- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதடையில்லாத நிரந்தர வருமானத்திற்கு பரிகாரம்

தடையில்லாத நிரந்தர வருமானத்திற்கு பரிகாரம்

- Advertisement -

குருவின் நட்சத்திரத்தில் வந்திருக்கக்கூடிய பௌர்ணமி திதி இன்று. இந்த நாளில், இந்த பிரபஞ்சத்திடம் நீங்கள் எந்த வேண்டுதலை நம்பிக்கையோடு வைத்தாலும் அந்த வேண்டுதல் உடனடியாக நிறைவேறும். குரு என்பவர் நம்முடைய வருமானத்தை பெருக்கிக் கொடுப்பவர். அந்த வகையில் வருமானம் இல்லாமல் கஷ்டப்படுபவர்கள், வருமானம் வந்தும் செலவை கட்டுப்படுத்த முடியாமல் கஷ்டப்படுபவர்கள்.

உங்களுடைய தேவைக்கு ஏற்ப வருமானத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள், நிரந்தர வருமானத்தை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள், இன்று செய்ய வேண்டிய எளிமையான ஆன்மீகம் செல்லும் ஒரு தாந்திரீக பரிகாரம் இதோ உங்களுக்காக.

- Advertisement -

வருமானம் பெருக பரிகாரம்

ஒட்டுமொத்தமாக நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும்தான் இதை செய்ய வேண்டும். நம்பிக்கை இல்லாமல் நாம் செய்யக்கூடிய பரிகாரத்திற்கு இந்த பிரபஞ்சம் செவி சாய்க்காது. நாளைக்கே நீ கோடீஸ்வரன் ஆகி விடுவாய், நாளைக்கு நீ சொந்த வீடு கட்டி விடுவாய் என்று யாராவது சொன்னால், நாம என்ன செய்வோம். எனக்கா சொந்த வீடு கிடைக்கப் போகிறது, எனக்கா ஒரு கோடி ரூபாய் கிடைக்கப் போகிறது அட போப்பா, அப்படி சொல்லிட்டு போயிருவோம். ஆனா அது ரொம்ப தவறு. எனக்கு சொந்த வீடு நாளைக்கு கிடைக்குமா, கிடைக்கும் என்று நம்புபவர்களுக்கு, நிச்சயம் கிடைக்கும்.

சந்தேகமாக ஒவ்வொரு விஷயத்தையும் நாம் நம்பிக்கை இல்லாமல் பேசுவதால் இந்த பிரபஞ்சம் நமக்கு எதையுமே செய்து தருவது கிடையாது. சரி இன்று நம்பிக்கையோடு வருமானத்தை பெருக்கிக் கொள்ள இந்த பரிகாரத்தை செய்து பார்ப்போமா. வழக்கம் போல தான் பௌர்ணமி பரிகாரம் என்றால் நிலவு வெளிச்சத்தில் செய்ய வேண்டும். இரவு ஆறு மணிக்கு மேல் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம்.

- Advertisement -

3 கிராம்பை உள்ளங்கைகளில் வைத்துக்கொள்ளுங்கள், கிராம்பின் மேலே இருக்கக்கூடிய மொக்கு இருக்க வேண்டும் கிராம்பு உடைந்து இருக்கக் கூடாது. ‘I am a money magnet நான் பணத்தை ஈற்கின்றேன். எனக்கான வருமானம் அதிகரித்து விட்டது. ஒரு லட்ச ரூபாய் சம்பளம் எனக்கு கிடைத்து விட்டது சந்தோஷமாக வாழ்கின்றேன்’ என்று நல்லபடியாக அம்மனை வேண்டி நினைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுடைய வேண்டுதலையும் பௌர்ணமி நிலாவின் நேர்மறை ஆற்றலையும் இந்த பிரபஞ்சத்தின் நேர்மறை ஆற்றலையும் உள்ளங்கைகளில் இருக்கும் கிராம்பு ஈர்த்துக் கொள்ளும். உள்ளங்கைகளில் கிராம்பை வைத்து கைகளை மூடிக்கொள்ள வேண்டாம். திறந்தபடியே கிராம்பை வையுங்கள்.

- Advertisement -

இந்த மூன்று கிராம்பை இந்த மாதம் முழுவதும், நீங்கள் உங்கள் உடனே வைத்துக் கொண்டு உங்களுடைய வேலையை செய்யுங்கள். ஒரு வெள்ளை பேப்பரில் மடித்து பாக்கெட்டில் அல்லது பர்ஸில் வைத்துக் கொள்ளலாம். ஒரு நல்ல பண ஈர்ப்பு விதி இருக்கும். நிச்சயமாக இந்த மாதத்தில் உங்களுடைய பண கஷ்டம் தீர்ந்து வருமானம் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் நிறைய தேடி வரும். அதை பயன்படுத்திக் கொண்டீர்கள் என்றால் நீங்கள் நிச்சயம் வாழ்க்கையில் முன்னேறிவிடலாம்.

இதையும் படிக்கலாமே: புரட்டாசி மாதம் பணம் தரும் மந்திரம்

மீண்டும் ஒருமுறைபதிவு செய்து கொள்வோம். நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும்தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். அடுத்த பௌர்ணமி திதி வரும்போது பழைய கிராம்பை எடுத்து ஒரு செடிக்கு கீழே போட்டால் கூட அந்தச் செடி இந்த கிராம்பில் இருக்கும் நேர்மறை ஆற்றலை ஈர்த்துக் கொண்டு செழிப்பாக வளரும். அந்த செடியில் பூக்கக்கூடிய பூ கூட பிரகாசமாக இருக்கும். இது நிச்சயம் உண்மையான விஷயம். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறவும்.

சற்று முன்