- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

புகைப்படம் இல்லாமல் குலதெய்வத்தை எப்படி வணங்குவது – ஒரு எளிய வழி

சிலர் தங்களது முன்னோர்களின் படங்களையும் குல தெய்வத்தின் படங்களை வைத்திருக்க மாட்டார்கள் ஆனால் முன்னோர்களையும் குலதெய்வத்தை வணங்க வேண்டும் என்று நினைப்பார்கள். இதற்கு ஒரு தீர்வு இருக்கிறது. வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம்.

பழங்காலத்தில் புகைப்படம் எல்லாம் எதுவும் கிடையாது. அப்போது அம்மாவாசை அன்று முன்னோர்களை வணங்கும் சமயத்தில் ஒரு கண்ணாடியை வைத்தே வணங்கினர். ஒரு வகையில் நம்முடைய குலதெய்வமும் நம்முடைய முன்னோர்களில் ஒருவர் தான் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
குலதெய்வத்தை கண்டறிவதற்கான எளிய வழிகள்

முகம் பார்க்கும் கண்ணாடியை அம்மாவாசை அன்று வைத்து வணங்குவதன் பயனாக, நாம் வணங்கும் சமயத்தில் முன்னோர்கள் நம் வீட்டிற்கு வரும்போது அவர்களின் முகம் அந்த கண்ணாடியில் பிரதிபலிக்கும். இதனால் நம்மை தான் இவர்கள் மனதார வணங்குகிறார்கள் என்றெண்ணி அவர்கள் நம்மை வாழ்த்துவார்கள்.இதே முறை குலதெய்வத்திற்கு பொருந்தும். இதனாலேயே நம் முன்னோர்கள் அந்த காலத்தில் கண்ணாடியை வைத்து வழிபட்டனர்.

- Advertisement -