குலதெய்வத்தை கண்டறிவதற்கான எளிய வழிகள்

kula-dheivaml
- Advertisement -

மனிதன் தீராத பிரச்னைகளால் அகப்பட்டு தவிக்கும்போது குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் குலதெய்வ கோயிலிற்கு சென்று வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறுவார்கள். இதில் ஒரு சிலருக்கு குலதெய்வம் என்னவென்றே தெரியாததால் மேலும் பல பிரச்சனைகளுக்கு ஆளாகின்றன. இந்த பதிவில் குலதெய்வத்தை கண்டறியும் முறைகளை பற்றி பார்ப்போம் வாருங்கள்.

kula dheivam

நிறைந்த வெள்ளிக்கிழமை அன்று வீட்டு பூஜை அறையில் விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் குளித்துவிட்டு, அவரவர்கள் வழக்கப்படி நெற்றிக்கு இட்டுக் கொண்டு, ஒரு ஐந்து முக குத்து விளக்கு ஏற்றி, அதன் தண்டு பாகத்தில் ஒரு புதிய துணி (வஸ்திரம்) சாற்றி, பூ சாற்றி அதற்கு முன்பு தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு வைத்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, தீபம், தூபம் காட்ட வேண்டும்.

- Advertisement -

பின்பு “எங்கள் குல தெய்வம் தெரியாமல் நாங்கள் மன வருத்தத்தில் இருக்கிறோம். ஆகவே, எங்கள் குலதெய்வத்தை நினைத்து, தங்களையே அவராகப் பாவித்து, இந்தப் படையலை சமர்ப்பிக்கின்றோம். இதனைத் தாங்கள் ஏற்றுக்கொண்டு சீக்கிரமாக எங்கள் குல தெய்வத்தைக் காட்டுவீராக” என்று வேண்டிக்கொண்டால், இறைவனின் அருளால் குலதெய்வம் பற்றிய விவரம் உங்களுக்குத் தெரியவரும்.

kula dheivam

இன்னொரு முறையும் இருக்கிறது. உங்கள் வீட்டின் தலை வாசலில் நிலையைக் கழுவி மஞ்சள் பூசி, குங்குமம், சந்தனம் இட்டு புதுத் துணி சாற்றி, வெற்றிலை பாக்கு, பழம் வைத்து, பொங்கல் இட்டு நிலைப்படி பூஜை செய்து மேற்சொன்னவாறு அதே வேளையில் வேண்டிக் கொண்டால், உங்கள் குல தெய்வம் பற்றி உங்களுக்குத் தெரியவரும்.

kula dheivam

இது தவிர மூத்த பிள்ளையின் ஜாதகத்தை வைத்து குலதெய்வம் ஆண் தெய்வமா அல்லது பெண் தெய்வமா, நிலத்தில் வாழும் தெய்வமா அல்லது மலையில் வாழும் தெய்வமா, உக்ர தெய்வமா அல்லது சாந்த தெய்வமா போன்ற விவரங்களை அறிய முடியும்.

- Advertisement -