மீல்மேக்கர் பிரியர்கள் அதை இப்படி ஒரு முறை கிரேவி செஞ்சி பாருங்க இட்லி, தோசை சாதம், சப்பாத்தி, பூரி என்று எல்லாத்துக்குமே சப்புக் கொட்டிகிட்டே தொட்டு சாப்பிடலாம்!

meal-maker-gravy_tamil
- Advertisement -

எல்லோருக்கும் மீல் மேக்கர் பிடிக்கும் என்று கூறி விட முடியாது ஆனால் சோயா பீனிலிருந்து உருவாகக்கூடிய இந்த மீல்மேக்கர் வெஜ் பிரியாணி போன்றவற்றில் அதிகம் சேர்க்கப்படுவது உண்டு. அது போல இதை வைத்து 65, தொக்கு, குருமா, கிரேவி என்று பல விதங்களில் அசத்தலாக செய்து ரசித்து சாப்பிடலாம். அந்த வகையில் ரொம்ப சுவையான மற்றும் சுலபமாக செய்யக்கூடிய இந்த மீல்மேக்கர் கிரேவி எப்படி நாம் செய்ய இருக்கிறோம்? என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

மீல்மேக்கர் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:
மீல்மேக்கர் – 150 கிராம், பெரிய வெங்காயம் – இரண்டு, தக்காளி – இரண்டு, பச்சை மிளகாய் – ஒன்று, சமையல் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், மிளகு – முக்கால் ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், சோம்பு – முக்கால் ஸ்பூன், பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, அண்ணாச்சி மொக்கு, கல்பாசி, ஏலக்காய் – தலா 2, மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், குழம்பு மிளகாய் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, மல்லித்தழை – சிறிதளவு.

- Advertisement -

மீல் மேக்கர் கிரேவி செய்முறை விளக்கம்:
முதலில் நீங்கள் உங்கள் தேவைக்கு ஏற்ப மீல் மேக்கரை எடுத்து அதை சுடு தண்ணீரில் போட்டு நன்கு ஊற வைத்துக் கொள்ளுங்கள். மீல் மேக்கர் ஊறிய பிறகு பஞ்சு போன்று மெத்தன்று ஆகிவிடும். அதன் பிறகு அதில் இருக்கும் தண்ணீரை கொஞ்சம் கூட ஈரப்பதம் இல்லாமல் கைகளால் பிழிந்து எடுத்து இரண்டாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள்.

எண்ணெய் காய்ந்ததும் மிளகு, சோம்பு, சீரகம் ஆகியவற்றை போட்டு லேசாக வதக்கிக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் ஒரு வெங்காயம் மற்றும் ஒரு தக்காளியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். வதங்கியதும் அடுப்பை அணைத்து ஆறவிட்டு விடுங்கள். இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக தண்ணீர் ஊற்றி அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் பட்டை ,கிராம்பு போன்ற மசாலா பொருட்களை மேற்கூறிய அளவின்படி சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் மீதம் இருக்கும் ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து பொன்னிறமாக வதக்குங்கள். அதன் பிறகு பச்சை மிளகாய், தக்காளியை சேர்த்து மசிய வதக்குங்கள். பிறகு நீங்கள் வெட்டி வைத்துள்ள மீல் மேக்கர் துண்டுகளை சேர்த்து வதக்கி மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவிற்கு உப்பு ஆகியவற்றை போட்டு பச்சை வாசம் போக வதக்கி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
ரவை இட்லி எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான், ஆனால் இதை எப்படி செஞ்சா பர்ஃபெக்டா வரும்னு தெரிஞ்சிகிட்டா இந்த ரவை இட்லி செய்றதுல இனி உங்கள அடிச்சிக்க ஆளே இல்ல.

பின்னர் அரைத்த மசாலாவையும் சேர்த்து மிக்ஸி ஜார் கழுவிய தண்ணீரை சேர்த்து கெட்டியான பதத்தில் வருமாறு இருக்க வேண்டும் எனவே அதிகம் தண்ணீரை ஊற்றி விட வேண்டாம். பிறகு அடுப்பை மூடி மூணு விசில் விட்டு எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு நறுக்கிய மல்லித்தழை தூவி சுடச்சுட இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, சூடான சாதத்துடன் பரிமாறி பாருங்கள், கறி குழம்பே தோத்து போய்விடும், அந்த அளவிற்கு சுவை அட்டகாசமாக இருக்கும்.

- Advertisement -