
இன்று செவ்வாய் பிரதோஷம். 15.10.2024 செவ்வாய்க்கிழமை வரக்கூடிய இந்த பிரதோஷ நாளில் சிவன் வழிபாடு எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவு நரசிம்மர் வழிபாட்டிற்கும் முக்கியத்துவம் இருக்கிறது. ஒருவருடைய வாழ்க்கையில் எல்லாமே நஷ்டமாக செல்கிறது, திருமண வாழ்க்கை சிறக்கவில்லை, வேலை சிறப்பாக இல்லை, தொழிலில் லாபம் கிடைக்கவில்லை, நோய்நொடி பிரச்சனை, கடன் தொல்லை, இப்படி அனைத்து விதமான பிரச்சனைகளிலும் சிக்கி தவிக்க கூடிய நபர், இன்றைய தினம் நரசிம்மரை, பிரதோஷ நேரத்தில் வழிபாடு செய்தால் அத்தனை கஷ்டங்களும் தீரும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.
இன்றைய தினம் பிரதோஷ நேரத்தில் நரசிம்மர் வழிபாட்டை எப்படி செய்யலாம் ஆன்மீகம் சார்ந்த பதிவு தொடர்ந்து படித்து தெரிந்து. இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை பிரதோஷ நேரம். இந்த நேரத்தில் நரசிம்மர் கோவிலிலும் அபிஷேக ஆராதனைகள் நடக்கும். உங்கள் வீட்டு பக்கத்தில் நரசிம்மர் கோவில் இருந்தால் அவருக்கு செய்யக்கூடிய அபிஷேகத்தை கண்குளிர பாருங்கள்.
உங்களால் முடிந்த அபிஷேக பொருட்களை வாங்கிக் கொடுங்கள். குறிப்பாக நாளைய தினம் நரசிம்மருக்கு அபிஷேகத்திற்கு தேன், பசும்பால், தயிர், பஞ்சாமிர்தம் செய்ய பழங்கள் இவைகளை வாங்கி தானம் கொடுத்தால் நல்லது. அபிஷேகத்திற்கு தேவையான உதவிகளை குருக்களுக்கு செய்யலாம். இந்த பிரதோஷ நேரத்தில் நரசிம்மர் சன்னிதானத்தில் அமர்ந்து, நீங்கள் என்ன வேண்டுதல் வைத்தாலும் அது உடனே படிக்கும்.
கோவிலுக்கு செல்லும்போது, உங்கள் கையால் பானகம் தயார் செய்து எடுத்துச் செல்லுங்கள். நரசிம்மருக்கு பானகத்தை நெய்வேத்தியம் செய்துவிட்டு சின்ன சின்ன கப்பில் அந்த பானகத்தை ஊற்றி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உங்கள் கையால் தானமாக கொடுத்தால் உங்கள் கடன் சுமை உடனே குறையும்.
செவ்வாய்க்கிழமை வரும் பிரதோஷ நாளில் பானகம் தானம் செய்வது அற்புதமான பலனை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக உக்கிரமாக இருக்கும் உங்களுடைய கடனை தணிக்க இந்த பரிகாரம் கை கொடுக்கும் தவறாமல் செஞ்சிருங்க.
மற்ற தெய்வங்களுக்கு எல்லாம் 21 நாள் வழிபாடு செய்ய வேண்டும். 48 நாட்கள் வழிபாடு செய்ய வேண்டும் என்ற கணக்கு இருக்கிறது. நரசிம்மருக்கு நாள் கணக்கே கிடையாது. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உடனடியாக அருள் பாதிக்கக்கூடிய ஒரே கடவுள் நரசிம்மர் தான். ஏனென்றால் அவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்.
அதேபோல மற்ற தெய்வ வழிபாட்டை காட்டிலும், உக்கிர தெய்வ வழிபாடு நமக்கு உடனடியாக பலனை தரும் என்பதும் நம்முடைய சாஸ்திரத்தின் நம்பிக்கையாக இருக்கிறது. உங்களுடைய வாழ்க்கையில் அதிகப்படியான கடன் பிரச்சனை இருக்கிறது, தொழிலை நடத்திச் செல்லவே முடியவில்லை, வாங்கிய கடனுக்கு வட்டிக்கு மேல் வட்டி, குட்டி போட்டு கழுத்தை நெரிக்கிறது. வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் தவித்து வருகிறீர்கள் என்றால் நாளைய தினம் நீங்கள் கட்டாயம் நரசிம்மர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள்.
எங்களுக்கு வீட்டு பக்கத்தில் நரசிம்மர் கோவில் இல்லை என்றால் நாங்கள் என்ன செய்வது. வீட்டிலேயே நரசிம்மர் திரு உருவப்படம் இருந்தால் அந்த படத்திற்கு முன்பு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு 1 டம்ளர் பானகம் நெய்வேத்தியம் வைத்து வழிபாட்டை மேற்கொள்ளலாம். பானகத்தை வீட்டில் இருப்பவர்கள் பிரசாதமாக குடிக்கலாம்.
இதையும் படிக்கலாமே: சகல நன்மைகளையும் வசியம் செய்யும் மந்திரம்
அக்கம் பக்கம் வீட்டில் இருப்பவர்களுக்கு முடிந்தால் இந்த பானகத்தை பிரசாதமாக கொடுக்கலாம். வீட்டில் இருக்கும் நரசிம்மருக்கு முன்பாகவே உங்கள் கடன் சுமை தீர வேண்டும் என்று பிரார்த்தனை வைத்தாலும் உங்களுடைய வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும். நரசிம்மரின் திருவுருவப்படம் இல்லை என்றாலும், விளக்கு ஏற்றி தீபச்சுடரில் நரசிம்மரை ஆவாகனம் செய்து, செவ்வாய்க்கிழமை பிரதோஷ நேரத்தில் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். நிச்சயம் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.