- Advertisement -
- Advertisement -

எந்த பிரச்சனைகளையும் சமாளித்து விடலாம், ஆனால் இந்த கடன் தொல்லையை சமாளிக்க முடியாமல் தான் பலரும் திணறுகிறோம். கடன் பிரச்சனையை நமக்கு கொடுக்கக் கூடியவர் நவகிரகங்களில் கேது பகவான் ஆவார். இவரை சாந்தப்படுத்தி கடன் பிரச்சனையிலிருந்து எப்படி நாம் மீள முடியும்? என்னும் ஆன்மீகம் சார்ந்த ரகசியத்தை தொடர்ந்து இந்த பதிவில் காண்போம் வாருங்கள்.

கடன் பிரச்சனையை உண்டாக்கக்கூடிய கேது பகவான் நம் ஜாதகத்தில் உட்கார்ந்து கொண்டு நம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறார். வேண்டாம் வேண்டாம் என்றாலும் மீண்டும் மீண்டும் கடனை வாங்க வைத்து நம்மை பார்த்து நகைப்பதில் இவர் வல்லவர். இவரை சரி கட்டி விட்டால் சுலபமாக கடன் பிரச்சனையிலிருந்து மீண்டு விடலாம் என்பது சாஸ்திர வழிமுறை ஆகும்.

- Advertisement -

எதிர்பாராத நேரத்தில் சிக்கலில் மாட்டிவிட்டு கடன் என்னும் அஸ்திரத்தை நம் மீது எரியும் கேது பகவானுக்கு உரிய தானியம் கொள்ளு! நம் உணவிலும் அடிக்கடி இந்த கொள்ளு தானியத்தை சேர்த்து சமைத்து வந்தால் கேது பகவானை நம் வழிக்கு கொண்டு வந்து விடலாம். கொள்ளு என்பது சிறுதானியங்களில் ஒன்று. ஏராளமான சத்துக்கள் நிறைந்த இந்த கொள்ளு தானம் செய்வதன் மூலம் அளப்பரிய நன்மைகள் நமக்கு உண்டாகும். தீராத கடன்கள் தீரவும் கொள்ளு தானம் செய்யலாம்.

16 நாட்கள் தொடர்ந்து அதிகாலையில் எழுந்து சூரியன் உதயம் ஆகும் நேரத்திற்குள் குளித்து முடித்து தயாராகி கையில் கொஞ்சம் கொள்ளு தானியத்தை வைத்துக் கொண்டு சூரியனை பார்த்து நமஸ்கரித்து பின் 27 முறை அந்த தானியத்தை நம் தலையை வலமிருந்து இடமாக சுற்றிக் கொள்ள வேண்டும். இது நம் கிரக தோஷங்களை நீக்கும் எளிய பரிகாரமாகும். கேது பகவானால் வரக்கூடிய துன்பங்கள் நீங்கி கேதுவின் அருள் கிடைக்கும் அற்புத பரிகாரமும் ஆகும்.

- Advertisement -

பின் அந்த கொள்ளு தானியங்களை பறவைகளுக்கு தானம் செய்ய வேண்டும். அதுபோல சூரியனின் வாகனமாக இருக்கக்கூடிய குதிரைகளுக்கும் கொள்ளு தானம் செய்யலாம். இந்த காலத்தில் குதிரைகளை எங்கு தேடி நாம் அலைவது? அதனால் பறவைகளுக்கு நீங்கள் இறையாக தானம் செய்யுங்கள். அப்படி உங்கள் அருகாமையில் குதிரைகள் இருந்தால், நிச்சயம் அவற்றுக்கு கொள்ளு தானம் செய்யுங்கள் கடன் தொல்லை தீரும்.

மேலும் கொள்ளு, சத்துக்கள் நிறைந்துள்ள அற்புதமான சிறு தானியம். இதனை ஏழை எளியவர்களுக்கு தானம் செய்வதன் மூலமும் கேதுவின் அருள் உங்களுக்கு கிடைக்கும். நவகிரக சந்நிதிக்கு சென்று கேது பகவானுக்கு விளக்கு ஏற்றி வைத்து, மனதார பிரார்த்தனை செய்து கொண்டு கொள்ளு தானத்தை ஏழை, எளியவர்களுக்கு மாதம் ஒருமுறையாவது செய்து வாருங்கள்.

இதையும் படிக்கலாமே:
3-3-2025 வியாழக்கிழமை சஷ்டி வழிபாடு

ஜாதகத்தில் கேதுவால் பிரச்சனைகள் இருப்பின் நீங்கள் கோவில்களுக்கு இந்த கொள்ளு தானியங்களை தானம் செய்யலாம். ஒரு கிலோ, இரண்டு கிலோ என்று உங்களால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு வாங்கி கொடுத்து தானம் செய்யுங்கள். அவர்கள் அதனை சுண்டல் செய்து சுவாமிக்கு படைத்து, அங்கு வரும் பக்தர்களுக்கு கொடுப்பார்கள். நாமும் கொள்ளு சுண்டல் தயார் செய்து கோவிலுக்கு கொண்டு சென்று அங்கு வரும் பக்தர்களுக்கு தானம் செய்யலாம். இம்முறைகளில் எல்லாம் நீங்கள் கொள்ளு தானம் செய்தால் விரைவிலேயே உங்கள் கடன் எல்லாம் அடைந்து விடும் என்பது நம்பிக்கை.

- Advertisement -