- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகோடி கடன் தீர்க்கும் செவ்வாய்க்கிழமை பரிகாரம்

கோடி கடன் தீர்க்கும் செவ்வாய்க்கிழமை பரிகாரம்

- Advertisement -

பொதுவாகவே செவ்வாய்க்கிழமை என்றால் அது முருக வழிபாட்டிற்கு உகந்த கிழமையாக தான் திகழ்கிறது. பலரும் முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள். அதோடு மட்டுமல்லாமல் செவ்வாய்க் கிழமையில் வரக்கூடிய ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் வழக்கமும் பலருக்கும் இருக்கும். அன்றைய தினம் என்பது வாராகி அம்மனுக்கும் உகந்த தினமாக தான் திகழ்கிறது. கடன் பிரச்சினை தீர்வதற்கு செவ்வாய்க்கிழமை அன்று வாராகி அம்மனுக்கு செய்ய வேண்டிய வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கோடி கடன் தீர்க்கும் பரிகாரம்

ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு விதமான கிரகங்களின் ஆதிக்கம் என்பது இருக்கும். அந்த கிரகங்களால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் தீர வேண்டும் என்றால் அந்த கிரகங்களின் ஆதிக்கம் இருக்கக்கூடிய நாட்களில் நாம் தெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். அப்பொழுது விரைவிலேயே அந்த கிரகங்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். அந்த வகையில் கடன் தொடர்பான பிரச்சனைக்கு காரண கர்த்தாவாக திகழக் கூடியவர் செவ்வாய் பகவான். செவ்வாய் பகவானுக்கு உரிய கிழமையாக திகழ்வது செவ்வாய்க்கிழமை. அதனால் செவ்வாய்க்கிழமை அன்று நாம் வாராஹி அம்மனை வழிபாடு செய்யும்பொழுது கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும்.

- Advertisement -

இந்த வழிபாட்டை நம்முடைய வீட்டிலேயே நாம் செய்யலாம். வீட்டில் வாராஹி அம்மனின் படம் இருக்கும் பட்சத்தில் வாராஹி அம்மனின் படத்திற்கு முன்பாக இந்த வழிபாட்டை நாம் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமை அன்று இரவு வரக்கூடிய செவ்வாய் ஹோரையான 8 மணியில் இருந்து 9 மணிக்குள் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை வீட்டில் வாராஹி அம்மனின் படம் இல்லை என்னும் பட்சத்தில் ஒரு அகல் விளக்கை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து அந்த தீபத்தை வாராகி அம்மனாக நினைத்து அதற்கு முன்பாக நாம் இந்த வழிபாட்டை செய்யலாம்.

இதற்கு நமக்கு ஒரு வெற்றிலை, குங்குமம் மற்றும் ஏலக்காய் இருந்தால் போதும். கிழியாத நல்ல வெற்றிலையாக ஒரு வெற்றிலையை எடுத்துக் கொள்ளுங்கள். அதை சுத்தமாக கழுவி ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ளுங்கள். இதை அப்படியே வாராகி அம்மனுக்கு முன்பாக வைக்க வேண்டும். பிறகு அந்த வெற்றிலையின் நடுப்பகுதியில் கோபுரம் போல் குங்குமத்தை கொட்ட வேண்டும். இந்த குங்குமமானது தாழம்பூ குங்குமமாக இருக்கும் பட்சத்தில் அதன் பலன் இன்னும் அதிகமாக இருக்கும்.

- Advertisement -

அடுத்ததாக உடையாத நல்ல நிலையில் இருக்கக்கூடிய ஒரு ஏலக்காயை எடுத்துக் கொள்ளுங்கள். அதை உங்களுடைய வலது கையில் வைத்துக்கொண்டு வாராகி அம்மனை முழுமனதோடு நினைத்து உங்களுடைய கடன் பிரச்சினை தீர வேண்டும், பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாக வேண்டும், பணவரவு அதிகரிக்க வேண்டும், வீண் செலவுகள் குறைய வேண்டும் என்று என்னென்ன வேண்டுதல் இருக்கிறதோ அவை அனைத்தையும் கூற வேண்டும். பிறகு அந்த ஏலக்காயை கோபுரமாக வைத்திருக்கும் குங்குமத்திற்கு உள்ளே வைத்து விட வேண்டும். ஏலக்காய் வெளியே தெரியக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

அன்று இரவு முழுவதும் இந்த குங்குமம், ஏலக்காய், வெற்றிலை அனைத்தும் வாராகி அம்மனின் படத்திற்கு முன்பாகவே இருக்கட்டும். மறுநாள் காலையில் புதன் ஹோரையில் அந்த ஏலக்காயை எடுத்து நுணுக்கி சாம்பிராணியோடு கலந்து வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் போட வேண்டும். குங்குமத்தை நாம் எப்பொழுது போல் அன்றாட நெற்றியில் வைத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே:பணம் சேர ஏகாதசி பரிகாரம்

இந்த முறையில் வாராகி அம்மனை நினைத்து நாம் செய்யக்கூடிய இந்த ஒரு வழிபாடு நம்முடைய கடன் பிரச்சனையையும் வீண் செலவையும் குறைத்து நிறைவான பண வரவை பெற்றுத்தரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்