
சில பேரால், வாழ்நாளில் தலை தூக்கவே முடியாத அளவிற்கு கடன் சுமை இருக்கும். அந்த கடனை அடைப்பதற்கு வழியும் தெரியாது. சொத்து இருந்தால், அதை விற்று கடனை அடைக்கலாம். நகை இருந்தால் அதை விற்று கடனை அடைக்கலாம். ஏதாவது ஒரு வழி கிடைத்தாலும், கடனை அடைக்க அதை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். சில பேர் கடனை வாங்கிவிட்டு, கையில் எதுவும் இல்லாமல், நிற்கதியாக நிற்பார்கள்.
எல்லாம் நஷ்டமாக இருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் சில பேர் எல்லாம் தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைக்குக் கூட சென்று விடுவார்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் நின்றிருந்தாலும் சரி, கடன் என்னும் புதைக்குழிக்குள் நீங்கள் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்தால் அதிலிருந்து உங்களை கை தூக்கி விட இந்த பரிகாரம் நிச்சயம் கை கொடுக்கும்.
இந்த பரிகாரத்தை தினமும், ஒருமுறை செய்தாலும் தவறு கிடையாது. இந்த பரிகாரத்திற்கு மா இலை தேவை. உப்பு தண்ணீர் தேவை அவ்வளவுதான். உங்களுடைய வீட்டிலேயே வரவேற்பறையில் கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு, முதலில் ஒரு அகலமான கிண்ணத்தில் அல்லது ஒரு தட்டில் நல்ல தண்ணீர் ஊற்றி, அதில் ஒரு கைப்பிடி கல்லுப்பு போட்டு கரைத்து உப்பு தண்ணீரை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு மாயிலையில் ஸ்கெட்ச் பேனாவில் உங்களுடைய கடன் தொகையை எழுதி, அந்த கடன் சீக்கிரம் அடைய வேண்டும் என்று எழுதுங்கள். “5 லட்ச ரூபாய் கடன் சீக்கிரம் அடைய வேண்டும்” இப்படி உங்களுக்கு எவ்வளவு கடன் பிரச்சனை உள்ளதோ அதை எழுதிக் கொள்ளுங்கள். அந்த இலையை கையில் வைத்துக் கொண்டு இந்த பிரபஞ்சத்திடம் உங்கள் கடன் அடைந்தே தீர வேண்டும் என்று முழு நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்யுங்கள்.
பிறகு ஒரு மெழுகுவர்த்தியை கொளுத்தி வைத்தாலும் சரி, அல்லது அகல் விளக்கை கொளுத்தி வைத்தாலும் சரி, நெருப்பில் இந்த மாயிலையை பொசுக்கி, அந்த சாம்பலை, உப்பு நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் உப்பு தண்ணீரில் போட்டு கரைத்து விட வேண்டும். இந்த தண்ணீரை கால் படாத இடத்தில் மண் பாங்கான இடத்தில் கொட்டி விட வேண்டும். இவ்வளவுதான் பரிகாரம்.
வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் இதை செய்தாலும் சரி தவறு கிடையாது. தினம் இந்த பரிகாரத்தை செய்தாலும் தவறு கிடையாது. உங்களுடைய கடன் சுமை எந்த அளவுக்கு உங்களை வாட்டி வதைக்கிறது. அந்த அளவுக்கு இந்த பரிகாரத்தை செய்ய தொடங்குங்கள். கடனை அடைக்க வழியே தெரியாமல் தத்தளித்து கொண்டிருப்பவர்களுக்கு கூட அந்த கடனை அடைக்க நிச்சயமாக ஒரு வழி கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே: தீய சக்திகள் அணுகாமல் இருக்க
தினமும் ஒரு மாயிலையை மட்டும் புதுசாக எடுத்து வாருங்கள். நீல நிற ஸ்கெட்ச் பேனா அல்லது மஞ்சள் நில ஸ்கெட்ச் பேனா, பிங்க் நிற ஸ்கெட்ச் பேனா எது வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாம். கருப்பு நிறம் மட்டும் பயன்படுத்த வேண்டாம். இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவை நம்பிக்கையோடு செய்யும் பட்சத்தில் 48 நாளில் உங்கள் கடன் பிரச்சனைக்கு இந்த பிரபஞ்சம் ஒரு தீர்வினை காட்டி தரும்.