- Advertisement -
வீட்டு குறிப்புகள்

அவசியமான சமையல் குறிப்புகள்

பரபரப்பாக இயங்கக்கூடிய இன்றைய காலகட்டத்தில் சமையல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. வீட்டில் இருப்பவர்களாக இருந்தாலும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தாலும் பள்ளி கல்லூரி செல்லக்கூடிய மாணவர்களாக இருந்தாலும் கண்டிப்பான முறையில் காலை நேரத்தில் அவர்களுக்கு சமையல் செய்வது என்பது மிகவும் முக்கியம்.

எவ்வளவு நாளைக்கு தான் கடைகளில் வாங்கி சாப்பிட முடியும். ஆரோக்கியமான உணவுகளை வீட்டிலேயே சமைப்பதாக இருந்தால் அந்த சமையலை எளிமையாக்குவதற்கு சில சமையல் குறிப்புகள் தெரிந்திருக்க வேண்டும். அப்படி அன்றாட சமையலில் நடக்கக்கூடிய தவறுகளை மாற்றி அமைப்பதற்கும் சமையலை எளிமையாக்குவதற்கும் தெரிந்து கொள்ள வேண்டிய சில சமையல் குறிப்புகள் பற்றி தான் இந்த வீட்டு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இட்லி மாவை அவசரத்திற்கு நம் கடையில் வாங்கும் பொழுது அதில் இட்லி நன்றறாக வருமா? வராதா என்ற பயம் அனைவருக்கும் இருக்கும். அதில் இட்லி வருவதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா? அந்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி தேவையான அளவு உப்பை கரைத்து அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஊற்றி நன்கு கலக்கி விட வேண்டும். இட்லி பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க விட்ட பிறகு இட்லியை ஊற்றி மூடி விட வேண்டும். அவ்வாறு தண்ணீரை கொதிக்க விடாமல் இட்லியை ஊற்றும் பொழுது இட்லியானது கல் போல வரும். தண்ணீரை கொதிக்க விட்டுப் இட்லியை ஊற்றினால் இட்லியானது மென்மையான பூ போல வரும்.

குக்கரில் என்ன சமைத்தோமோ அது எல்லாமே குக்கர் மூடியில் பரவி இருக்கும். அதை கழுவுவதற்கு ரொம்ப சிரமமாக இருக்கும். அந்த சிரமத்தை போக்குவதற்கு குக்கர் மூடியில் எண்ணெயை தடவி சமைக்க வேண்டும். இப்படி செய்தால் குக்கர் மூடியில் எதுவும் ஒட்டாமல் வரும். கழுவுவதற்கு எளிமையாக இருக்கும்.

- Advertisement -

சப்பாத்தி மாவு நாம் அதிகமாக பிசைந்து விட்டால் அதை குளிர்சாதன பெட்டியில் வைக்கும் பொழுது மறுநாள் எடுத்து பார்த்தால் மேல் மாவு மட்டும் கருப்பாக இருக்கும். அதை நீக்குவதற்கு ஒரு கண்ணாடி பாத்திரத்தில் மீதி மாவை சரிசமமாக வைத்து அதில் எண்ணெயை தடவி நன்றாக இறுக்கமாக மூடி ப்ரிச்சில் வைக்க வேண்டும். மறுநாள் எடுத்துப் பார்த்தால் நாம் எப்படி வைத்தமோ அதேபோன்று ப்ரஸ்சாக இருக்கும்.

கொண்டைக்கடலை மற்றும் பச்சை பட்டாணியை நாம் இரவே ஊற வைக்கவில்லை என்றால் மறுநாள் சமைக்க முடியாமல் கஷ்டப்படுவோம். அந்த சமயத்தில் சூடான தண்ணீரை எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து கொண்டைகடலையை ஊற வைக்கும் பொழுது ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்தில் நன்றாக ஊறிவிடும். தண்ணீர் கொதிக்க கொதிக்க இருந்தால் கொண்டைக்கடலை மற்றும் பச்சை பட்டாணி நன்கு பெரியதாக காணப்படும்.

இதையும் படிக்கலாமே ஈ எறும்பு தொல்லையிலிருந்து தப்பிக்க வீட்டு குறிப்பு

இந்த சமையல் குறிப்புகள் அனைத்தும் எளிமையான குறிப்புகள் என்றாலும் அவசரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளும் அற்புதமான குறிப்புகளாக திகழ்கிறது விருப்பம் இருப்பவர்கள் பயன்படுத்தி பலன் அடையுங்கள்.

- Advertisement -