உங்களுக்கு செல்வம் பெருக, எதிரிகளை வெற்றி கொள்ள இம்மந்திரம் துதியுங்கள்

suriya

இரவு என்பது இருள் நிறைந்தது. பொதுவாக இருள் என்றாலே தீமைகள் வளருகின்ற ஒரு சூழலை ஏற்படுத்துகிறது. ஆனால் பிரகாசமான ஒளி இருளையும், அதில் கலந்துள்ள தீமைகளையும் போக்குகிறது. அது போலவே எல்லோருடைய வாழ்விலும் சில களம் இருள் சொல்கிறது. இறைவழிபாடு எனும் பிரகாசமான ஒளி அந்த இருளை போக்குகிறது. உலகிற்கு ஒளியாக இருப்பவர் சூரியன். மனிதர்களின் வாழ்வில் ஒளியை ஏற்படுத்துபவர் நாராயணன். இந்த இருவரும் கலந்த சூரிய நாராயணன் மந்திரம் இதோ.

suriyan

சூரிய நாராயண மந்திரம்

ஓம் பாஸ்கராய வித்மஹே மகத்யுதிகராய
தீமகி தந்நோ சூர்ய ப்ரசோதயாத்

சூர்ய நாராயண மூர்த்தியே நம
கற்பூர நிராஜனம் தர்சயாமி

Suryan God

பூமிக்கு ஒளி தரும் சூரியனை நாராயணனின் அம்சமாக கருதி இயற்றப்பட்ட சூரிய நாராயண மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு சூரிய உதயத்தின் போது கிழக்கு திசையை பார்த்து நின்றவாறு சூரிய பகவானையும், நாராயணனாகிய பெருமாளையும் மனதில் நினைத்து 108 முறை துதித்து வணங்க வேண்டும். இப்படி தினமும் இந்த மந்திரத்தை துதித்து வணங்குபவர்களுக்கு உடலில் ஏற்பட்டிருக்கும் எப்படிப்பட்ட வியாதிகளும் நீங்கும். கண்பார்வை தெளிவடையும். அதிகாரமிக்க பதவிகள் கிடைக்கப்பெறுவர்கள். செல்வம் பெருகும். எதிரிகள், மரணம் போன்றவற்றிற்கு அஞ்சாத மனோதைரியம் உண்டாகும்.

- Advertisement -

Suriyan manthiram

மிகவும் ஆற்றல் வாய்ந்த மந்திரமாக இருக்கிறது சூரிய பகவானின் இந்த மந்திரம். இந்த மந்திரத்தை மேலே கூறப்பட்ட முறையில் தொடர்ந்து துதிப்பவர்களுக்கு அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும். மேலும் மகர சங்கிராந்தி எனப்படும் பொங்கல் பண்டிகையின் போது சூரிய வழிபாடு செய்யும் சமயம், இம்மந்திரத்தை துதித்து சூரியனுக்கு கற்பூர ஆரத்தி காட்டி வழிபடுவதால் சூரியனின் முழுமையான அருள் உங்களுக்கு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே:
தன லாபங்கள் பெற மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Surya narayana mantra in Tamil. It is also called as Surya bhagavan slokam in Tamil or Surya bhagavan manthirangal in Tamil or Surya mantra in Tamil.