
கடன் சுமை என்பது காலை சுற்றிய பாம்பு போன்றது. அது நம்மை பாடாய் படுத்தி கழுத்தை இறுக்குவது போல இறுக்கி நிலைகுலைய செய்துவிடும். ஏதோ ஒரு அவசர தேவைக்கு கடன் வாங்கி கடைசியில் கடனிலேயே குடும்பம் நடத்தும் படியாக நம்மை பிரச்சினைக்குள் தள்ளி விட்டுவிடும். என்ன செய்தாவது முண்டியடித்து முன்னேறி விடலாம் என்றாலும், முடியாமல் போகும். இந்த தீரா கடன் சுமை தீருவதற்கு வீட்டில் பீரோ இருந்தால் இதை செய்து பாருங்கள், பண வரவு அதிகரிக்கும். இதைப் பற்றிய சிறு தொகுப்பினை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம்.
வாஸ்து ரீதியான பிரச்சினைகளும், கடன் சுமைக்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும். சரியான வாஸ்து இல்லாமல் பிரச்சனைக்குரிய அமைப்பாக உங்கள் வீடு கட்டப்பட்டு இருந்தால் கண்டிப்பாக கடன் சுமை உங்களை உலுக்கி எடுக்கும். எவ்வளவு முயற்சி செய்தாலும், இந்த சுமையிலிருந்து உங்களை மீள விடாமல் கஷ்டப்படுத்தும். கடன் சுமையை ஏற்படுத்தக் கூடிய வாஸ்து பிரச்சனைகளை சரி செய்ய வீட்டில் இருக்கும் பீரோவின் மீது வடக்கு பார்த்தவாறு ஒரு குபேர பொம்மையை வாங்கி வையுங்கள்.
எந்த உலோக பொம்மைகளாக இருந்தாலும் பரவாயில்லை, இரும்பினால் ஆனா பொம்மையை மட்டும் வாங்கி வைக்காதீர்கள். மற்ற மெட்டல் அல்லது பிளாஸ்டிக் பொம்மையை கூட நீங்கள் வாங்கி வைக்கலாம். முடிந்தால் வெள்ளியால் ஆன குபேர பொம்மையை வாங்கி வையுங்கள், இது இன்னும் நல்ல பலன் தரும்.
பீரோவின் மீது வடக்கு புறம் பார்த்தபடி பொம்மையை ஒரு பட்டுத் துணியின் மீது அமர்த்தி வையுங்கள். வடக்கு என்பது குபேரன் திசை என்பதால் வடக்கு பார்த்தபடி வைக்கும் பொழுது குபேர அருள் உங்களுக்கு கிடைக்கப் பெறும். இது வாஸ்து ரீதியான பிரச்சனைகளுக்கு மிக எளிய பரிகாரமாக இருக்கும். வாஸ்துவினால் உங்களுக்கு வரக்கூடிய கடன் சுமையை குறைக்கும், பணவரத்தை அதிகரித்து உங்கள் உழைப்பிற்கு உரிய அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.
சிலர் என்னதான் கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும், உழைத்த பணம் கையில் தாங்காமல் கடனாளியாக இருப்பார். உழைப்பு இருந்தும் நம்மால் கடன் இல்லாமல் இருக்க முடியவில்லை என்று புலம்புபவர்கள், பீரோவிற்கு அடியில் கீழே ஒரு பொட்டலத்தில் கொஞ்சம் படிகார கட்டிகளை தூளாக்கி போட்டு மடித்து யாருடைய கண்ணிலும் படாத படி வையுங்கள். படிகார கல் கண் திருஷ்டிகளையும், கண்ணேறுகளையும், ஏவல்களையும் ஈர்க்கக்கூடிய தன்மை கொண்டது. இது பீரோவிற்கு அடியில் வைப்பதால் பண ரீதியான கஷ்டங்கள் குறையும்.
இதையும் படிக்கலாமே:
தடையில்லாத நிரந்தர வருமானத்திற்கு பரிகாரம்
பெரிய கட்டி படிகாரம் ஒன்றை கருப்பு நூலில் கட்டி தலைவாசலில் மேலே மாட்டி வையுங்கள். இது தீய அதிர்வலைகளை உங்கள் வீட்டிற்குள் வராமல் தடுக்கும் கவசமாக செயல்படும். வீட்டை சுற்றிலும் தண்ணீர் தேக்கம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். நீர்க்கசிவு வீட்டில் இருக்கக் கூடாது, இதுவும் கடன் சுமையை அதிகரிக்கும் விதிகளாகும். பீரோவிற்குள் கொஞ்சம் பச்சை கற்பூரத்தை நுணுக்கி, அதனுடன் ஏலக்காய், கிராம்பு, பட்டை ஆகியவற்றை சேர்த்து ஒரு மூட்டையாக கட்டி பணம் வைக்கும் இடத்தில் வையுங்கள். இது லட்சுமி கடாட்சத்தை உண்டு பண்ணும். லட்சுமி அருள் இருந்தால் லட்ச லட்சமாய் கடன் இருந்தாலும் அது நம்மை விட்டு நீங்கும். உழைத்த வீண் விரயமாகாமல் நம்மிடம் தங்கும்.