- Advertisement -

இனிமையான வாழ்க்கை அருளும் விநாயகர் வழிபாடு

- Advertisement -

நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்துமே நீங்க வேண்டும், சிறப்பான வாழ்க்கை வாழ வேண்டும், மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். இப்படி சிறப்பான, மகிழ்ச்சியான, இனிமையான வாழ்க்கையை வாழ்வதற்கு பலவிதங்களில் முயற்சிகளும் மேற்கொள்வோம். அந்த முயற்சிகள் வெற்றியடைவதன் பட்சத்தில் நாம் நினைத்தது போல் நம்மால் வாழ முடியும். ஒருவேளை அந்த முயற்சிகளில் ஏதேனும் தடைகளோ தடங்கலோ வரும்பொழுது நாம் நினைத்த வாழ்க்கையை நம்மால் வாழ முடியாது. அப்படி நாம் நினைத்த வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களுடைய விடா முயற்சியுடன் விநாயகப் பெருமானை எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

விநாயகர் வழிபாடு

விநாயகப் பெருமானை அனைவருமே அனைத்து நாட்களிலுமே வழிபாடு செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் அன்றைய நாட்கள் நமக்கு சிறப்பான நாட்களாக அமையும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு கிழமையிலும் நாம் விநாயகர் பெருமானை வழிபாடு செய்யும்பொழுது அந்த கிழமைக்குரிய கிரகத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் விலகும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கி இனிமையான வாழ்க்கை வாழ்வதற்கு எந்த கிழமையில் எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

வாழ்க்கையில் தீர்க்க முடியாத கஷ்டத்தில் தவித்துக் கொண்டு இருப்பவர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் அவர்களின் கஷ்டங்களில் இருந்து வெளிவர முடியாமல் வருத்தப்பட்டு கொண்டு இருப்பவர்கள் விநாயகப் பெருமானை ஒவ்வொரு வாரத்திலும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை அன்று வழிபாடு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை வீட்டு பூஜை அறையிலும் செய்யலாம். அருகில் இருக்கக்கூடிய ஆலயத்திற்கும் சென்று செய்யலாம். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். குறிப்பாக ராகு கால எமகண்ட நேரத்தை மட்டும் தவிர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

அவ்வாறு விநாயகப் பெருமானை நாம் வழிபாடு செய்யும்பொழுது கண்டிப்பான முறையில் விநாயகப் பெருமானுக்கு உரிய அருகம்புல்லை அவருக்கு சாற்ற வேண்டும். அதேபோல் அவருக்கு மிகவும் பிடித்தமான எருக்கு பூவை சாற்றலாம். அதிலும் குறிப்பாக வெள்ளெருக்கு பூவை சாற்றுவது கூடுதல் சிறப்பை தரும். அதிலும் ஞாயிற்றுக்கிழமையில் இந்த பூவை சாற்றும்பொழுது சூரிய பகவானால் ஏற்படக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் தீர்ந்து சிறப்பான நல்ல ஒரு வாழ்க்கை அமையும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதோடு சேர்த்து விநாயகப் பெருமானுக்கு இரண்டு தேங்காய் எண்ணெய் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு சர்க்கரை வள்ளி கிழங்கை வேக வைத்து அதில் தேன் கலந்து நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை இந்த முறையில் விநாயகப் பெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் படிப்படியாக விலகி அவர்கள் நினைத்தது போல் வாழ்க்கை அமையும். இயன்றவர்கள் விநாயகப் பெருமானின் 108 போற்றிகளை கூறி அருகம்புல்லால் அர்ச்சனை செய்வது கூடுதல் சிறப்பை தரும்.

இதையும் படிக்கலாமே: செல்வத்தை வாரி வழங்கும் ஏகாதசி வழிபாடு

எளிமையான இந்த விநாயகர் வழிபாட்டை முழுமனதோடு யார் ஒருவர் தொடர்ச்சியாக செய்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் படிப்படியாக விலகும். அவர்கள் நினைத்தது போல் வாழ்க்கை அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -