குழந்தைகள் இருக்கும் வீட்டில் என்னதான் வீட்டை கூட்டி துடைத்து சுத்தம் செய்தாலும், மீண்டும் மீண்டும் அவர்கள் அந்த இடத்தில் சாப்பிடக்கூடிய பொருட்களை சிந்தி சிந்தி வைப்பார்கள். இதனால் ஈ, எறும்பு தொல்லைகள் அதிகமாக இருக்கும். அதிலும் மாம்பழ சீசனும் பலாப்பழ சீசனும் வந்துவிட்டால் போதும். வீட்டில் ஈயை துரத்தவே முடியாது.
எவ்வளவு சுத்தம் செய்தாலும் திரும்பத் திரும்ப வரும். அந்த பிரச்சனையில் இருந்து விடுபட ஒரு சூப்பர் ஐடியா இருக்குது. அந்த ஐடியாவை தான் இந்த பயனுள்ள இந்த வீட்டு குறிப்பு பதிவில் தெரிந்து கொல்லப் போகிறோம்.
ஈ எறும்பு வராமல் இருக்க
ஒரு 1/2 பக்கெட் அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பேக்கிங் சோடா 1 ஸ்பூன், கல் உப்பு 1 ஸ்பூன், 1 சின்ன துண்டு பச்சை கற்பூரத்தை நுணுக்கி போடவும். கொஞ்சமாக வசம்பு பொடி சேர்த்து இந்த தண்ணீரை நன்றாக கலந்து இதில் உங்களுடைய வீட்டு தரையை துடைத்து பாருங்கள். தரை எப்போதும் பளபளப்பாக இருப்பதோடு சேர்த்து உங்களுடைய வீட்டில் ஈ எறும்பு சின்ன சின்ன பூச்சிகளின் தொல்லை வரவே வராது.
குறிப்பாக சின்ன குழந்தைகள் இருக்கும் வீட்டில் இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க. இந்த தண்ணீரில் கூடுதலான விஷயங்கள் வேறு என்ன தேவையோ, அதை நீங்கள் சேர்த்து கொள்ளலாம். டெட்டால் சேர்த்துக் கொள்ளலாம், லைசால் சேர்த்துக் கொள்ளலாம் எது வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அது உங்களுடைய விருப்பம். ஆனால் கெமிக்கல் கலந்த பொருட்களை போட்டு தரையை துடைக்கும் போது, குழந்தைகள் அதிலேயே சாப்பிடும் பொருட்களை போட்டு, எடுத்து சாப்பிட்டால் அது உடம்புக்கு ரொம்ப ரொம்ப கேடு அதையும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்
இதே தண்ணீரை கொஞ்சமாக எடுத்து சமையலறையில் சமையல் மேடையில் தெலித்து ஒரு ஸ்பான்ச் நார் போட்டு துடைத்து விட்டாலும், அங்கு இருக்கும் ஈக்கள் எறும்புகள் முழுமையாக போய்விடும். பிரச்சனை இருக்காது. இதோடு சேர்த்து கொஞ்சமாக புதினா இலைகளை எடுத்து உள்ளங்கைகளில் வைத்து கசக்கி உங்களுடைய சமையலறையில் மேடையில், சிங்கில் ஸ்டவுக்கு பக்கத்தில் ஆங்காங்கே போட்டு வையுங்கள். இந்த புதினா வாசத்திற்கு ஈ சுத்தமாக தங்காது.
இதையும் படிக்கலாமே: மிக்ஸி ஜாரை சுத்தம் செய்ய எளிய வீட்டு குறிப்பு
சமையல் அறையில் குறிப்பாக எந்த உணவுப் பொருட்களையும் திறந்தபடி வைக்க கூடாது. குப்பை கூடையாக இருந்தாலும் அதை மூடி வைக்கவும் அப்போதுதான் இந்த ஈ எறும்பு பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம். வரப்போகுது ஆடி மாசம். ஆடி மாசம் என்றாலே ஈக்கள் நிறைய வீடு தேடி வரும். அந்த சமயத்தில் இந்த குறிப்புகள் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.