
இட்லி, தோசைக்கு சாம்பார் சட்னி நல்ல காம்பினேஷன் தான். ஆனால் எப்போதும் ஒரே மாதிரி சாம்பார் சட்னி செய்து கொண்டு இருக்காமல் கொஞ்சம் வித்தியாசமாக, அதே நேரத்தில் நல்ல சுவையாகவும் ஏதாவது இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா. அந்த வகையில் இந்த குருமாவை சட்னி அரைக்கும் நேரத்தில் வைத்து விடலாம். வாங்க இந்த குருமாவை எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
குருமா செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நான்கு பட்டை, நான்கு ஏலக்காய், கிராம்பு நாலு, ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரகம் ஒரு டீஸ்பூன் தனியா, கால் கப் துருவிய தேங்காய், நான்கு பச்சை மிளகாய் கால் டீஸ்பூன் கசகசா, இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இது ஒரு புறம் அப்படியே இருக்கட்டும்.
அடுத்ததாக ஒரு பெரிய வெங்காயத்தையும், இரண்டு தக்காளியும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளுங்கள். இத்துடன் பத்து பல்,பூண்டு ஒரு துண்டு இஞ்சி இரண்டையும் நன்றாக பஞ்சு போல இடித்து இதையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
குருமா செய்ய தேவையானவற்றை எல்லாம் தயாராகி விட்டோம், இப்போது குருமாவை தாளித்து விடலாம். அடுப்பை பற்ற வைத்து பேனை வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் இடி த்து வைத்த இஞ்சி பூண்டு விழுதை அதில் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்து அதையும் வதக்கி கொள்ளுங்கள். வெங்காயம் பாதி அளவு வதங்கியவுடன் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்த பிறகு நறுக்கி வைத்த தக்காளியும் சேர்த்து தக்காளி பாதி அளவு வதங்கியவுடன் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து தண்ணீர் ஊற்றி ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க வைத்தால் போதும் குருமா ரெடி. தேங்காய் சேர்த்த பிறகு குருமாவை அதிகமாக கொதிக்க வைக்க கூடாது . குருமாவை இறக்கும் போது மேலே கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கி வைத்து விடுங்கள். கமகமன்னு சிக்கன் குருமா சுவையில் வெஜ் குருமா ரெடி.
இதையும் படிக்கலாமே: மீல்மேக்கர் பிரியர்கள் அதை இப்படி ஒரு முறை கிரேவி செஞ்சி பாருங்க இட்லி, தோசை சாதம், சப்பாத்தி, பூரி என்று எல்லாத்துக்குமே சப்புக் கொட்டிகிட்டே தொட்டு சாப்பிடலாம்!
இந்த குருமா இட்லி தோசை சப்பாத்தி பூரி என அனைத்து வகை டிபன் வகைகளுக்கும் இது நன்றாக இருக்கும். இந்த குருமா செய்ய அதிகபட்சம் 10 நிமிடம் தான் ஆகும் எனவே காலையில் நேரத்தில் பதட்டப்படாமல் நல்ல சுவையாக சமைத்து சாப்பிடலாம். நீங்களும் இந்த ரெசிபியை உங்க வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.