- Advertisement -
மந்திரம்

உங்களின் ஏழ்மை நிலை நீங்கி மங்களங்கள் பெருக இதை துதியுங்கள்

இளமையில் வறுமை கொடிது என நமது தமிழ் மூதாட்டி ஔவையார் பாடினார். நாம் அனைவருக்குமே நினைத்தவுடன் விலையுயர்ந்த எதையும் வாங்க முடியாவிட்டாலும், பிறருடன் கடன் பெற்று எதையும் வாங்கும் வறிய நிலை நமக்கு ஏற்படக்கூடாது. ஆனால் பலருக்கும் வாழ்வில் அன்றாடம் ஏற்படும் தேவைகளை தீர்க்க முடியாத அளவிற்கு ஏழ்மை நிலை இருக்கிறது. அதிலும் சிலருக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவும் சாப்பிட முடியாத நிலை இருக்கிறது. இத்தகைய பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும் “ஹயக்ரீவர் ஸ்லோகம்” இதோ

ஹயக்ரீவர் ஸ்லோகம்

ஓம் நமோ பகவதே ஹயஸிரஸே
அந்நாதிபதயே அந்நதாய அக்ரூராய

- Advertisement -

அக்ரூரகர்மணே பகவந் பக்ஷ்ய
போஜ்யந்நதாநமா வஹாவஹ ஸ்வாஹா

திருமாலின் அம்சமான குதிரை முகம் கொண்ட ஸ்ரீ ஹயக்ரீவரின் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் குளித்து முடித்ததும், பெருமாளின் படத்திற்கு முன்பாக நின்று 27 முறை துதிப்பது சிறப்பு. புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பெருமாளின் சந்நிதியில் மலர்கள் சமர்ப்பித்து, தீபங்கள் ஏற்றி இம்மந்திரத்தை 27 முறை அல்லது 108 முறை துதித்து வந்தால் உங்கள் வீட்டில் இருக்கும் ஏழ்மை நிலை மாறும். வாழ்வில் சாப்பாட்டிற்கு கஷ்டப்படும் சூழல் ஏற்படாது. மங்களங்கள் யாவும் உங்கள் வீட்டில் உண்டாகும்.

- Advertisement -

புராண காலத்தில் மது, கைடபர் என்ற இரு அரக்கர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் மனிதர்கள் மற்றும் தேவர்களுக்கு மிகுந்த துன்பங்களை தந்தனர். ஒரு கட்டத்தில் இதை பொறுத்து கொள்ள முடியாத தேவர்களும், மனிதர்களும் திருமாலிடம் அவர்களை அழிக்குமாறு வேண்டினர். எனவே அவர்களை அழிப்பதற்கு மனித உடலும், குதிரை தலையும் கொண்ட “ஹயக்ரீவர்” வடிவமெடுத்து மது, கைடபர் என்ற இரு அரக்கர்களையும் அழித்தார். இந்த ஹயக்ரீவரின் இந்த ஸ்லோகம் துதித்து வழிபடுவதால் அனைத்து வகையான நன்மைகளும் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
செல்வம் பெருக, எதிரிகளை வெல்ல மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள

English overview:
Here we have Hayagreeva sloka in Tamil. It is also called as Hayagreeva mantra in Tamil or Hayagreeva stotram in Tamil or Varumai neenga manthiram in Tamil or Hayagreevar manthiram in Tamil.

- Advertisement -