- Advertisement -
- Advertisement -

கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்று ராமாயணத்தில் கூறப்பட்டிருக்கிறது. இலங்கை ராவணனுக்கு எந்தளவுக்கு மன உளைச்சல் ஏற்பட்டதோ அதே அளவிற்கு கடன் வாங்குபவர்களுக்கும் மன உளைச்சல் ஏற்படும் என்பதுதான் இதன் அர்த்தம். அதனால்தான் அன்றைய காலத்தில் இருக்கும் பணத்தை வைத்து செலவு செய்தார்கள். வரவுக்கு மிஞ்சிய செலவை யாரும் செய்தது கிடையாது. அதனால் தான் அன்றைய காலத்தில் கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழ முடிந்தது. இன்றைய காலத்தில் அதற்கு மாறாக கடன் இல்லாத வீடு இல்லாத சூழ்நிலை வந்துவிட்டது. இந்த கடன் பிரச்சனையை தீர்வதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக கடன் பிரச்சனை ஏற்பட்டு விட்டது என்றால் அதில் இருந்து வெளியே வருவதற்கு தான் நாம் முயற்சி செய்ய வேண்டும். ஆனால் பலருக்கும் அந்த கடனை தீர்ப்பதற்காகவே கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வந்து கொண்டு இருக்கும். அதனால் அவர்களுக்கு பல மடங்கு கடன் அதிகரித்துக் கொண்டே செல்லும். இந்த கடன் அதிகரிப்பால் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியாமல் வீட்டிலும் வெளியிலும் மிகப்பெரிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இவை அனைத்தும் நீக்குவதற்கு நமக்கு உதவி செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாட்டை பார்ப்போம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை யாருக்கு கடன் பிரச்சினை இருக்கிறதோ அவர்கள் தான் செய்ய வேண்டும். அவர்கள் பிறந்த கிழமை அன்று அவர்களுடைய வீடு இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் காவல் தெய்வம் இருக்கும். அந்த காவல் தெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டும். இவ்வாறு செல்லும் நேரம் எமகண்ட நேரம் ஆக இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது எமகண்ட நேரத்தில் அருகில் இருக்கும் காவல் தெய்வ கோவிலுக்கு பிறந்த கிழமை அன்று செல்ல வேண்டும்.

அந்த கோவிலுக்கு சென்று அந்த தெய்வத்திற்கு நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபமேற்றி வழிபாடு செய்ய வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் காவல் தெய்வம் என்று இருக்கும். அந்த காவல் தெய்வம் நமக்கு பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்க கூடிய தெய்வமாகவே திகழ்கிறது. அப்படிப்பட்ட காவல் தெய்வத்திடம் நாம் இந்த முறையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் அந்த காவல் தெய்வமானது கடன் பிரச்சினை எதுவும் வராமல் பார்த்துக் கொள்வதோடு நமக்கு ஏற்பட்டிருக்கிற கடன் கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

மேலும் நல்லெண்ணையில் தீபம் ஏற்றுவதால் சனிபகவானுக்குரிய ப்ரீத்தியும் இதில் அடங்கி இருக்கிறது. கஷ்ட காலம் தீர்வதற்கு சனி பகவானுக்குரிய எண்ணையை ஊற்றி காவல் தெய்வத்திற்கு தீபமேற்றி வழிபாடு செய்கிறோம். இதன் மூலம் நமக்கு கடன் மட்டுமல்லாமல் வேறு ஏதாவது பிரச்சினைகள் இருந்தாலும் அந்த பிரச்சனைகளும் தீரும்.

இதையும் படிக்கலாமே சுக்கிர வளர்பிறை சஷ்டி வழிபாடு

மிகவும் எளிமையான இந்த தீப வழிபாட்டை முழு மனதுடன் சரியான நேரத்தில் சரியான கிழமையில் செய்து நல்ல பலனை பெறலாம்.

- Advertisement -