- Advertisement -

ஐஸ்வர்யம் பெருக செய்ய வேண்டிய வழிபாடு

- Advertisement -

ஐஸ்வரியம் என்றதும் நம் நினைவிற்கு வரக்கூடியவள் மகாலட்சுமி தாயார் தான். மகாலட்சுமி தாயாருக்கே அந்த ஐஸ்வர்யத்தை வழங்கியவராக தான் சிவபெருமான் திகழ்கிறார். அப்படிப்பட்ட சிவபெருமானை நாம் இறுகப்பற்றிக் கொண்டு முழு மனதோடு வழிபாடு செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் நமக்கும் ஐஸ்வர்யத்தை வழங்குவார். அப்படி ஐஸ்வர்யத்தை பெற்று சிறப்பான வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மார்வாடிகள் பின்பற்றக்கூடிய ஒரு பூஜை முறை ஒன்று இருக்கிறது. அந்த பூஜை முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஐஸ்வர்யம் பெருக வழிபாடு

சிவபெருமானை வழிபாடு செய்தால் ஐஸ்வரியம் பெருகும் என்றாலும் சிவபெருமானோடு சேர்த்து நம் மகாலட்சுமி தாயாரையும் வழிபாடு செய்யும்பொழுது தான் நமக்கு முழுமையான பலன் என்பது கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படி இவர்கள் இருவரின் அருளை பெறுவதற்கு மார்வாடிகள் பலவிதமான பூஜைகளை மேற்கொள்வார்கள். அந்த பூஜைகளின் பல நாள் தான் அவர்கள் கையில் பணம் நிரந்தரமாக தங்குகிறது. அந்த பூஜை முறைகளில் ஒன்றை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த பூஜையை தொடர்ச்சியாக குறைந்தபட்சம் 48 நாட்களாவது செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு நமக்கு ஒரு செம்பால் செய்யப்பட்ட சொம்பு ஒன்று வேண்டும். அது பெரிய அளவில் இருந்தால் மிகவும் நல்லது. தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு அந்த சொம்பு நிறைய சுத்தமான தண்ணீரை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கக்கூடிய அரச மரம் இருக்கும் இடத்திற்கு போய் அந்த தண்ணீரை அரச மரத்தடியில் ஊற்ற வேண்டும். காலையில் இந்த ஒரு வழிபாட்டை செய்வதன் மூலம் அரச மரத்தில் இருக்கக்கூடிய மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமியின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும்.

இதோடு மாலை நேரத்தில் அருகில் இருக்கக்கூடிய சிவபெருமானின் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு வழிபாடுகள் அனைத்தையும் நிறைவு செய்த பிறகு சிவபெருமானுக்கு முன்பாக இடம் இருக்கும் பட்சத்தில் அமர்ந்து பின்வரும் இந்த ஒரு பாடலை ஒருமுறை படிக்க வேண்டும். ஒருவேளை சிவபெருமானுக்கு முன்பாக அமர்வதற்கு வசதி இல்லை என்னும் பட்சத்தில் சிவபெருமானுக்கு பின்புறம் இருக்கக்கூடிய சண்டிகேஸ்வரர் சன்னதிக்கு அருகில் அமர்ந்து கொண்டும் இந்த பாடலை படிக்கலாம். அந்த பாடல் தான் தாரித்ர துக்க தஹன சிவ ஸ்தோத்திரம். இந்த ஸ்தோத்திரத்தை நம் முழுமனதோடு தொடர்ச்சியாக 48 நாட்கள் தினமும் பாராயணம் செய்யும்பொழுது நமக்கு இருக்கக்கூடிய தரித்திரமும் துக்கமும் முற்றிலும் நீங்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:கோடி கடன் தீர்க்கும் செவ்வாய்க்கிழமை பரிகாரம்

சிவபெருமானையும் மகாலட்சுமி தாயாரையும் இந்த முறையில் முழுமனதோடு தொடர்ச்சியாக 48 நாட்கள் வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த தரித்திரம் முற்றிலும் நீங்குவதோடு ஐஸ்வரியம் பெருகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -