- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசுக்கிர வளர்பிறை சஷ்டி வழிபாடு

சுக்கிர வளர்பிறை சஷ்டி வழிபாடு

- Advertisement -

வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமி தாயாருக்கும், சுக்கிர பகவானுக்கும் உகந்த கிழமையாக திகழ்கிறது. பலரும் வெள்ளிக்கிழமை அன்று பூஜை செய்வதன் மூலம் செல்வ செழிப்புடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்ட வெள்ளிக்கிழமை அன்று முருகப் பெருமானுக்கு உகந்த வளர்பிறை சஷ்டி திதி வருகிறது. அதனால் இதற்கு இன்னும் பல மடங்கு பலன் அதிகமாகவே இருக்கும். அதோடு மட்டுமல்லாமல் நாளைய தினம் ஆனி திருமஞ்சனமும் கூட அதனால் சிவபெருமானின் அருளும் நமக்கு எளிதில் கிடைக்கும். இப்படி அனைவரின் அருளையும் பெறுவதற்கு நாளைய தினம் செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக சஷ்டி என்பது குழந்தை செல்வம் இல்லாதவர்கள் விரதம் இருக்கும் முறை என்றுதான் அனைவரும் கூறுவார்கள். ஆனால் சஷ்டி திதியில் நாம் எதை நினைத்து முருகப் பெருமானை வழிபாடு செய்தாலும் அந்த வழிபாட்டிற்கு நமக்கு முழுமையான பலன் கிடைக்கும் என்றுதான் கூற வேண்டும். அப்படிப்பட்ட சஷ்டியானது வெள்ளிக்கிழமையுடன் சேர்ந்து வருவதால் அதற்கு பல மடங்கு அற்புத ஆற்றல் இருக்கும்.

- Advertisement -

இந்த வழிபாட்டை நாளைய தினம் பிரம்ம முகூர்த்த வேளையிலோ அல்லது காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளோ செய்ய வேண்டும். வீட்டில் இருக்கக்கூடிய முருகனின் சிலைக்கோ, வேல் இருக்கும் பட்சத்தில் வேலிற்கோ தங்களால் இயன்ற அபிஷேகத்தை செய்து முருகனுக்கு ஆறு எண்ணிக்கையில் சந்தனம் குங்குமம் வைத்து செவ்வரளி பூக்கள் மற்றும் மல்லிகை பூக்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

பிறகு முருக பெருமானுக்கு நெய் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு ஏதாவது எளிமையான நெய்வேத்தியத்தையும் வைக்க வேண்டும். பிறகு கிழக்கு பார்த்த வாறு அமர்ந்து கொண்டு ஒரு சிவப்பு நிற துணியை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த துணி சதுரமாக இருக்கட்டும். அதில் ஆறு ஒரு ரூபாய் நாணயங்களை வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு சந்தன வில்லையை அதில் வைத்து அதை மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்பொழுது இந்த மூட்டையை உங்களுடைய கையில் வைத்துக்கொண்டு சிவபெருமான், முருகப்பெருமான், மகாலட்சுமி, சுக்கிர பகவான் என்று இவர்கள் அனைவரையும் மனதார நினைத்துக் கொண்டு நீண்ட நாட்களாக தடைப்பட்டு இருக்க இருக்கின்ற காரியம் எதுவோ அது விரைவிலேயே நடைபெற வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

இப்படி வேண்டி முடித்த பிறகு முருகப்பெருமானின் அதிசக்தி வாய்ந்த மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

மந்திரம்

ஓம் சௌம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ

இப்படி உச்சரித்து முடித்த பிறகு இந்த மூட்டையை அப்படியே பூஜை அறையில் வைத்து விடுங்கள். வேண்டுதல் நிறைவேறிய பிறகு இந்த மூட்டையை அப்படியே எடுத்துக் கொண்டு போய் அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலய உண்டியலில் போட்டு விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே கஷ்டத்திலிருந்து நம்மை பாதுகாக்கும் வாராஹி மந்திரம்

மிகவும் எளிமையான அதேசமயம் அதிசக்தி வாய்ந்த முருகன் வழிபாட்டை முழு மனதுடன் செய்து நல்ல பலனை பெறலாம்.

சற்று முன்