அந்த விளக்கிற்குள் ஒரு ரூபாய் நாணயத்தை போட வேண்டும். இந்த தீபம் ஒரு மணி நேரம் எரிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மணி நேரம் எரிந்து முடிந்த பிறகு அதை குளிர வைத்துவிடலாம். மறுநாள் காலையில் இந்த தீபத்தில் இருக்கக்கூடிய ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து ஒரு சுத்தமான புதிதாக வாங்கிய மஞ்சள் துணியில் துடைத்து மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக அந்த வாரமே வரக்கூடிய வியாழக்கிழமை அன்று இரண்டாவது தீபத்தை நாம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தையும் அதேபோல் காலையிலோ, மாலையிலோ ஏற்றலாம். அசைவம் சாப்பிட்டிருக்கக் கூடாது. நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி அதற்குள் புதிதாக ஒரு ரூபாய் நாணயத்தை போட வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று இந்த நாணயத்தை சுத்தம் செய்து ஏற்கனவே இருக்கக்கூடிய நாணயத்துடன் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்படி தொடர்ச்சியாக ஒன்பது வாரங்கள் செய்ய வேண்டும். ஆரம்பிக்கும் முதல் வாரம் மட்டும் தீபாவளி நாளாக இருக்க வேண்டும். இரண்டாவது வாரத்தில் இருந்து அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஒவ்வொரு வியாழக்கிழமை இந்த தீபத்தை ஏற்றி ஒரு ரூபாயை போட்டு சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். அத்தனை வாரங்கள் செய்து முடித்த பிறகு மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று இந்த நாணயங்கள் அனைத்தையும் சேகரித்து புதிதாக வாங்கிய வெள்ளை நிற துணியில் மூட்டையாக கட்டி பணம் நகை வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் புதிதாக தங்க நகைகள் வாங்குவதற்கோ அடமானத்தில் இருக்கக்கூடிய தங்க நகைகளை சேர்ப்பதற்கோ உரிய பணவரவு உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: தீபாவளி உருவான கதை

முழு மனதோடு எந்தவித சந்தேகமும் இல்லாமல் மகாலட்சுமி தாயாரை நினைத்து இந்த ஒரு ரூபாய் தீப வழிபாட்டை செய்பவர்களுக்கு தங்க நகைகள் சேருவதற்குரிய யோகம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்